அரசியல்

“மக்களின் பணத்தை எடுத்து அம்பானிகளுக்குக் கொடுக்கிறார் மோடி” - சேலத்தில் ராகுல் பேச்சு!

மக்களவைத் தேர்தலையொட்டி சேலத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

 “மக்களின் பணத்தை எடுத்து அம்பானிகளுக்குக் கொடுக்கிறார் மோடி” - சேலத்தில் ராகுல் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மக்களவைத் தேர்தலையொட்டி சேலத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடியபோது அவர்களை அழைத்துக் கூடப் பேசவில்லை. கோடிக்கணக்கான பணத்தை அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் கொடுப்பதில் மட்டுமே கவனமாக இருந்தார் மோடி.” என்றார்.

 “மக்களின் பணத்தை எடுத்து அம்பானிகளுக்குக் கொடுக்கிறார் மோடி” - சேலத்தில் ராகுல் பேச்சு!

மேலும் பேசிய அவர், “தி.மு.க-வும், காங்கிரஸும் இணைந்து தமிழகத்தில் வறுமையை ஒழிக்க உறுதி பூண்டுள்ளோம். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்ததும் நாடு முழுவதும் ஏழைகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெறும். ஏழைகளை அடையாளம் கண்டபிறகு, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ஆண்டுக்கு 72,000 ரூபாய் செலுத்தப்படும். இதுவொரு புரட்சிகரமான திட்டமாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் உலக நாடுகளுக்கே எடுத்துக்காட்டாக இந்தியா விளங்கும்.

பல்வேறுபட்ட மொழிகள், சிந்தனைகள் இந்தியாவில் உள்ளன. ஆனால், ஒற்றை நோக்கம், ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைப் பண்பாடு என்பதே பா.ஜ.க-வின் நிலைப்பாடாக உள்ளது. தமிழ்நாடு நாக்பூரில் இருந்து ஆளப்படவேண்டும் என பா.ஜ.க நினைக்கிறது.” என்றார்.

 “மக்களின் பணத்தை எடுத்து அம்பானிகளுக்குக் கொடுக்கிறார் மோடி” - சேலத்தில் ராகுல் பேச்சு!

“நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களின் மனநிலையை காங்கிரஸ் மதிக்கும். நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை தமிழக அரசே முடிவு செய்யும் என உறுதியளிக்கிறோம். பல்வேறு விவகாரங்களிலும் மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

தமிழகத்தின் உற்பத்தித் துறையை முற்றிலும் அழித்துவிட்டார் மோடி. அனைத்துத் துறை உற்பத்திப் பொருட்களுக்கும் வரியை உயர்த்தியதே மோடியின் சாதனை. நாட்டு மக்களின் பணத்தை எடுத்து, அம்பானி, அதானிகளின் பாக்கெட்டில் வைக்கிறார் மோடி.” எனப் பேசிய ராகுல் “மேக் இன் இந்தியா என்ற வெற்று முழக்கத்தை வெளியிட்டார் மோடி. ஆனால், இந்தியா முழுக்க அனைத்தும் மேட் இன் சைனாவாக இருந்து வருகிறது.” என மோடியை கடுமையாக விமர்சித்தார்.

banner

Related Stories

Related Stories