உணர்வோசை

பிறக்கும்போதே மனிதர் இரு பாலின ஈர்ப்பாளரா (bisexuals)? அறிவியல் சொல்வது என்ன ?

மனிதனின் அனுபவமும் சமூகரீதியான வளர்ப்பும் அகரீதியான மாறுபாடுகளும் உடல்ரீதியான விளைவுகளை உருவாக்கி பாலுறவுத் தேர்வை நிறுவுகிறது.

பிறக்கும்போதே மனிதர் இரு பாலின ஈர்ப்பாளரா (bisexuals)?  அறிவியல் சொல்வது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

தன்பால் ஈர்ப்பு இயற்கையானதா?

பிறக்கும்போது எல்லாருமே bisexualsதான். அதாவது இருபாலீர்ப்பாளர்கள்தான். இது கற்பனைக் கருத்து அல்ல. Sigmund Freud சொன்ன கருத்து.

உயிர்களுக்கோ இயற்கைக்கோ சமூக நிர்பந்தம் (social condition) கிடையாது. அவசியமும் இல்லை. சமூக நிர்பந்தம் மனிதனுக்கு மட்டும்தான். அதுவும் அவன் உருவாக்கிய சமூகத்தால் மட்டும்தான். சமூகம் என்பது இயற்கையா?

சமூகம் நிர்பந்திக்கும் விழுமியங்களை சமூக நிறுவனங்கள் போதிப்பதே ஒரு சமூகத்தில் இயற்கை எனக் கருதப்படுகிறது. சில காலத்துக்கு முன் வரை பூமி தட்டை என நாம் எல்லாரும் நம்பி வந்தது இப்படியான சமூக நிறுவனங்களால்தான். பூமியை சுற்றி சூரியன் வருவதாகவும் நம்பினோம். எதிர்கேள்விகள் பிறக்கும்வரை அவைதான் நமக்கு பேருலக உண்மைகள். ஆனால் இன்று நிலைமை வேறு.

பிறக்கும்போதே மனிதர் இரு பாலின ஈர்ப்பாளரா (bisexuals)?  அறிவியல் சொல்வது என்ன ?

தன்பால் ஈர்ப்பும் இதே போல்தான். முன்பொரு காலத்தில் நம் சமூக நிறுவனங்கள் கொடுத்து வந்த விழுமியங்களின் இயற்கையின் படி, தன்பால் ஈர்ப்பு இயற்கைக்கு முரணானது என நம்பி வந்தோம். பிறகு ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியாலும் நிறுவனங்களின் குலைவுகளாலும் வேறு விஷயங்கள் தெரிய வரத் தொடங்கின.

மனிதன் குழந்தையாக பிறக்கையில் பாலுறவு தேர்வு இல்லாமல்தான் பிறக்கிறான். அவனுடைய முதல் அனுபவமும் சமூகரீதியான வளர்ப்பும் அகரீதியான மாறுபாடுகளும் உடல்ரீதியான விளைவுகளை உருவாக்கி பாலுறவுத் தேர்வை நிறுவுகிறது. அத்தேர்வை கூட பிற்காலத்தில் அவனே மாற்றிக் கொள்ள முடியும். இதுதான் மனிதனின் உயிரியல். இது இயற்கைக்கு விரோதமானதன்று.

இயற்கையில் தன் தேவைக்கேற்ப பாலுறவுத் தேர்வை தேர்ந்தெடுக்கும் தன்மை பல உயிர்களுக்கு உண்டு.

இத்தன்மைக்கு பெயர் hermophrodism!

மனிதனின் வாழ்க்கை இனவிருத்தியின் வழியாகத்தான் தொடரும் என்கிற கருத்தின் மீதேறி நின்றுகொண்டுதான் இனவிருத்தி செய்யும் வாய்ப்பற்ற எந்த பாலுறவும் இயற்கையாக இருக்க முடியாது என வாதிடுகிறோம். இது ஓரளவுக்கு உண்மையே. மனிதன் மட்டுமல்ல, சராசரியாக எல்லா உயிர்களுமே இனவிருத்தி வழிதான் தொடரமுடியும். ஆனால் அதை தாண்டிதான் இயற்கை தன்பால் ஈர்ப்பையும் உயிர்களிடத்தில் விதைத்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். அதுவும் இனவிருத்தியை பரிசோதனைக் கூடங்களில் நிகழ்த்திவிட முடியும் என்ற காலம் வந்துவிட்ட பிறகு, இனவிருத்திக்கான உறவு மட்டும்தான் இயற்கை என பேசுவது அபத்தம்.

பிறக்கும்போதே மனிதர் இரு பாலின ஈர்ப்பாளரா (bisexuals)?  அறிவியல் சொல்வது என்ன ?

மேலும் ஒரு சமூகத்தில் ஒரு தரப்பு மக்கள் எந்தவித அங்கீகாரமுமின்றி அந்த சமூகத்தின் அரசுக்கு கீழே வாழ வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதிலும் அவர்களின் வரி முதற்கொண்டு வசூலித்துவிட்டு, சுரண்டிக் கொண்டும், அவர்களின் தனி வாழ்க்கை உரிமையை மறுப்பது என்பதெல்லாம் மிகப்பெரும் ஒடுக்குமுறை. அதிலிருந்து விடுதலை பெறுவதே சமூக நியாயமாக இருக்க முடியும்.

எளிமையாக சொல்வதெனில் நமக்கு இங்கு மதங்களை, நாம் வழிபடும் கடவுளரை, புனித நூல்களை காக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதை மறைக்கவே இயற்கை, செயற்கை, முரண் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். போப்பே பிரபஞ்ச பெருவெடிப்பு உண்மை என ஒப்புக்கொள்ளும் கட்டத்துக்கு உலகம் வந்திருக்கிறது. அதுதான் அறிவியல். அதுதான் அறிவு.

அறிவும் இயற்கையும் யார் ஒப்புதலுக்கும் காத்திருப்பதில்லை. காத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை.

banner

Related Stories

Related Stories