அரசியல்

மீண்டும் பிரதமர் என்ற மோடியின் கனவு நிறைவேறப் போவதில்லை: மாயாவதி உறுதி!

பாஜக மீண்டும் அதிகாரத்திற்கு வரப்போவதில்லை; மீண்டும் பிரதமர் என்ற மோடியின் கனவும் நிறைவேறப் போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

modi & mayavati
internet modi & mayavati
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பிரதமர் மோடி சமீபத்தில் நடந்து தேர்தல் பிரச்சாரத்தின் போது பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் சாதிய அடிப்படையில் கூட்டணி வைத்துள்ளதாக விமரிசித்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மோடியின் இந்த விமர்சனத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ட்விட்டரில் பதிலடி அளித்துள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியதாவது: எங்கள் கூட்டணியை சாதிய ரீதியானது என்று மோடி கூறுவதைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது. சின்னப்பிள்ளை தனமாக பேசுவதை மோடி வாடிக்கையாக வைத்துள்ளார்.

மோடி சாதியின் கொடுமைகளை உணர்ந்ததில்லை. அதனால் தான் எங்கள் அணியை சாதி அணி என இணைத்து பேசுகிறார். அவர் பேசுவது முற்றிலும் தவறானது, என் முதிர்ச்சியானதும் கூட. மோடி இதற்கு முன் கூட்டங்களில் தன்னைபிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லிக்கொண்டே சாதிய வாதத்துக்குள் ஈடுபடுகிறார்.

மோடி ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நரேந்திர மோடி பிறப்பால் பிற்படுத்தப்பட்டவரல்ல. பிறப்பால் பிற்படுத்தப்பட்டவராக இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் அவரை பிரதமராக அனுமதித்திருக்காது. கல்யாண் சிங் போன்ற தலைவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் என்ன செய்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து செய்தியாளர்ளுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில் ; ஏதவாது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவேண்டும் என சாதியை இழுக்கும் மோடி அவர்கள், அதற்கு பதிலாக அவர் குஜராத்தில் என்ன நடக்கிறது என்று நேரில் சென்று பார்க்க வேண்டும். அவர் அங்கு தலித் மக்கள் கவுரவமான வாழ்க்கையை நடத்த முடியாது என்பது எனக்குத் தெரியும். ஒரு தலித் தன்னுடைய திருமணச் சடங்கிற்காகக் கூட குதிரையில் சவாரி செய்ய முடியாத கேவலமான நிலைதான் அங்கு உள்ளது. தலித்துக்கள் மீதான தாக்குதல்கள் குஜராத்தில் அதிகம் நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை அறிந்துகொண்ட விரக்தியில் பிரதமர் மோடி இருக்கிறார். அதனாலேயே அபத்தமான குற்றச்சாட்டுக்களை எல்லாம் அவர் கூறிவருகிறார். பாஜக மீண்டும் அதிகாரத்திற்கு வரப்போவதில்லை; மீண்டும் பிரதமர் என்ற மோடியின் கனவும் நிறைவேறப் போவதில்லை. என அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories