உணர்வோசை

"அன்பு.. அக்கறை.. கரிசனம்.. குழந்தைகளும் கொண்டாடும் தலைவர்” : முதல்வர் மு.க.ஸ்டாலினின் இன்னொரு பக்கம்!

அரசியலில் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை அனைவரும் அறிந்ததே. ஆனால், அவரைப் பற்றி நாம் அறியாத ஒரு மறுபக்கமும் இருக்கத்தான் செய்கிறது.

"அன்பு.. அக்கறை.. கரிசனம்.. குழந்தைகளும் கொண்டாடும் தலைவர்” : முதல்வர் மு.க.ஸ்டாலினின் இன்னொரு பக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒரே நாளில் விதை, விருட்சமாகுமா? நிச்சயம் ஆகாது. அதற்குப் பின்னால் இயற்கையின் மிக நீண்ட ஆச்சரியம் அடங்கியிருக்கும். ஒரு தலைவன் உருவாவதும் அத்தனை சுலபமல்ல. அதற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பு நிகழ்ந்திருக்கும். தளபதி மு.க.ஸ்டாலின், தி.மு.க தலைவரானதும் அப்படியான ஒன்று தான்.

உரமாக கலைஞர் வேகம், ஊற்றாக அண்ணாவின் சிந்தனை, ஒளியாக பெரியாரின் கொள்கை என விருட்சமாக நம்முன் நிமிர்ந்து நடைபோடுகிறார் தலைவர் மு.க.ஸ்டாலின். அரிமா நோக்கு கொண்ட வீர தலைவர். 75 ஆண்டுகாலமாக சுடர் விட்டுக் கொண்டிருக்கும் பேரியக்கமான தி.மு.க-விற்கு ஒளி பாய்ச்சும் சூரியக் கதிராக புறப்பட்டிருக்கிறார் தலைவர் மு.க.ஸ்டாலின்.

பாரபட்சம் பாராமல் அனைவரின் மீதும் அன்பையும், அக்கறையையும், கரிசனத்தையும் விதைத்துக் கொண்டிருக்கும் ஒரே தலைவர் அவர். இன்னும் கூடுதலாக ஒரு விஷயத்தைச் சேர்க்க வேண்டுமென்றால், நாளைய தலைமுறையான சிறார்கள் மீதும் அளவுக்கடந்த பாசத்தை காட்டிக்கொண்டிருக்கிறார். சுட்டி ஸ்டார்களின் ஃபேவரைட் ஸ்டாராகவே மாறிவிட்டார் மு.க.ஸ்டாலின். தமிழகமெங்கும் எங்கு பயணம் சென்றாலும் மக்களைச் சந்திப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அங்கிருக்கும் குழந்தைகளுடன் பேசுகிறார்.. கொஞ்சுகிறார்.. தூக்கித் தாலாட்டுகிறார்.. அன்பைக் கொட்டுகிறார் மு.க.ஸ்டாலின்.

ஓட்டுக்காக மட்டும் மக்களை சந்தித்தால் குழந்தைகளிடம் கொஞ்சிப் பேச அவசியமே இல்லை. பாரபட்சமில்லாமல் சூரியன் கதிர் வீசுவதுபோல, அன்பை ஈடு இணையில்லாமல் அனைவரிடமும் காட்டிக் கொண்டிருப்பதற்கு உதாரணம் தான் இது. சுட்டிகளின் மீதான அன்பு இன்று வந்ததல்ல… அவரின் மக்களுடனான வாழ்க்கைப் பயணத்தை ஓட்டிப் பார்க்கும் போது இதை எளிதில் புரிந்துகொள்ளலாம். சுட்டிகளின் சூப்பர் ஹீரோவாக திகழும் ஸ்டார் ஸ்டாலினைக் கொண்டாடவே இந்தத் தொகுப்பு!

"அன்பு.. அக்கறை.. கரிசனம்.. குழந்தைகளும் கொண்டாடும் தலைவர்” : முதல்வர் மு.க.ஸ்டாலினின் இன்னொரு பக்கம்!

இளம் வயதில் கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க என்ற அமைப்பை உருவாக்கியதில் இருந்து ஆரம்பித்து. இன்று தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவெடுத்துள்ளார். அரசியலில் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை அனைவரும் அறிந்ததே. ஆனால், அவரைப் பற்றி நாம் அறியாத ஒரு மறுபக்கமும் இருக்கதான் செய்கிறது. அவர் தன் பள்ளி வயது முதலே அரசியலில் அதிக ஆர்வம் காட்டினார் அதே வேலையில் எந்த இடத்திலும் தான் ஒரு பொதுப்பணிதுறை அமைச்சரின் மகன் என்பதை வெளிக்காட்டிக்கொண்டதில்லை.

