உணர்வோசை

நீங்கள் அதிகம் பேச விரும்புபவரா ? இல்லை கேட்க விரும்புபவாரா ? இந்த கட்டுரை உங்களுக்குத்தான் !

பார்ப்பதும் தவறுவதும் கற்பதும் ஆகிய அனுபவங்கள்தாம் பெரும்பாலான புரிதல்களை வழங்குகின்றன.

நீங்கள் அதிகம் பேச விரும்புபவரா ? இல்லை கேட்க விரும்புபவாரா ? இந்த கட்டுரை உங்களுக்குத்தான் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பெரும்பாலானோர் பேசவே விரும்புகின்றனர். கேட்க விரும்புவதில்லை.

குறிப்பாக அடுத்தவரின் பிரச்சினைகளை குறித்து கேட்பதில் எவருக்கும் விருப்பம் இருப்பதில்லை. ஏனெனில் அதில் ஆதாயம் இருப்பதில்லை. பிறரின் பிரச்சினைகளை கேட்பது தொழிலாக இருக்கும் இடத்தில் அந்த விருப்பம் இருக்கலாம். குறிப்பாக மருத்துவர், மனநல ஆலோசகர், வக்கீல் போன்றோர். அவர்களிடமும் அதிக நேர உரையாடல் வாய்க்காது.

தொழில்ரீதியிலான வாய்ப்புகளை தவிர்த்து பார்த்தால் நாமாக நாடி சென்று பகிர விரும்பும் பிரச்சினைகளை கேட்க எவரும் இல்லை. கேட்டாலும் அவர்களுக்கு அப்பிரச்சினை குறித்து சமூகம் கொடுத்திருக்கும் கருத்தை நமக்கு அளிப்பார்கள். அதுவும் அந்த உரையாடலை முடிக்க மட்டுமே இருக்கும். முழுமையாக பேச விட்டு கருத்தின்றி கேட்பதற்கான வெளி நம் சமூகங்களில் இல்லை.

நீங்கள் அதிகம் பேச விரும்புபவரா ? இல்லை கேட்க விரும்புபவாரா ? இந்த கட்டுரை உங்களுக்குத்தான் !

இப்பிரச்சினைக்கு இன்னொரு பக்கமும் உண்டு. தன் வாழ்க்கையில் சந்தித்த துயரங்கள் அல்லது குறிப்பிட்ட சில சம்பவங்களை குறித்து மட்டுமே திரும்பத் திரும்ப பேசும் முறை.

உதாரணமாக தன் வாழ்க்கையின் சில மோசமான பக்கங்கள் பலருக்கும் இருக்கும். அப்பக்கங்களிலிருந்து குறித்தே அதிகம் பேசுவார்கள். போலவே வாழ்வின் ஒரு காலத்தைய அனுபவம் பலருக்கும் முக்கியமாக இருக்கும். அவர்களும் அதே காலக்கட்டத்தை பற்றிதான் திரும்ப திரும்ப பேசுவார்கள். அத்தகைய பகிர்தல் அலுப்பை கொடுக்கலாம். அச்சமயத்தில் கேட்பவர் மீளவே விரும்புவார்.

நீங்கள் அதிகம் பேச விரும்புபவரா ? இல்லை கேட்க விரும்புபவாரா ? இந்த கட்டுரை உங்களுக்குத்தான் !

பகிர்ந்து கொள்ளவே பேசுவது ஒருமுறை. உண்மையான வழி தேடி திக்கற்று தேடி அலைவது இன்னொரு முறை.இந்த இரண்டு முறையும் தெரியாத செவிகளும் வாய்களும் உருவாக்கிய சிக்கல்களின் விளைவுதான் உங்களுக்கு நேர்ந்தது.ஆனால் ஒன்று தெரியுமா?கேட்பதாலும் ஆலோசனை வழங்குவதாலும் ஒரு தீர்வும் ஏற்படுவதில்லை.

ஏனெனில் ஒவ்வொருவரின் செயலும் அவரின் முனைப்பில் இருந்து நேர்வது. அறத்திலிருந்து அல்ல!

பார்ப்பதும் தவறுவதும் கற்பதும் ஆகிய அனுபவங்கள்தாம் பெரும்பாலான புரிதல்களை வழங்குகின்றன.

நீங்கள் அதிகம் பேச விரும்புபவரா ? இல்லை கேட்க விரும்புபவாரா ? இந்த கட்டுரை உங்களுக்குத்தான் !

சொன்னதை, கண்டதை அவதானித்து சரியாக புரிந்து கொள்வதென்பது ஒரு திறன். அது மிக மிகச் சிலருக்கே உண்டு. அத்திறன் கிடைக்க நம்மையே விமர்சித்துக் கொள்ளும் உச்சக்கட்ட நேர்மையும் ஓர்மையும் இருக்க வேண்டும்.

ஆகவே பிறருக்கு நீங்கள் கேட்கும் செவியாக இருப்பது நல்லதுதான். அதே போல் பிறரும் உங்களுக்கு செவியாக விரும்பாதீர்கள். அதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு.

எனவே அவதானியுங்கள். நேர்மை தரியுங்கள். அறியுங்கள். அறம் கொள்ளுங்கள்.

அவரவர் பிரச்சினையே முக்கியமென ஓடும் நவதாராளவாத சுயநல உலகில் எல்லாரும் சுமைதூக்கிகள் தேடுகின்றனர், ஒருவரும் சுமைதாங்கியாக விரும்பாமல்!

    banner

    Related Stories

    Related Stories