அரசியல்

மோடிக்கு எதிராக வாரணாசியில் 111 விவசாயிகள் போட்டியிடுகின்றனர்.

நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசியில் அய்யாக்கண்ணு உள்பட 111 விவசாயிகள் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

மோடிக்கு எதிராக வாரணாசியில் 111 விவசாயிகள்  போட்டியிடுகின்றனர்.
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

விவசாயிகளின் பிரதான கோரிக்கையான விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை, விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி, நதிகள் இணைப்பு, விவசாயிகளுக்கு (60 வயதடைந்த) மாத ஓய்வூதியம், தனிநபர் இன்சூரன்ஸ் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி தலைநகர் டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு தலைமையில் 141 நாட்கள் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தற்பொழுது அதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி போட்டியிடும் உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழக விவசாயிகள் 111 பேர் அய்யாக்கண்ணு தலைமையில் சுயேட்சையாக போட்டியிட உள்ளனர். இதற்காக ஏப்ரல் 22ஆம் தேதி 1000 விவசாயிகள் சென்னையில் இருந்து புறப்பட்டு வாரணாசி சென்று , 24ஆம் தேதி 111 விவசாயிகள் பிரதமரை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என அய்யாக்கண்ணு தகவல்.வேட்புமனு தாக்கல் செய்வதோடு வாரணாசியில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த உள்ளதாகவும், 29 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள அகோரிகள் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக அய்யாக்கண்ணு தகவல்.மேலும், அங்கு வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்யவும் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories