அரசியல்

தேசப்பற்று என்று வந்தால் பாகிஸ்தானை பற்றி பேசுகிறார் : மோடியை விளாசிய பிரியங்கா காந்தி!

தேசப்பற்று என்று வந்தால் மோடி பாகிஸ்தானை பற்றி பேசுகிறார். அவருக்கு தேசப்பற்று என்பது பாகிஸ்தானை எதிர்த்து பேசுவது மட்டும்தான? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசப்பற்று என்று வந்தால் பாகிஸ்தானை பற்றி பேசுகிறார் : மோடியை விளாசிய பிரியங்கா காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்திரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியின் போது பிரியங்கா காந்தி பேசுகையில் ‘‘என்னிடம் 56 இன்ச் மார்பு உள்ளது என்று பெருமையாக கூறிவந்தீர்கள். அதற்குள் இருக்கும் இதயத்தை எங்கே என்று மோடியிடம் நான் கேட்கிறேன். என்று கேள்வியெழுப்பினார்.

தேசப்பற்று என்று வந்தால் மோடி பாகிஸ்தானை பற்றி பேசுகிறார். அவருக்கு தேசப்பற்று என்பது பாகிஸ்தானை எதிர்த்து பேசுவது மட்டும்தான? இல்லை அவர் அதுதான் தேசப்பற்று என்று நினைக்கிறாரா? . மோடி அவர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சனைகள் இவைகளெல்லாம் தேசப்பற்று கிடையாது என நினைக்கிறார் போல, கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடியை உலகின் எந்த பக்கத்திலும் பார்த்திருக்கலாம். ஆனால், சொந்த நாட்டின் விவசாயிகளை சந்திப்பது குறித்து ஒருபோதும் அக்கறை கொண்டது கிடையாது.

விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பா.ஜனதா கூறுகிறது. ஆனால், ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒருநாளைக்கு தலா மூன்று ரூபாய்தான் கிடைக்கும். இதனால் அவர்கள் விவசாயிகளை அவமானம் படுத்துகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்புகைளை அழித்துள்ளனர். பண மதிப்பிழப்பு காரணமாக 50 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர்’’ என்று அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories