அரசியல்

ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி : மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து !

ஆந்திர மாநில முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்றார்.

ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி : மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் இரு தேர்தல்களிலுமே ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் 151 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்றார். பதவியேற்பு விழா விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இன்று பகல் 12 மணிக்கு தொடங்கியது. ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளுநர் நரசிம்மன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தி.மு.க தலைவர் ஸ்டாலினும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். கலைஞரின் புத்தகத்தையும் பரிசாக வழங்கினார் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories