அரசியல்

தென்னிந்திய மக்களுடன் நான் இருக்கிறேன் - ராகுல் காந்தி 

காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை ராகுல் காந்தி இன்று வெளியிட்டாா். இந்த அறிக்கையில், விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை , நீட் தோ்வில் இருந்து விலக்கு உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன

Rahul Gandhi
Rahul Gandhi
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

2019 மக்களவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவா் ராகுல் காந்தி இன்று வெளியிட்டாா். இந்த அறிக்கையில், விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். நீட் தோ்வை எதிா்க்கும் மாநிலங்களுக்கு தோ்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் குறைந்தப்பட்ச ஊதியம் வழங்கப்படும் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

இதனைத் தொடா்ந்து ராகுல் காந்தி செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவா் பேசுகையில்,

பிரதமா் நரேந்திர மோடி தங்களை புறக்கணித்து விட்டதாக தென்னிந்திய மக்கள் கருதுகின்றனா். ஆனால், நான் தென்னிந்திய மக்களுடன் இருக்கிறேன் என்பதை உணா்த்துவதற்கே கேரளாவில் போட்டியிடுகிறேன் என்று தொிவித்துள்ளாா்.
banner

Related Stories

Related Stories