உணர்வோசை

தமிழக மக்களை மதத்தால், சாதியால் பிரித்து குளிர்காய நினைக்கும் கூட்டம் : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-9

இந்துக்களையும் முன்னேற்றியது, இந்துக் கோவில்களையும் காப்பாற்றியது தி.மு.க தான்!

தமிழக மக்களை மதத்தால், சாதியால் பிரித்து குளிர்காய நினைக்கும் கூட்டம் : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-9
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! வணக்கம்!

திராவிட முன்னேற்றக் கழகம் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று சிலர் புலம்பி வருகிறார்கள்.

* வன்னியர், தேவர், கவுண்டர், நாடார், கவுண்டர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 21 சதவிகித இடஒதுக்கீட்டை 31 சதவிகிதம் ஆக்கியது தி.மு.க! இவர்கள் இந்துக்கள் இல்லையா?

* பள்ளர்,பறையர், அருந்ததியர் இடஒதுக்கீட்டை 16 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் ஆக்கியது திமுக!

* இந்த 18 சதவிகிதத்தில் பழங்குடியிரும் இருந்தார்கள். அவர்களுக்கு தனியாக 1 சதவிகிதம் வழங்கி, முழுமையாக 18ம் பட்டியலினத்தவருக்கு கிடைக்க வழி செய்தது திமுக! இவர்கள் இந்துக்கள் இல்லையா?

* பழங்குடியினருக்கு தனியாக ஒரு சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியது திமுக! இவர்கள் இந்துக்கள் இல்லையா?

* வன்னியர், தேவர், உள்ளிட்ட 107 சாதியினருக்கு தனியாக 20 சதவிகிதமாக பிரித்து மிகப்பிற்படுத்தப்பட்டோர் என பெயரிட்டு ஒதுக்கீடு வழங்கியது திமுக! இவர்கள் இந்துக்கள் இல்லையா?

* கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு கொண்டு வந்தது திமுக! இந்துக்கள் இல்லையா?

* அருந்ததியர்க்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கியது திமுக! இவர்கள் இந்துக்கள் இல்லையா?

* மத்திய அரசில் வன்னியர், தேவர்,கவுண்டர்,நாடார்,கவுண்டர் மக்களுக்கான பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை மண்டல் ஆணையம் மூலமாக பெற்றுத் தந்தது திமுக. மத்திய அரசுப் பணிகளில் உள்ள 27 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு காரணம் திமுக. இவர்கள் இந்துக்கள் இல்லையா?

* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் நிறைவேற்றியது திமுக! இவர்கள் இந்துக்கள் இல்லையா?

* கோவில் அறங்காவலர் குழுவில் பெண்கள், ஆதிதிராவிடர் இடம்பெற வைத்தது திமுக! இவர்கள் இந்துக்கள் இல்லையா?

* மகளிருக்கு சொத்தில் பங்குண்டு என்று சொன்னது திமுக! இவர்கள் இந்துக்கள் இல்லையா?

* பெண்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கியது திமுக! இவர்கள் இந்துக்கள் இல்லையா?

* பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது திமுக! இவர்கள் இந்துக்கள் இல்லையா?
-இப்படி உண்மையாகவே இந்துக்களுக்கு நல்லது செய்த கட்சி திமுக தான்!இந்துக்களையும் முன்னேற்றியது, இந்துக் கோவில்களையும் காப்பாற்றியது திமுக தான்!

* கோவிலுக்கு ஆபத்து, சாமிக்கு ஆபத்து, கடவுளுக்கு ஆபத்து என்று கூச்சல் போடுபவர்கள் சாமியை விட, கடவுளை விட வலிமையானவர்களா? ஆக்கவும் அழிக்கவும் வல்ல கடவுளை இவர்களால் காப்பாற்ற முடியுமா என்ன? தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கடவுளுக்கு ஆபத்து என்று கப்சா விடுகிறார்கள்.

* 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது. ஐந்து முறை ஆட்சிக்கு வந்துள்ளது. எப்போதாவது, எங்காவது எந்த ஊரிலாவது எந்தக் கோவிலாவது இடிக்கப்பட்டதா? கோவில் கருவறைக்குள் புகுந்து சாமி சிலை எடுத்து வந்து உடைக்கப்பட்டதா? அப்படி ஒரு பழி வந்துவிடக் கூடாது என்பதற்காக கோவில்களை அளவுக்கு மீறிக் காத்த ஆட்சி திமுக ஆட்சி. 'கருணாநிதியின் அறப்பணிகளைப் பார்த்து இறைவனே மகிழ்வான்' என்று சொன்னவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்!

