அரசியல்

வெற்றி பெற பணம் தேவை இல்லை என மக்கள் நிரூபித்து உள்ளார்கள்-தம்பிதுரைக்கு ஜோதிமணி பதிலடி!

"அவரிடம் பணம் இல்லை அதானால் நான் அவரை தோற்கடிப்பேன்" என்று தம்பிதுரை கூறியதற்கு கரூர் மக்கள் தேர்தல் முடிவின் மூலம் பதிலளித்துள்ளார்கள்.

வெற்றி பெற பணம் தேவை இல்லை என மக்கள் நிரூபித்து உள்ளார்கள்-தம்பிதுரைக்கு ஜோதிமணி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கரூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்திரர். அப்போது பேசிய அவர் :-

மக்களவை,இடைத்தேர்தல் என கரூர் தேர்தல் களம் மிக கடினமாக இருந்தது,ஆனாலும் மக்கள் என்னை அமோக வெற்றி பெற செய்து உள்ளார்கள்.இந்த வெற்றி எனக்கு கிடைத்த வெற்றி அல்ல ! சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றி.

என்னுடைய வெற்றிக்கு திமுக, காங்கிரஸ், கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் களத்தில் இறங்கி வேலை பார்த்தனர், அதே நேரத்தில் என்னை நம்பி மக்கள் வாக்களித்து உள்ளார்கள் நான் நிச்சயம் அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். பாராளுமன்றத்தில் நிச்சயம் தமிழக மக்களுக்காக அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மூத்த அரசியல்வாதி ஆகவே நான் அவரை மதிக்கிறேன்.ஆனால் தேர்தலுக்கு முன்பாக "அவரிடம் பணம் இல்லை அதானால் நான் அவரை தோற்கடிப்பேன்" என்று அவர் கூறியதற்கு மக்கள் கரூர் தேர்தல் முடிவின் மூலம் பணம் தேவை இல்லை என்று பதிலளித்துள்ளார்கள்.பண பலம்! அதிகார பலத்தை நம்பி உள்ள அனைவருக்கும் மக்கள் கூறி உள்ளார்கள் வெற்றி பெற பணம் பலம் தேவை இல்லை என்று.

கடந்த 5 ஆண்டுகால ஆட்சி மக்களுக்கு எதிரான ஆட்சியாக தான் இருந்தது. ஆனால் இம்முறையும் அதே நிலை தான் தொடரபோகிறது மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பதால் அதை தலை வணங்கி ஏற்று கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories