உணர்வோசை

தொலைக்காட்சி - அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும்தான் எத்தனை வித்தியாசம் !

தற்போதைய வாழ்க்கை அவரவர் விருப்பம் முக்கியம் என தொடங்கி, அவரவர் விருப்பம் மட்டுமே முக்கியம் என்ற கட்டத்திற்கு வந்து நிற்கிறோம்.

தொலைக்காட்சி - அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும்தான் எத்தனை வித்தியாசம் !
RIZWAN TABASSUM
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

என் பாட்டி வீட்டில் ஒரு சாலிடேர் டிவி இருக்கும். டோர் வைத்தது. எதாவது பாடல்கள் பார்த்து கொண்டிருப்போம். அப்பா வந்தால், சேனல் நியூசுக்கு மாற்றப்படும். ஒன்றும் சொல்ல முடியாது. விளையாட சென்று விடுவோம். தாத்தா, பாட்டி வந்தால் பழைய பாடல் சேனல். குழந்தை கும்பல் இருந்தால் நான் சேனல் திருப்புவேன். ஒன்று மற்றவருக்கு ஏற்ப அனுசரித்து அனைவரும் சென்றோம். அல்லது மாற்று வேலையில் ஈடுபட சென்று விட்டிருப்போம்.

‍‍‍‍‍‍பிறகு நடந்தது என்ன?

‍‍‍‍‍‍என் விருப்பத்துக்கு நான் தொலைக்காட்சி பார்க்க வேண்டும். அதனால் ஒரு வீட்டிலேயே பல தொலைக்காட்சிகள். அப்பா என்ன மாதிரி நிகழ்ச்சிகள் பார்ப்பார் என்பது கூட மகனுக்கு தெரியாது. மகன் என்ன ரசனை கொண்டிருக்கிறான் என்பது அப்பாவுக்கு தெரியாது. அம்மாவோ சுத்தம்.

‍‍‍‍‍‍அவரவர் விருப்பம் முக்கியம் என தொடங்கி, அவரவர் விருப்பம் மட்டுமே முக்கியம் என்ற கட்டத்திற்கு வந்து நிற்கிறோம். 'உங்கள் வாழ்க்கைதான் முக்கியம்', 'உங்கள் வாழ்க்கையை மட்டும் பாருங்கள்', 'அடுத்தவரை உங்கள் விருப்பத்துக்கு குறுக்கே நிற்க விடாதீர்கள்', 'வலுத்ததே வெல்லும்' என்ற கோஷம் எல்லாம் எதை உருவாக்கி வைத்திருக்கிறது என சிந்தித்து பாருங்கள்.

‍‍‍‍‍உங்கள் அப்பா, அம்மா, காதலன், கணவன், மனைவி, அம்மா எல்லாம் உங்கள் விருப்பத்துக்கு தடையாக நிற்கும் தனி நபர்களாக தெரிய தொடங்கி விட்டனர்.

தொலைக்காட்சி - அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும்தான் எத்தனை வித்தியாசம் !

‍‍‍‍‍‍அப்படியெனில் நமக்கான வாழ்க்கையை பற்றி சிந்திக்க கூடாதா?

‍‍‍‍‍‍சிந்திக்கலாம். முன்பும் அப்படித்தான் சிந்தித்திருக்கிறோம். ஆனால் என் விருப்பத்தை சொல்லி என் சார்ந்த அனைவரையும் புரிய வைக்க விழைவேன். அதற்கான எல்லா உரையாடல்களையும் நடத்துவேன். அதன் வழி என்னை சுற்றி இருப்போரின் விருப்பமும் எனக்கு முக்கியம் என்பதுதான் அங்கே அர்த்தமாகிறது. 'நீ என்ன வேண்டுமானாலும் சொல். நான் செய்வதைதான் செய்வேன்' என சென்றிருக்க மாட்டோம். எதையும் புரிந்து கொள்ளாத அடம் பிடிக்கும் பிற்போக்கான சுற்றம் இருக்கும் இடத்தில் மாத்திரம் நம் விருப்பத்துக்கு நகரலாம்.

‍‍‍‍‍‍ஆனாலும் அங்கெல்லாம் என் விருப்பத்தை போலவே அடுத்தவர் விருப்பமும் எனக்கு முக்கியம் ஆகிறது. முரண்பாடுகள் தோன்றுகையில் உரையாடி, நியாயங்களை புரிய வைத்து, ஒரு common point-க்கு வந்து சேருவோம். இரு தரப்புமே தன் நிலையை விட்டு கொடுக்காமல் இருந்தால் உரையாடுவதே வீண்தான். உரையாட தேவையில்லைதான். ஆனால் இந்த விட்டுக்கொடுக்காத தன்மை, அன்றை விட இன்றுதான் அதிகம். ஏன் என புரிகிறதா?

தொலைக்காட்சி - அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும்தான் எத்தனை வித்தியாசம் !

தனித்துவ வேட்கை!

தனித்துவ பேச்சு மிகுந்த கவர்ச்சி நிறைந்தது. Free will போல் போதை தரும் எண்ணம். 'நானே ராஜா நானே மந்திரி' என வாழ்க்கை கிடைத்துவிடும் என நம்ப வைக்கும். ஆனால் உண்மை என்ன? ஒரு பெரும் தனிமையை கொடுக்கும். கழிவிரக்கத்தை உண்டு பண்ணும். அளந்திட முடியா வெறுமையை வாழ்க்கைக்கு கொடுக்கும். எவர் மீதும் நம்பிக்கை கொள்ள செய்யாது. தான் மட்டும்தான் என self centred ஆக யோசிக்க வைக்கும். அதிக பணம், பொழுதுபோக்கு, வசதி எல்லாம் கிட்டும் இந்த காலத்தில்தான் depression, stress, bipolar disorder என பல அகச்சிக்கல்கள் உருவாகி இருக்கின்றன.

‍‍‍‍‍‍பன்னாட்டு மூலதனத்துக்கு உங்கள் அகச்சிக்கல் எதுவுமே பிரச்சினை அல்ல. காசு அதிகம் பண்ண வேண்டும். அவ்வளவுதான் அதன் தேவை. மூன்று பேர் உள்ள உங்கள் குடும்பத்தில் மூன்று தொலைக்காட்சிகளை விற்க வேண்டும். முடிந்தால் அதற்கும் மேல். அதற்கு நீங்கள் மேலும் மேலும் தனி நபராக வேண்டும். மேலும் மேலும் அடுத்தவரை வெறுக்க வேண்டும். மேலும் மேலும் உங்கள் சுயத்தை மட்டுமே காதலிக்க வேண்டும். இவை அனைத்துக்குமான பிரச்சாரத்தை பன்னாட்டு மூலதனம் செய்து கொண்டே இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் 'தனித்துவ' பிரச்சாரமும்.

‍‍‍‍‍‍கூட்டம்தான் மனிதன். குழுதான் மனிதம். தனியாய் இருக்க தொடங்கும்போது மனிதன் அழிவை நோக்கி செல்கிறான் என பொருள். அதை போதிக்கும் எந்த சித்தாந்தமும் அழிவுக்கான சித்தாந்தமே. உங்கள் ஆசையும் ஆர்வமும்தான் அழிவுக்கு அடிகோலும். தனித்துவம் இனிப்பதாக தோன்றலாம். ஆனால் வெளுத்ததெல்லாம் பாலுமல்ல. மின்னுவதெல்லாம் பொன்னுமல்ல.

banner

Related Stories

Related Stories