அரசியல்

ஆந்திராவில் ஜெகன் ஜெயிக்க காரணமான 9 வாக்குறுதிகள் என்னென்ன தெரியுமா ?

கட்சி தொடங்கிய பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே ஆந்திர மாநில முதல்வர் பதவியை அலங்கரிக்க இருக்கிறார் ஜெகன்மோகன். அவரின் வெற்றிக்கு அவரது 9 முக்கிய வாக்குறுதிகளே காரணம். 

ஆந்திராவில் ஜெகன் ஜெயிக்க காரணமான 9 வாக்குறுதிகள் என்னென்ன தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. அதில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமயிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.இதையடுத்து ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்றார்.

ஆந்திராவில் ஜெகன் ஜெயிக்க காரணமான 9 வாக்குறுதிகள் என்னென்ன தெரியுமா ?

தேர்தல் பிரச்சாரத்தின் போது நவரத்தின வாக்குறுதிகள் என்ற 9 வாக்குறுதிகளை முன்னிறுத்தி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது. அதுவே இந்த பெரு வெற்றியை ஜெகன்மோகனுக்குப் பெற்றுத்தந்துள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த 9 வாக்குறுதிகள் :

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். மேலும், விவசாயிகளுக்கு ரூ.50,000 நிதியுதவி மற்றும் இலவச போர்வெல் வழங்கப்படும்.

கட்டணம் செலுத்துவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும்.

அனைத்து மருத்துவ செலவும் அரசாங்கத்தால் ஏற்கப்படும். 1000 ரூபாய்க்கு மேல் எந்த மருத்துவ மருத்துவ சிகிச்சையாக இருந்தாலும் ஆரோக்கியஸ்ரீ திட்டம் பொருந்தும்.

பொலாவரம் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த திட்டத்தின் கீழ், லட்சக் கணக்கான குடும்பங்கள் பயனடைவார்கள்.

மாநில முழுவதும் மதுபான விற்பனை தடை செய்யப்படும்.

முதியோர் உதவித்தொகை 2000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தப்படும்.அதே போல் ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பை 65லிருந்து 60 ஆக குறைக்கப்படும்.

இந்த ஐந்தாண்டில் 25 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும்

தள்ளுபடிகூட்டுறவு சங்கங்களில் பெண்கள் வாங்கிய அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். அதோடு வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் அனைத்து தாய்மார்களுக்கும் 15,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

ஜெகன்மோகனின் இந்த 9 வாக்குறுதிகளே கடந்த 5 ஆண்டுகளாக முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, அரியணையில் அமர கைகொடுத்தது. எனவே, இந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories