உணர்வோசை

“எங்கள் குறைகளையெல்லாம் தீர்த்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்” : சேப்பாக்கம் மக்கள் நெகிழ்ச்சி பேட்டி!

“நாங்கள் கவலையோடும், கண்ணீரோடும் வாழ்ந்து வருகிறோம்; எங்கள் குறைகளையெல்லாம் தீர்த்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்” என சேப்பாக்கம் பகுதி மக்கள் ஆனந்த கண்ணீரில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

“எங்கள் குறைகளையெல்லாம் தீர்த்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்” : சேப்பாக்கம் மக்கள் நெகிழ்ச்சி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தொகுதிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வீடுவீடாகச் சென்று பொதுமக்களிடம் குறைகள் கேட்டு - பொதுமக்கள் தெரிவிக்கும் அக்குறைகள் தீர்க்கப்பட உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு வரும் காட்சிகளை அனைத்து ஊடகங்களிலும் பாரபட்சமின்றி வெளியிட்டு உதயநிதி ஸ்டாலின் அவர்களை வெகுவாகப் பாராட்டி வருகின்றன.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்கி வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மக்கள்சேவைகள் குறித்து`பிஹைண்ட்வுட்ஸ்’ (BEHIND WOODS) யூ டியூப்ன்சேனல், தொகுதி மக்களிடம் சிறப்புப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பார்டர் தோட்டம் குடிசைப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்மணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பணிகளைப் பாராட்டி உணர்ச்சிப் பெருக்கால் உரையாற்றினார். அவ்விவரம் வருமாறு: -

“எங்கள் குறைகளையெல்லாம் தீர்த்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்” : சேப்பாக்கம் மக்கள் நெகிழ்ச்சி பேட்டி!

செய்தியாளர்: - உதயநிதி ஸ்டாலின் உங்கள் தொகுதி முழுக்க பார்வையிட்டு பணிகளை மேற்கொண்டுள்ளார். அதுகுறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பெண்மணி: மிக மிக உற்சாகமாக இருந்தது எனக்கு. அதை நினைக்க நினைக்க எனக்கு சாப்பாடு சாப்பிட்டது போன்று இருந்தது. இரவில்கூட நான் உணவு உட்கொள்ளவில்லை. அந்த நினைப்பிலேயே நான் இருக்கிறேன்.

வீடு வீடாகச் சென்று யாரும் பார்த்தது கிடையாது

எந்த ஆட்சியிலும் இதுபோன்று வீடு வீடாகச் சென்று யாரும் பார்த்தது கிடையாது. இந்தக் குழந்தை (உதயநிதி ஸ்டாலின்) பார்த்து இருக்கிறதே, அந்தத் தெம்பே எனக்குப் போதும். இதுபோன்று யாரும் செயல்பட்டது கிடையாது. எனக்கு 57 வயதாகிறது. எத்தனையோ கட்சிக்காரர்கள் இதற்கு முன் வந்திருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் சாலை முனையோடு திரும்பிப்போய் விடுவார்கள்.

ஆனால், இந்தப் பிள்ளைதான் ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று, மக்களுடைய கஷ்டங்களைப் பார்வையிட்டு சென்றவர் இவர் ஒருவர்தான். மின்சார வசதி இல்லாமல் நாங்கள் இருந்தோம்; எங்கள் பிள்ளையை நாங்கள் தூக்கிவிட்டிருக்கிறோம். கைகளில் புதையல் கிடைத்தது போன்று இருந்தது!

செய்தியாளர்: - அந்த வீடியோவை நானும் பார்த்தேன், நீங்கள் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு, அவரைக் கட்டித் தழுவினீர்களே?

பெண்மணி:- எனக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. குழந்தை வந்து நின்றால், என்ன செய்வோம்? புதையல் கைகளில் கிடைத்தது போன்று இருந்தது. ஆட்டம் என்றால் ஆட்டம், அதுபோன்ற ஆட்டம். சேர்த்துப் பிடித்துக் கொண்டேன் என்னுடைய குழந்தையை.

செய்தியாளர்:- என்ன சொன்னார் அவர்? அவரிடம் ஏதாவது பேசினீர்களா?

பெண்மணி: எனக்கு கையும், வரவில்லை, வாயும் வரவில்லையே எனக்கு. எல்லோரும் தூரத்தில் இருந்துதான் பார்த்தோம். இந்தக் கொரோனா காலகட்டத்தில், வீடு வீடாக வந்து, இந்த சேரியில் அந்தக் குழந்தை வந்ததே, எங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

செய்தியாளர்:- இதற்கு முன்பு இவரைப் போல் யாராவது நேரடியாக வந்து, உங்களுடைய நிறைகுறைகளைக் கேட்டதுண்டா?

பெண்மணி: இல்லை. இந்த ஒரு பிள்ளைதான் எங்களை சந்தித்து எங்களுடைய குறைகளைக் கேட்டது. எங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். கோடான கோடி ஜனங்களுக்கு ஒரே குஷி. நான் விடுவேனா அந்தக் குழந்தையை? சேர்த்துப் பிடித்து தொள்ளாயிரம் முத்தம் கொடுக்கவேண்டும் அல்லவா!

குறைகள் நிவர்த்திசெய்யப்படும் என்றார்!

செய்தியாளர்:- இந்தப் பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து அவரிடம் யாராவது சொன்னீர்களா? ஏனென்றால், அவரே இங்கே வந்து நேரில் பார்த்தார் அல்லவா?

பெண்மணி: அவரிடம் நாங்கள் எங்களுடைய குறைகளைப் பற்றி சொன்னோம். இருட்டில் நாங்கள் இருக்கிறோம்; சாக்கடை நீரினால் கொசுத் தொல்லையிலும் அவதியுறுகிறோம் என்றோம். மின்சாரம் வரும்; உங்களுடைய குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார். அரசு மின்சார வயரில், வயர் போட்டு எடுத்தால் தான் எங்களுக்கு மின்சார வசதி. அதுவும் காலை 5.30 மணிக்கு அந்த மின்சாரமும் நின்று விடும். வெயில் காலத்தில் அதற்கும் சிக்கல் ஏற்படும். இருட்டில் கிடந்தோம்; இந்த மக்கள் இப்படி அவதியுறுகிறோமோ என்று கேட்பதற்கு எந்த நாதியும் கிடையாது. இந்தக் குழந்தை வந்தவுடன் தான், எங்களுடைய குறைகள் எல்லாம் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

“எங்கள் குறைகளையெல்லாம் தீர்த்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்” : சேப்பாக்கம் மக்கள் நெகிழ்ச்சி பேட்டி!

செய்தியாளர்:- இந்தத் தொகுதியில் நிற்கிறேன் என்று அவர் சொன்னவுடன், நீங்கள். அவர்தான் உங்கள் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்றுநினைத்தீர்களா?

பெண்மணி: இவர் வெற்றி பெற வேண்டும் என்று தான் நாங்கள் நினைத்தோம் தெய்வத்திடம் எல்லாம் வேண்டினோம்; ஜெபம் செய்தோம்; அவர் வெற்றி பெற்றுவிட்டார்; இதைவிட எங்களுக்கு என்னவேண்டும்? குறைகளைக் கேட்பது சந்தோஷமாக இருக்கிறது!

செய்தியாளர்:- இந்தத் தொகுதி யில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரம் தொடங்கிய முதல் நாள் வரை இன்றுவரை எல்லா இடங்களுக்கும் சென்று பார்வையிடுகிறார்; பொதுமக்களிடம் குறைகளைக் கேட்கிறார் என்பதை நினைத்தால் உங்களுக்கு எப்படி இருக்கிறது?

பெண்மணி: சந்தோசமாக இருக்கிறது; உற்சாகமாக இருக்கிறது. வெற்றி பெற்றவுடன் யாரும் இவர் போன்று பணிகளை செய்ததில்லை. தமிழகக் கஜானா காலியாக இருந்தபோதுதான் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார் மு.க.ஸ்டாலின் அவர்கள், இரண்டாயிரம் ரூபாய் நிவாரண நிதியாகக் கொடுத்தார். இப்படி யார் செய்வார்கள்? கொரோனா காலகட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல், மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். அந்த நிலையில், முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தார்; எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

செய்தியாளர்:- உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் பேசும் போது, ஒரு பயமோ? பாதுகாப்புடன் நின்று பேசவேண்டும் என்றோ நினைத்தீர்களா?

நம்முடைய பிள்ளை என்ற எண்ணம்தான்! பயம் இல்லை!

பெண்மணி : எந்த பயமும் கிடையாது. நம்முடைய பிள்ளைகள் எப்படி வருவார்களோ, அதுபோன்ற எண்ணம்தான் எங்களுக்கு ஏற்பட்டது. இவர்களைத் தொட்டால் கொரோனா தொற்று ஏற்படுமா? என்கிற அச்சம் இல்லை. அவரை சேர்த்துப் பிடித்தால் என்ன? முதலமைச்சராக வர வேண்டும்!

செய்தியாளர்:- உதயநிதி ஸ்டாலினைப் பொறுத்தவரையில் அவர்மீது ஒரு விமர்சனம் வைக்கிறார்களே, அவருடைய தாத்தா முதலமைச்சராக இருந்தார்; அவருடைய அப்பா முதலமைச்சராக இருக்கிறார்; ஆகவே இவர் வாரிசு அரசியல் அடிப்படையில் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று சொல்கிறார்களே, அது உண்மையா? நிஜமாகவே அவர் தொகுதிக்கு வேண்டியவற்றை செய்கிறாரா?

பெண்மணி: அவருடைய தாத்தா முதலமைச்சராக இருந்ததையும் பார்த்திருக்கிறோம்; உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய உழைப்பால்தான், திறமையால்தான் அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். நாளைக்கு அவர்தான் முதலமைச்சராக வரவேண்டும்.

கலைஞரின் பெயரனாயிற்றே அனுபவம் இல்லாமல் இருக்குமா?!

செய்தியாளர்:- ஓர் அரசியல் குடும்பத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் வந்திருக்கிறார்; அப்படியென்றால், அவர் எந்த அளவிற்கு அனுபவசாலியாக இருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

பெண்மணி: அவருடைய தாத்தா மிகப்பெரிய புத்திசாலி. அவருடைய பெயரனாயிற்றே, அனுபவம் இல்லாமல் இருக்குமா? முரசொலி பத்திரிகை படிக்கின்ற எங்களுக்கே இந்த அளவிற்கு அனுபவம் இருக்கிறது என்றால், அவருடைய பெயரனுக்கு அனுபவம் இல்லாமல் இருக்குமா? இரண்டு மடங்கு அனுபவம் இருக்குமே, இதில் எந்தவித மாற்றமும் கிடையாது.

“எங்கள் குறைகளையெல்லாம் தீர்த்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்” : சேப்பாக்கம் மக்கள் நெகிழ்ச்சி பேட்டி!

செய்தியாளர்:- கலைஞர் அவர்களுடைய ஆட்சி? இப்பொழுது மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சி? இவர்களைவிட, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக செயல்படுவாரா?

பெண்மணி: அவருடைய தாத்தாவைவிட, அப்பாவைவிட மிகச் சிறப்பாக இந்தப் பிள்ளை செயல்படும் என்று எங்களுக்கு மிகப்பெரிய அளவிற்கு நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்கெல்லாம் வீடு கட்டித் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்; கண்டிப்பாக அதன்படியே அவர் செயல்படுவார். இதுதான் இந்தப் பகுதி மக்களுடைய ஆசையாகும்.

செய்தியாளர்:- இந்தப் பகுதிமக்கள் வீடு கட்டித் தரவேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்களே, அதற்கு அவர் என்ன சொன்னார்?

பெண்மணி: கட்டித் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

செய்தியாளர்:- அதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறார்களா?

பெண்மணி: ஆமாம். வீடு வீடாகச் சென்று பெயர்களை எழுதிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்தக் குழந்தை வெற்றி பெற்றவுடன், இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். அதிகாரிகள் யாரும் இன்றும் வரவில்லை!

செய்தியாளர்:- அதிகாரிகள் வந்து உங்களையெல்லாம் சந்தித்தார்களா?

பெண்மணி: அதிகாரிகள் யாரும் வரவில்லை. இந்தப் பகுதி இளைஞர்கள்தான் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

செய்தியாளர்:- எப்பொழுது கட்டித் தருவோம் என்று சொல்லியிருக்கிறார்களா?

பெண்மணி: அது குறித்து எதுவும் சொல்லவில்லை. ஒரு வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்கிற விவரங்களை மட்டும்தான் எழுதிக்கொண்டு போயிருக்கிறார்கள்; அதிகாரிகள் யாரும் இன்னும் வரவில்லை.

செய்தியாளர்:- அன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் அவர்களைப் பார்த்த உற்சாகத்தில், அவரிடம் எவ்வளவோ சொல்ல நினைத்திருப்பீர்கள்; ஆனால், சொல்வதற்கு வார்த்தை வராமல், அவரைக் கட்டித் தழுவினீர்கள்; அவரிடம் சொல்ல நினைப்பது என்ன?

பெண்மணி: அந்தப் பிள்ளை இந்தப் பகுதியில் வீடு வீடாக வந்துப் பார்த்தார். அதுபோல, அவருடைய வீட்டிற்கு நாங்கள் எல்லாம் சென்று, அவருடைய குடும்பத்தினரோடு ஒருபோட்டோ எடுத்துக் கொள்ளவேண்டும் அப்படியில்லை என்றால்கூட, நான் அவர்களோடு ஒரு போட்டோ பிடித்துக் கொள்ள வேண்டும். அதுபோதும். ஆனால், வீடுகட்டிக் கொடுக்கும் என்னுடைய குழந்தை.

செய்தியாளர்:- அவருடைய வீட்டிற்குப் போய் போட்டோ எடுக்கவேண்டும் என்கிற ஆர்வம் உங்களுக்கு இருக்கிறது அல்லவா? தனிப்படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் உதவி செய்கிறார்!

“எங்கள் குறைகளையெல்லாம் தீர்த்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்” : சேப்பாக்கம் மக்கள் நெகிழ்ச்சி பேட்டி!

பெண்மணி: ஆமாம்; இங்கே அவரை கட்டிப் பிடித்ததற்கே அத்தனை தொலைபேசி அழைப்புகள்வந்தது. அவருடைய வீட்டிற்குச்ன்சென்று போட்டோ எடுத்துவிட்டேன் என்றால், என்னை டாப்டக்கர் ஆக்கி விடுவார்கள்.

செய்தியாளர்:- அந்தச் சம்பவம் நடந்ததற்குப் பிறகு, எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது உங்களுக்கு?

பெண்மணி: எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. உள்ளே இருந்தால்கூட வெளியே அழைத்துவந்து அதைப்பற்றி விசாரிக்கிறார்கள் `மனிதன்’ திரைப்படத்தில் ஏழைகளுக் கெல்லாம் உதவி செய்வார் என்னுடைய குழந்தை; அதேபோன்று நிஜத்திலும் செய்கிறார் என்னுடைய செல்லம்.

செய்தியாளர்:- மீண்டும் இந்தத் தொகுதிக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறாரா? ஏனென்றால், அவர் சென்ற பகுதிகளுக்கே திரும்பத் திரும்பபோகிறாரே?

பெண்மணி: வருகிறார்; திரும்பத்திரும்ப வருகிறார்; எங்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்.``ஒளி பிறந்தபோது மண்ணில் நீங்கள் பிறந்தீர்கள் இன்று நீ பிறந்தபோது, தெய்வம் நேரில் வந்ததம்மா’’ என்ற பாடலுக்கேற்ப அன்றைக்கு நேரில் வந்தார். அப்பொழுதும் இந்தப் பாடலைப்பாடினேன். இன்னொரு பாடலையும் பாடினேன். நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வளர்க என்று.

நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது!

செய்தியாளர்:- உங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறதா? கண்டிப்பாக உங்களுடைய கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றுவார் என்று?

பெண்மணி: செய்து தருவார். நாங்கள் நம்பி இருக்கிறோம். இனிமேல் அந்தக் குழந்தையை எங்கேயும் விடப்போவதில்லை. அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, ஆராரோ ஆரிரரோ என்ற பாடலைப் பாடுவோம். எங்களையும் அந்தப் பிள்ளைவிடாது; நாங்களும் அவரை விடமாட்டோம். ‘‘ஸ்டாலின் சார் வாராரு - எங்களுக்கு வீடெல்லாம் கட்டித்தருவாரு'' என்று. பள்ளிக்கூடம் திறந்து எங்களுடைய பிள்ளைகள்எல்லாம் படிக்கவேண்டும். பள்ளிக் கட்டணம் இப்பொழுது அதிகமாகக் கேட்கிறார்கள். அதையெல்லாம் அவர் பார்த்துக்கொள்வார்.

மளிகைப் பொருள்களின் விலைகள் எல்லாம் ஏறிவிட்டது; அதை கட்டுப்படுத்த வேண்டும். சமையல் எண்ணெய் விலை, கேஸ் சிலிண்டர் விலை எகிறிக் கொண்டு போகிறது. அதையும் கட்டுப்படுத்தவேண்டும்.

“எங்கள் குறைகளையெல்லாம் தீர்த்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்” : சேப்பாக்கம் மக்கள் நெகிழ்ச்சி பேட்டி!

முன்பெல்லாம் இரண்டு குடம் தண்ணீர் பிடிப்பதற்கே எங்களுக்கு கால்கள் எல்லாம் வீங்கிவிடும். ஆனால், மு.க.ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்றவுடன், இரண்டு தடவை தண்ணீர் லாரி வருகிறது. அந்தத் தண்ணீரில்தான் குளிக்கிறோம்; சமையல் செய்கிறோம். மிகவும் சந்தோசமாக இருக்கிறோம்.

தண்ணீர் பிரச்சினைத் தீர்ந்தது!

செய்தியாளர்:- அவர் வெற்றிபெற்றவுடன், உங்களுடைய தண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிட்டதா?

பெண்மணி: ஆமாம்; பசிப் பிரச்சினைகூட தீர்ந்துவிட்டது, தண்ணீர் பிரச்சினை தீராதா என்ன? முன்பெல்லாம் தண்ணீருக்காக நின்று நின்று, வயதானவர்கள் மயக்கமடைந்து கூட விழுந்து விடுவார்கள். என்னுடைய பிள்ளை ஸ்டாலின் முதலமைச்சராக அமர்ந்தவுடன், தண்ணீர் லாரி இரண்டு முறை வருகிறது.

செய்தியாளர்:- உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரிடையாக உங்களையெல்லாம் சந்தித்தது எப்படி இருக்கிறது?

இன்னொரு பெண்மணி: நாங்கள் இந்தப்பகுதியில் கவலையுடனும், கண்ணீரோடும் தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தோம். பொது குளியலறைதான் இந்தப்பகுதியில் இருக்கிறது; அவர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார், வீடுகட்டித் தருகிறோம் என்று.

ஒருவர்: இது சேரி பகுதி என்பதால்,மின்னிணைப்புதனியே தராமல் இருந்தார்கள். இப்பொழுது மின்னிணைப்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

எங்கள் கஷ்டத்தை தீர்த்து வைத்தவர்!

இன்னொரு பெண்மணி: அவருடைய அப்பாவிற்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின்தான் முதலமைச்சர். இந்தப் பகுதி மக்கள் தண்ணீருக்காக மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். எங்களுடைய கஷ்டத்தைத் தீர்த்து வைத்தவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான். பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் எப்படி இருக்கின்றன என்று ஆய்வு செய்து பார்த்த எம்.எல்.ஏ. யார் என்றால், உதயநிதி ஸ்டாலின் அவர்கள்தான். இவர்போன்று எங்கே தேடினாலும் பார்க்கமுடியாது?

