அரசியல்

“அற்புதமான கூட்டணியால் தமிழகத்தில் பா.ஜ.க-வின் அடிச்சுவடே இல்லாமல் போனது” : கே.எஸ்.அழகிரி

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகளின் அடிச்சுவடே இல்லாமல் போய்விட்டது எனத் தெரிவித்துள்ளார் கே.எஸ்.அழகிரி.

“அற்புதமான கூட்டணியால் தமிழகத்தில் பா.ஜ.க-வின் அடிச்சுவடே இல்லாமல் போனது” : கே.எஸ்.அழகிரி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. ஆனால், நாடு முழுவதும் 302 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளில் தேனியை தவிர்த்து 38 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்த பா.ஜ.க இந்தத் தேர்தலில் அதையும் இழந்துள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

“உலகம் முழுவதும் வலதுசாரிகளுக்கு வாக்களிக்கும் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் வலதுசாரிகள் வெற்றிபெற்று வருகின்றனர். தவறான புரிதல் காரணமாக வட மாநிலத்தவர் பா.ஜ.க-வை ஆதரித்து விட்டனர்.

தமிழகத்தில் தி.மு.க தலைமையில் அற்புதமான கூட்டணி அமைந்தது. இந்தக் கூட்டணியால் தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகளின் அடிச்சுவடே இல்லாமல் போய்விட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories