உணர்வோசை

“நான் சாதித் தலைவன் அல்ல சமூகத் தலைவன்” - அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு!

அண்ணல் அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்துவோர், அந்த சிலைக்கு உயிர் இருப்பதாக கண்டு அஞ்சுவதே காரணமாக உள்ளது.

“நான் சாதித் தலைவன் அல்ல சமூகத் தலைவன்” - அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“என் சிலையின் தலையை உடைக்கக் காரணம் என் சிலைக்கும் உயிர் இருப்பதால் அவர்கள் நினைக்கிறார்கள்.

என் சிலையின் பீடத்தைக் கூட தகர்க்க காரணம், அந்த பீடத்துக்கு பிற உயிர்களையும் உயிர்ப்பிக்கும் சக்தி இருப்பதாய் அவர்கள் நினைக்கிறார்கள்.

என் சிலையை நீ உடை! உனக்கு உடைக்கும் உரிமையையும் வாங்கித் தந்தது நான்தான்! நீ வெளியே வர உதவும் சட்டமும் என்னாலேயே எழுதப்பட்டது!

நீ மண் என்றது மனு, மனிதன் எனச் சட்டம் செய்தவன் நான்; நீ காலில் பிறந்தவன் என்றது மனு; நீ சாதிக்கப் பிறந்தவன் என்றவன் நான்.

கல்லும், கம்பும், கடப்பாரையும் தாங்கிய கைகள், பேனா பிடிக்கட்டும் என்றவன் நான்;

மீண்டும் கல்லும், கடப்பாரையும் பிடிக்க நினைப்பவன் இடிக்கத் துடிப்பது என்னைத்தானே இருக்கும்?

சாதியே சட்டமாக இருந்த காலத்தில், நீதியைச் சட்டமாக்கியவன் நான்; அந்த சதி புரியாக் கூட்டம் இடிக்கத் துடிப்பது என்னைத் தானே இருக்கும்?

“நான் சாதித் தலைவன் அல்ல சமூகத் தலைவன்” - அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு!

எல்லோருக்கும் சுதந்திரம் கேட்டேன். எதிர்ப்போர் என்னை அடியுங்கள்; எல்லோருக்கும் சமத்துவம் கேட்டேன், நிராகரிப்போர் என்னை அடியுங்கள்;

எல்லோரும் சகோதரர் என்றேன். விரும்பாதவர்கள் என்னை அடியுங்கள்.

உங்களுக்காகவே பேசினேன்; அடிபடத் தகுதியானவன்தான் நான். உங்களுக்காகவே எழுதினேன்; அடிபடத் தகுதியானவன்தான் நான்.

உங்களுக்காகவே செயல்பட்டே; அடிபடத் தகுதியானவன்தான் நான். நீங்கள் அடிபடாமல் காப்பாற்றிய நான்; அடிபடத்தான் வேண்டும்.

இந்த அடி, எனக்கு வலிக்கும் என்று மட்டும் நினைக்காதீர்கள்; நான் மனுவை கேள்வி கேட்டவன்; அவதாரங்களைக் கேள்வி கேட்டவன்; நான் கடவுளையே கேள்வி கேட்டவன்; வேள்வித் தீயைக் கேள்வி கேட்டவன்.

எனவே, என்னை வெட்டிய அரிவாளின் முனை மழுங்கி இருப்பதை உற்றுப்பாருங்கள்; இந்த அடியால் என்னை அவமானப்படுத்தி விட்டதாக மட்டும் நினைக்காதீர்கள். மாட்டு வண்டியில் உருட்டிவிடப்பட்டு நாடாளுமன்றத்தில் போய் விழுந்தவன் நான்.

நான் பட்டங்களை வாங்கியவனல்ல; பல்கலைக்கழகத்தையே வாங்கியவன்; நான் கட்சித் தலைவனல்ல; பல்லாயிரம் கட்சிகளை உருவாக்கிய தலைவர்களின் தலைவன்; நான் சாதித் தலைவன் அல்ல; சமூகத் தலைவன்.

“நான் சாதித் தலைவன் அல்ல சமூகத் தலைவன்” - அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு!

எனது லட்சிய சமூகத்தில் நீங்கள் எல்லாம், உத்தமபுத்திரர்களாக வாழ்வீர்கள் என்று நினைத்தேன்; இன்னுமா நீங்கள் சாதியச் சகதியில் புரள்கிறீர்கள்?

எனது சிலை உடைக்கப்பட்டது பற்றியே எல்லோரும் பேசுகிறீர்கள். அது சில மணிநேரத்தில் முளைத்தது எதனால் என்று யோசியுங்கள்; தொட்டது ஆட்டின் தலையல்ல; சிங்கத்தின் தலை என்பதால் சிலிர்த்தெழுந்தது.

பிறப்பொக்கும், எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவன் மண்ணில்; வாடிய பயிரைக் கண்டு வாடினேன் என்ற வள்ளலார் மண்ணில்

சாதிபேதமற்ற திராவிடர்கள் என அழைத்த அயோத்திதாசர் மண்ணில்; பூர்வக்குடிகளுக்காகவே போராடிய தந்தை பெரியார் மண்ணில்

நீ சாதி பார்த்துக் கொள்கிறார்; நீ சாதி பார்த்து அடித்து உதைக்கிறாய்; நீ சாதி பார்த்து சதியாட்டம் ஆடுகிறாய் என்றால் உனது ஊரில் சிலையாக நிற்பதற்கே அவமானமாக இருக்கிறது.”

banner

Related Stories

Related Stories