அரசியல்

நான் குடியிருந்த வீடு இடியும் நிலையில் இருக்கிறது என்ற செய்தி தவறானது. - ஆர்.நல்லகண்ணு

நான் குடியிருந்த வீடு இடியும் தருவாயில் இல்லை. எனவே அந்த செய்தி தவறானது என கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத்தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

நான் குடியிருந்த வீடு இடியும் நிலையில் இருக்கிறது என்ற செய்தி தவறானது. - ஆர்.நல்லகண்ணு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 94 வயதான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத்தலைவர் ஆர்.நல்லகண்ணுக்கு அரசு சார்பில் குடியிருக்க கடந்த 2007-ஆம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இலவசமாக அரசு கொடுத்தாலும் கூட, அதை ஏற்காத அவர் இத்தனை காலமாக வாடகை கொடுத்துத்தான் குடியிருந்து வந்தார். சுமார் 12 ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருந்து வரும் நிலையில் அந்த கட்டடத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து வீட்டை காலி செய்ய நல்லகண்ணு உள்பட அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு நோட்டீஸ் கொடுத்ததை அடுத்து மற்ற குடியிருப்புவாசிகள் வெளியேறினர். அதேபோல அரசிடம் மாற்று வீடு கேட்காமல் ஆர்.நல்லகண்ணுவும் வெளியேறினார்.

அங்கிருந்து வெளியேறிய அவர் கே.கே நகரில் குடிபெயர்ந்துள்ளார். ஆர்.நல்லகண்ணுவுக்கு நோட்டீஸ் அளித்த விவகாரத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் இது குறித்து நல்லகண்ணு கூறுகையில்; கக்கன் குடும்பத்திற்கு வீடு ஒதுக்குவதாக தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். நான் குடியிருந்த வீடு இடியும் நிலையில் இருக்கிறது என்ற செய்தி தவறானது. நீதிமன்ற உத்தரவை காட்டி வீடுகளை இடிக்க முடிவு செய்துவிட்டார்கள். வீடுகளை எப்போது ஒதுக்குகிறார்கள் என்பதை தெரிவித்த பிறகே அதுகுறித்து கருத்து கூற முடியும். பல ஆண்டுகளாக அங்கு குடியிருப்போரை வெளியேற்றக் கூடாது என்பதே எனது கோரிக்கை. என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories