உணர்வோசை

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் அல்லாத எந்த தத்துவமும் பெண்ணுக்கு எதிரானதே ! அதன் காரணம் என்ன ?

பெண்ணை ஒடுக்கும் அல்லது ஆணாதிக்கம் ஆதரிக்கும் சமூக நிறுவனங்கள் மார்க்ஸுக்கும் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் எதிராகவே நின்று வருகின்றன.

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் அல்லாத எந்த தத்துவமும் பெண்ணுக்கு எதிரானதே ! அதன் காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஆணவக்கொலை எப்படி நேர்கிறது?

ஒரு ஆண் கொல்கிறான். ஒரு ஆண் கொல்லப்படுகிறான். ஒரு பெண் வாழ்க்கை இழக்கிறாள். ஒரு பெண் வாழ்க்கை பறிக்கிறாள். படிப்பு இருக்கிறது. நிலப்பிரபுத்துவம் இருக்கிறது. முதலாளித்துவம் இருக்கிறது. கார்ப்பரெட் வேலை இருக்கிறது. பொருளாதார விடுதலை இருக்கிறது. சாதியும் இருக்கிறது.

இவற்றுக்குள்ளிருந்து தான் பெண் விடுதலை பேச வேண்டும். இங்கு இருந்துதான் ஆணாதிக்கத்தை வரையறுக்க வேண்டும். பெண்ணடிமைத்தனம் எப்படி கட்டமைப்பு ரீதியாக மீண்டும் மீண்டும் உறுதியாக்கப்படுகிறது என்பதை ஆராயும் வெளி இங்குதான் உருவாக முடியும்; கிடைக்கும்!

இங்கிருந்து தொடங்கும் உரையாடலின் வழிதான் ஆண் மைய சிந்தனையை கொண்ட சமூக நிறுவனங்களின் ஆணி வேரை அறுக்க முடியும். உண்மையான விடுதலையையும் சமத்துவத்தையும் நோக்கி நகர முடியும்.

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் அல்லாத எந்த தத்துவமும் பெண்ணுக்கு எதிரானதே ! அதன் காரணம் என்ன ?

இதனால்தான் பெரியார் சாதி ஒடுக்குமுறை பேசினார். மதம் பேசினார். கடவுள் பேசினார். அம்பேத்கர் சட்டம் பேசினார். சமூக விடுதலை பேசினார். மார்க்ஸ்ஸும் குடும்பம் பேசினார், சுரண்டலை பேசினார். உடைமை மனநிலை பேசினார். உழைப்பு சமத்துவம் பேசினார்.

பெண் விடுதலையை இம்மூவரிடம் இருந்தும் அந்நியப்படுத்தும் கார்ப்பரெட்-நிலப்பிரபுத்துவ உத்திகள் எதிர்க்கப்பட வேண்டும்.

நன்றாக கவனித்து பாருங்கள். பெண்ணை ஒடுக்கும் அல்லது ஆணாதிக்கம் ஆதரிக்கும் சமூக நிறுவனங்கள் மார்க்ஸுக்கும் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் எதிராகவே நின்று வருகின்றன. ஆனால் அதே நிறுவனங்களுடன் முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் சமரச உறவில் இருந்து கொண்டிருக்கின்றன.

நேரடியாக சொல்வதெனில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோரை எதிர்க்கும் மதம், அரசு உள்ளிட்ட எந்த நிறுவனமும் பெண்ணுக்கு எதிரானவையே. இம்மூவர் அல்லாத எந்த தத்துவமும் - முதலாளித்துவம் உட்பட, பெண்ணுக்கு எதிரானதே.

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் அல்லாத எந்த தத்துவமும் பெண்ணுக்கு எதிரானதே ! அதன் காரணம் என்ன ?

பெரியாரிய, கம்யூனிச, அம்பேத்கரிய முற்போக்காளர்கள் பலர் கூட பெண்ணுக்கு எதிர்சிந்தனையில் இருக்கிறார்களே என கேட்கலாம். அத்தகையானவர்களை முற்போக்கானவர்கள் என கருத வேண்டியதில்லை. அவர்களுக்கான பணியே அம்மூவருக்கும் எதிராக பெண்ணை நிறுத்துவது என்பதுதான். அவர்களிடம் இருந்தும் இம்மூவரையும் நாம் மீட்க வேண்டியிருக்கிறது.

லாபநோக்கில் தோற்றமாயையாக தெரியும் பெண் விடுதலையை, விடுதலை என நம்புவதும் ஆண்-பெண் உறவுகளில் மட்டுமே பெண்ணியத்தை அடைந்து விடலாம் என பிரசங்கிப்பதும் உண்மையில் சித்தாந்த தெளிவின்மையே அன்றி, உண்மையான விடுதலைக்கான பாதை அன்று. இவ்விதத்தில் அடையக்கூடிய பெண் விடுதலை, மதத்தை ஒன்றும் செய்யப் போவதில்லை. குடும்பத்தை ஏதும் செய்யாது. சொத்துடமையை ஒன்றும் செய்யப் போவது கிடையாது. அரசை ஏதும் செய்யாது.

ஆணை மட்டும் அருவ எதிரியாக்கி நிகழ்யதார்த்தத்தில் இருக்கும் மதம், கடவுள், அரசு உள்ளிட்ட ஆண் உருவாக்கிய நிறுவனங்களை விட்டு வைக்கும் கார்ப்பரெட்டிய பெண் விடுதலை ஓட்டை வாளியில் நீர் இறைப்பதற்கு சமம். பச்சை பாசாங்கே!

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் அல்லாத எந்த தத்துவமும் பெண்ணுக்கு எதிரானதே ! அதன் காரணம் என்ன ?

சாதி, குடும்பம் முதலிய ஆண் மையச் சிந்தனை நிறுவனங்களால் தங்கள் காதலை பறிகொடுத்த பெண்களுக்கு பெரியாரிய, மார்க்ஸிய, அம்பேத்கரிய சித்தாந்தங்களை கொண்டு சேர்ப்பது நம் கடமை ஆகும். அவர்கள் மட்டுமின்றி பெண்கள் அனைவருக்குமே மூவரையும் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.

இல்லையெனில் முதலாளித்துவத்தின் நுகர்வு மன உருவாக்கம் வென்றுவிடும்.

நிலப்பிரபுத்துவத்துடன் கைகோர்த்து நிர்பயாவுக்கு மெழுகுவர்த்தி கொளுத்தும். நந்தினையை வளர்ப்பு சரியில்லாதவர் என பழி பேசும். ஆசிபா கொல்லப்பட்டதற்கு ஆதரவாக பெண்களையே ஊர்வலம் போக வைக்கும். பெண்ணுக்கு எதிராக பெண்ணையே கொண்டு நிறுத்தும்.

சமூகத்தில் ஆண்-பெண் சமத்துவம் உருவாக்கப்படாமல் தனி உறவில் உருவாக்கிட முடியாது. ஆண் மைய நிறுவனங்கள் அழிக்கப்படாமல் ஆணாதிக்கத்தை அழித்திட முடியாது.

banner

Related Stories

Related Stories