* கோவில்களையும் அறநிலையங்களையும் ஒழுங்கு படுத்தும் இந்துசமய அறநிலையச் சட்டத்தைக் கொண்டு வந்தது நீதிக்கட்சியின் ஆட்சி. மதுரையில் இருந்து செயல்பட்டு வந்த தரும இரட்சண சபை அல்லது அறக்கட்டளை பாதுகாப்புச் சங்கம் என்ற அமைப்பு 1907 ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வந்த கருத்து இது. பெரும்பாலும் பிராமண வழக்கறிஞர்களே அந்த அமைப்பில் இருந்தார்கள்.

* இந்த சட்டமுன்வடிவை உருவாக்கிக் கொடுத்தவர் அன்றைய சட்டமன்ற சிறப்பு உறுப்பினராக இருந்த என்.கோபால்சாமி அய்யங்கார். இவர் பிற்காலத்தில் நேருவின் அமைச்சரவையில் இடம்பெற்றவர். இவரால் உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையப் பாதுகாப்புக் குழுவுக்குத் தலைவராக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான சர்.டி.சதாசிவ அய்யர் இருந்தார். இந்த சட்டத்தை மேலும் கடுமை ஆக்கியவர் - ஒரு நாளைக்கு ஆறு முறை பூசை செய்கின்றவரும் ரமணரின் சீடருமான முதல் முதலமைச்சரான ஓமந்தூர் இராமசாமி!கோவில்களைக் காப்பது அறநிலையத் துறையே! அத்தகைய அறநிலையத் துறை மூலமாக அனைத்துக் கோவில்களையும் காத்த ஆட்சி தான் திமுக ஆட்சி!

தமிழக மக்களை மதத்தால், சாதியால் பிரித்து குளிர்காய நினைக்கும் கூட்டம் : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-9

* அனைத்து விழாக்களிலும் 'நீராரும் கடலுடுத்த..' என்ற தமிழ்த்தாய்வாழ்த்துப் பாடலை பாட வேண்டும் என்று உத்தரவிட்டது திமுக!

* தஞ்சை பெரிய கோவில் வாயிலில் மாமன்னன் இராசராச சோழனின் சிலை நிறுவியது திமுக!

* தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என சட்டம் நிறைவேற்றியது திமுக!

* செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனம் அமைத்தது திமுக. அங்கு தமிழ் ஆய்வுக்காக ஒரு கோடி நிதி அளித்தவர் கலைஞர்!

* சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தது திமுக!

* சென்னை கடற்கரையில் அவ்வையார், கண்ணகி, கம்பர், வீரமாமுனிவர், போப், வ.உ.சி., பாரதியார், பாரதிதாசன் சிலைகள் அமைத்தது திமுக!

* பேருந்துகளில் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம் பெற வைத்தது திமுக!

* மாமன்னன் இராசராச சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் ஆயிரமாண்டு விழா நடத்தியது திமுக!

* தொல்காப்பியப் பூங்கா அமைத்தது திமுக!

* சென்னையில் சர்வக்ஞர் சிலை திறந்தது திமுக!

* பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறந்தது திமுக!

*கண்ணகி சிலையை அதே இடத்தில் நிறுவியது திமுக!

* பொங்கல் தினத்துக்கு மறுநாளை திருவள்ளுவர் தினமாக அரசு விடுமுறையுடன் அறிவித்தது திமுக!

* தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு சட்டமேலவை உறுப்பினர் ஆக்கியது திமுக!

* ஓடாத திருவாரூர் தேரை ஓட்டியது!

* பூம்புகார் கலைக்கூடம் நிறுவியது!

* பாரதியார் இல்லம் அரசு இல்லம் ஆனது.

* பரிதிமாற் கலைஞருக்கு நினைவு மண்டபம் அமைத்தது!

* விவேகானந்தர் சென்னையில் தங்கியிருந்த மாளிகையை ராமகிருஷ்ணா மடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியது!

* மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில் புதுப்பித்தல்!

- இப்படி தமிழ்ப் பண்பாட்டு புரட்சிக்கு அடித்தளம் அமைத்த திமுகவை குறை சொல்வதற்கு எதுவும் இல்லாத நிலையில் எதையாவது சொல்லியாக வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறார்கள்.

மொழியால், இனத்தால், நாட்டால் தமிழர்களான நம்மை தனது கட்சியின் நலனுக்காக மதத்தால், சாதியால் பிரித்து குளிர்காய நினைக்கிறது ஒரு கூட்டம்! இந்தக் கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பீர்! நன்றி வணக்கம்!

Related Stories

Related Stories