அரசியல்

மோடிக்கு மட்டும்தான் தேசப்பற்று உள்ளதாக நினைக்கிறார்? ராஜஸ்தான் முதல்வர் சாடல்...

தேசியவாதம் - தேசப்பற்று பேசுவதன் மூலம் மோடிக்கு மட்டும்தான் தேசப்பற்று உள்ளதாக நினைக்கிறார்? ஏன் மற்றவர்களுக்குத் தேசப்பற்று கிடையாதா ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் சாடியுள்ளார்.

மோடிக்கு மட்டும்தான் தேசப்பற்று உள்ளதாக நினைக்கிறார்?  ராஜஸ்தான் முதல்வர் சாடல்...
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவைத் தேர்தலில், ஜோத்பூரில் வாக்கைப் பதிவு செய்த அசோக் கெலாட், பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உலக வரலாற்றில் ஒவ்வொரு சர்வாதிகாரியும் முதலில் தேசியவாதம் பேசிமக்களிடத்தில் தங்கள் பிம்பத்தைப் பெற்றனர். இப்போது அப்படியொரு பிம்பத்தைப் பெறுவதற்குத்தான் மோடி முயற்சி செய்கிறார். இதை மக்கள் புரிந்துகொண்ட செயல்படவேண்டும். குறிப்பாக இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மோடியும் ஒரு சர்வாதிகாரியாக மாற வாய்ப்புள்ளது. சர்வாதிகாரம் ஜனநாயகத்திற்கு எப்போதும் ஆபத்தையே உருவாக்கும்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக 5 ஆண்டு ஆட்சி செய்தது குறித்துப் பேசாமல் தேசியவாதம் பற்றியும் தேசப்பற்று பற்றியும் மோடி பேசிவருகிறார். இப்படிப் பேசுவதன் மூலம் அவருக்கு மட்டும்தான் தேசப்பற்று உள்ளதா ஏன் மற்றவர்களுக்குத் தேசப்பற்று கிடையாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நாட்டின் பிரதமர் இப்படிப் பேசுவதன் மூலம் நாட்டையே பிளவுபடுத்த முயல்கிறார். என்று கெலாட் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories