உணர்வோசை

"இலக்கை நிர்ணயித்துவிட்டு உழைப்பதுதான் தி.மு.கழகத்தின் பாணி" : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-11

மகத்தான உறுதிமொழிகளை அளித்திருக்கும் தி.மு.க தலைவரை முதலமைச்சர் ஆக்குவது தான் தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக இருக்க முடியும்.

"இலக்கை நிர்ணயித்துவிட்டு உழைப்பதுதான் தி.மு.கழகத்தின் பாணி" : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-11
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே வணக்கம்!

தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க அறிவிப்பு ஒன்றை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

''மு.க.ஸ்டாலின் ஆகிய நான், நம் தமிழ்நாட்டின் அடுத்த பத்தாண்டுகளுக்கான எனது தொலைநோக்குப் பார்வையினை வெளியிட இருக்கிறேன். அடுத்த பத்தாண்டுகளுக்குள் அனைத்துத் துறைகளிலும் முதலிடம் பெறக்கூடிய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதற்கான எனது மாபெரும் கனவை அறிவிக்க இருக்கிறேன். இதனைச் செயல்படுத்திக் காட்டும் பொறுப்பு என்னுடையது" என்று அறிவித்து தனது இலக்கை அறிவித்துள்ளார்கள்!

* தமிழகத்தின் பொருளாதாரத்தை தரை மட்டத்துக்கு கீழே இறக்கிவிட்டார்கள். இதனை மீட்டு சிகரத்தில் வைத்தாக வேண்டும்.இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சியை கொண்டு போக வேண்டும். தனிநபர் வருமானத்தை உயர்த்துதலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதலும் அதில் முக்கியமானதாக இருக்கும்!

ஆண்டுக்கு பத்து லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்! - என்ற அறிவிப்பு தொழிலதிபர்கள், சிறுகுறு வர்த்தகர்கள், இளைஞர்கள், மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பாக அமைந்துள்ளது!

*உழவுக்கு முதன்மை தரும் அரசாக அமைப்போம். தமிழகத்தின் பயிர் பரப்பை அதிகப்படுத்துவோம். இருபோக நில உற்பத்தியையும் இரு மடங்கு ஆக்குவோம். உணவு தானிய உற்பத்தியில் தமிழகத்தை மூன்று இடங்களுக்குள் கொண்டு வருவோம்! - என்ற அறிவிப்பு விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை, மண்ணை நம்பி வாழும் மக்களுக்கு உற்சாகம் தரும் அறிவிப்பாக அமைந்துள்ளது!

* குடிமக்கள் அனைவருக்கும் சுத்தமான, சுகாதாரமான குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தருவோம். தனிநபர் பயன்பாட்டுக்கான தண்ணீர் இருப்பை உயர்த்தி, வீணாகும் தண்ணீர் அளவினைக் குறைப்போம். தண்ணீர் மறுசுழற்சியை ஊக்குவிப்போம். பசுமைப் பரப்பளவை உயர்த்துவோம்! - என்ற அறிவிப்பு அனைவரின் தாகம் தீர்ப்பதாக உள்ளது. குடிநீருக்காக தெருக்களில் அலைவதும், குடிநீருக்காக சாலை மறியல் செய்வதுமான காட்சிகளுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைக்கும்!

* அனைவருக்கும் கல்வி என்பதுதான் திராவிட இயக்கத்தின் மூலக் கொள்கை. இந்த இயக்கம் தோன்றியதன் முக்கிய நோக்கமே அனைவர்க்கும் கல்வி என்பதற்காகத்தான். கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு செலவிடப்படும் தொகையை மூன்று மடங்கு ஆக்குவோம். கற்றல் வெளிப்பாட்டுக்கான அளவீட்டில் இன்று தமிழகம் 17 ஆவது இடத்தில் இருக்கிறது. இதனை மாற்றி 10 இடங்களுக்குள் கொண்டு வருவோம். இடையில் நின்றுவிடும் மாணவர் எண்ணிக்கையை குறைப்போம். முன்மாதிரி பள்ளிகளையும், முன்மாதிரி மருத்துவமனைகளையும் உருவாக்குவோம். மருத்துவப் பணியாளர் எண்ணிக்கையை இரண்டு மடங்கு ஆக்குவோம்! - என்ற அறிவிப்புக்குள் தான் மாணவர் நலன் அடங்கியுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் என்பது எட்டாக்கனியாக மாறிக் கொண்டு இருக்கிறது. அதற்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் அறிவிப்பாக உள்ளது!

* தமிழகத்தின் அனைத்து நகரங்களையும் நவீனமானதாக ஆக்குவோம். இந்தியாவின் தலைசிறந்த நகரங்களாக தமிழக மாநகரங்களை மாற்றுவோம். குடிநீர் இணைப்புப் பெற்ற வீடுகளின் அளவை 75 சதவிகிதமாக உயர்த்துவோம். குடிசை வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்துக்கு முன்னுரிமை தருவோம்.

அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பை செயல்படுத்துவோம் என்ற அறிவிப்பு தமிழகத்தை நவீனமயமாக்கும் அறிவிப்பாக உள்ளது!

* நகர்ப்புறங்களைப் போலவே ஊரகப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக மாற்றுவோம். காங்கிரீட் வீடுகளைக் கட்டித் தருவோம். குடிநீர் இணைப்புகள், சாலைகள், வடிகால் அமைப்புகள், இணைய வசதிகள், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றையும் வழங்குவோம். அதாவது ஊரகப் பகுதிகளில் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும் - என்ற அறிவிப்பு மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றுவதாக உள்ளது. இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என்றார் காந்தி. அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதாக இது அமையும்!

"இலக்கை நிர்ணயித்துவிட்டு உழைப்பதுதான் தி.மு.கழகத்தின் பாணி" : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-11

* சமூகத்தில் ஏழை - பணக்காரர், உயர்ந்த சமூகம் - அடுத்த சமூகம், நகரவாசி - கிராமவாசி, ஆண் - பெண் என்ற எந்தப் பேதமும் இல்லாமல் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் தமிழகத்தை அமைக்க வேண்டும். சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு கொள்கை, அதன் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகைகள் அனைத்தும் சீராக வழங்கப்படும். மனிதக்கழிவுகளை மனிதரே அகற்றும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும். குடும்பத் தலைவியர்க்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் - என்ற அறிவிப்பில் தான் தமிழகத்தின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது.

இது சமூகநீதி மண். கல்வி, வேலை ஆகியவற்றோடு சேர்த்து மனிதனை அதிகாரம் பொருந்தியவனாக மாற்றியாக வேண்டிய கடமை திராவிட இயக்கத்துக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் லட்சிய முழக்கமே இந்த ஏழாவது உறுதிமொழி தான்.

- இப்படி இலக்கை நிர்ணயித்து விட்டு உழைப்பதுதான் கழகத்தின் பாணி. கழகத்தைத் தொடங்கி வைத்துப் பேசும் போது பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள்:

''சமுதாயத்துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிக்கோள் என்றார் அண்ணா. திராவிட இயக்கத்தின் அடிப்படை இலக்குகள், திமுக ஆட்சியில் தான் சட்டங்கள் ஆனது. சமூகநீதியாக இருந்தாலும் பெண்ணுரிமையாக இருந்தாலும் அவை சட்டம் ஆனது கழக ஆட்சியால் தான். பொருளாதாரத் துறையில் சமதர்மக் குறிக்கோளை வென்றெடுக்கவே பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் - நெசவாளர்கள் - ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் - ஏழைகள் - எளியோர் - ஒடுக்கப்பட்டோர் - விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக தீட்டப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பொருளாதாரச் சமதர்மக் குறிக்கோளைக் கொண்டவை தான்.

உண்மையான கூட்டாட்சி மத்தியில் உருவானால், உண்மையான சுயாட்சி மாநிலங்களில் உருவானால் அதுவே இலட்சியத் தமிழ்நாடாக இருக்கும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். இதைத் தான் 'முழுமையானதும், உண்மையானதுமான கூட்டாட்சித் தத்துவம்' என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். அத்தகைய கலைஞர் அவர்கள் கழகத்துக்கு வடித்துக் கொடுத்த இலக்கணம் என்பது, ''தமிழ் இனத்தின் மெய்க்காப்பாளனாகவும், உண்மை ஊழியனாகவும், தீங்கொறுன்று தமிழுக்கோ, தமிழ் இனத்துக்கோ வருமானால் அதனைத் தாங்காமல் பொங்கி எழுந்து காப்பாற்றத் தயங்காத போர் வீரர் பாசறையாகவும் இருப்பது திராவிட முன்னேற்றக் கழகமே" என்றார். அந்த அடித்தளத்தில் அமைந்தது தான் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்திருக்கும் அறிவிப்பு.
இத்தகைய உறுதிமொழியை அளித்திருக்கும் தலைவரை முதலமைச்சர் ஆக்குவது தான் தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக இருக்க முடியும். நன்றி வணக்கம்!

- தொடரும்...

Related Stories

Related Stories