செய்தியாளர்:- உதயநிதி ஸ்டாலின் அவர்கள்மீது ஒருவிமர்சனம் இருக்கிறதே, வாரிசு அரசியல் என்கிற விமர்சனம் என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஒருவர்: சாதாரண பொதுமக்கள் ,சாமானியமானவர்களை கைகொடுத்தோ, கட்டிப்பிடித்தோ பேசுவது என்பது சாத்தியப்படாத ஒன்றாக இருந்தது; அதை சாத்தியப்பட வைத்திருக்கிறார்.

இன்னொரு பெண்மணி: கொரோனா முதல் அலையில், நாங்கள் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டோம். ஆனால், இந்த கொரோனா இரண்டாம் அலையில் ,நாங்கள் சாப்பாட்டிற்கு எந்த விதமான கஷ்டமும் இல்லாமல் இருக்கிறோம். வீடெல்லாம் மளிகை சாமான்கள் இருக்கின்றன.

“எங்கள் குறைகளையெல்லாம் தீர்த்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்” : சேப்பாக்கம் மக்கள் நெகிழ்ச்சி பேட்டி!

உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து ஆதரிப்போம்!

வேறொரு பெண்மணி: ஊரடங்கில், கடந்த ஆண்டு நாங்கள் சந்தோசமாக இல்லை. இவர்கள் ஆட்சி ஏற்றவுடன், இரண்டாயிரம் ரூபாய் நிவாரண நிதியாக அளித்தார்களே, அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறோம்.

பெண்மணி: தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் இந்தப் பகுதியில் வாழும் மக்கள் தண்ணீருக்குக் கஷ்டமில்லாமல் இருக்கிறோம். எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை என்னவென்றால், எங்களுக்கெல்லாம் வீடு கட்டித்தருவார் என்பதில்.

இன்னொரு பெண்மணி: நாங்கள் எல்லாம் இப்பொழுது குடிசை வீட்டில்தான் வசிக்கிறோம். எங்கள் அண்ணன் உதயநிதி ஸ்டாலின், எங்களுக்கு நம்பிக்கைக் கொடுத்திருக்கிறார், அவுசிங் போர்டுகட்டித் தருவேன் என்று. ஆகவே, அவர்களை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம்.

இளைஞர்: முன்பெல்லாம் படிக்காத இளைஞர்களாக இருந்தார்கள் இந்தப்பகுதியில். ஆனால், இன்றைய காலகட்டத்தில், நிறைய பேர் படித்திருக்கிறோம் இளநிலை, முதுநிலை படித்தவர்களும், படித்துக்கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர், நிறைய செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்; கண்டிப்பாக செய்வார்.

எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை!

பெண்மணி: அது செய்கிறோம், இது செய்கிறோம் என்று வாக்குறுதிகள் கொடுப்பார்கள்; ஆனால், ஆட்சியில் அமர்ந்தவுடன் அதையெல்லாம் மறந்துவிடுவார்கள். ஆனால், அதுபோன்று இல்லாமல், சொன்னதை செய்தவர்கள் இவர்கள். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்; பால் விலையைக் குறைத்திருக்கிறார்; இன்னும் நிறைய செய்வேன் என்றும் சொல்லியிருக்கிறார். அவர்மீது நம்பிக்கைவைத்து நாங்கள் வாக்களித்தோம். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

தி.மு.கழகம் காலம் காலமாகதழைத்து ஓங்க வேண்டும்!

இன்னொரு பெண்மணி: இந்தத் தொகுதிக்கு அந்தப் பிள்ளை வந்து இரண்டரை மாதமாகிறது. ஊர் ஊராகச் சுற்றி, அவ்வளவு அழகாக இருந்த பிள்ளை கொஞ்சம் கறுத்தேபோய் விட்டது.

பெண்மணி: உதயசூரியன் தினமும் உதிப்பதுபோல், அவர்களுடைய வாழ்க்கை என்றும் ஒளிமயமாக இருக்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் காலம் காலமாக தழைத்து ஓங்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. இவ்வாறு அவர்கள் பேட்டியளித்தனர்.

Related Stories

Related Stories