என்னதான் பகுத்தறிவுவாதியாக தன்னை முன்னிருத்தினாலும் வீட்டில் உள்ளவர்கள் கோவிலுக்கு செல்வதற்கு தனிமனித சுதந்திரம் வழங்கினார். வெளியூர் செல்லும்போது ஹோட்டல் உணவுகளை பெரும்பாலும் தவிர்த்து, கழக நிர்வாகிகள் இல்லங்களில் இருந்து வரும் உணவுகளையே சாப்பிடுவார். விமான பயணத்தை தவிர்த்து, ரயில் மற்றும் காரில் தரைவழி பயணத்தை அதிகம் விரும்புவர்.

தற்போதும் கோடை காலம் வந்துவிட்டால் தனது பேரன், பேத்திகளோடு குறைந்தபட்சம் 3 நாட்களாவது சுற்றுலா சென்று அவர்களுடன் நேரத்தை செலவிடுவார்கிறார். இந்தப் பழக்கம் தான் பிரச்சாரங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் செல்லும் இடங்களில் கூட குழந்தைகளைக் கண்டதும் தானும் குழந்தையாகவே மாறி அவர்களோடு குறும்புகள் செய்யத் துவங்கி விடுகிறார்.

தனது 14 வயதில் இருந்து இந்த தமிழகத்தின் நலனுக்காவும், மக்களின் நலனுக்காகவும் அயராது உழைத்து வரும் இவர், இந்த கொரோனா காலத்திலும் கூட தனது நலனை பொருட்படுத்தாது மக்களின் குறைகளை கேட்டு அதை சரி செய்வதற்காக ஊர் ஊராக பயணித்து பெரும் கூட்டங்களை சந்திக்கிறார், அங்கெல்லாம் அவருக்கும் மக்கள் காட்டும் அன்பும் ஆதரவும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தாலும் ஆங்காங்கே அவரைக் காணக் கூடும் குழந்தைகளோடு செல்லமாக பேசி விளையாடி ஆனந்தம் கொள்கிறார். என்னதான் வேலைப் பளு அதிகமாக இருந்தாலும், குழந்தைகளுடன் பேசும்போது அவை சுக்குச் சுக்காகப் பறந்துவிடும். மு.க.ஸ்டாலினின் ஓய்வும், ரிலாக்ஸ் டைமும் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவதால் மட்டுமே நிகழ்கிறது.

"அன்பு.. அக்கறை.. கரிசனம்.. குழந்தைகளும் கொண்டாடும் தலைவர்” : முதல்வர் மு.க.ஸ்டாலினின் இன்னொரு பக்கம்!

வயதில் சிறியவர்களின் பேச்சுகளுக்குப் பெரிதாக மதிப்புக் கொடுக்காத இந்தச் சமூகத்தில் குழந்தைகள் மீது அளப்பறிய அன்பு கொண்டுள்ள தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அதற்கான தீர்வையும் கொடுப்பேன் என உறுதி கூறிவருகிறார். இந்தச் செயலை எந்தத் தலைவரும் செய்திடாதவை. செய்யவும் யோசித்திடாதவை. யாரையும் துச்சமென நினைக்காமல் அனைவரின் சொல்லுக்கும் செவிமடுத்துவருகிறார் என்பதற்கு இதைவிடப் பெரும் சான்று வேறு சொல்லத் தேவையில்லை.

மக்கள் எளிதில் அனுகக்கூடிய தலைவராக எப்போதும் இருந்து வரும் இவர், துணை முதலமைச்சராக இருந்த காலத்தில் கூட தினமும் காலை ஒரு மணி நேரம் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டபின் தான் கோட்டைக்குச் செல்வார். இப்போதும் கிராம சபைக் கூட்டம், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ போன்ற நிகழ்வுகளின் வாயிலாக அதேதான் செய்கிறார், முதலில் நம்மை நேரடியாக வந்து சந்தித்து நமது குறைகளை கேட்டறிந்துக் கொள்கிறார். பின்னர் ஆட்சிக்கு சென்றதும் 100 நாட்களுக்குள் குறைகள் அனைத்தும் சரி செய்யப்படும் எனவும் வாக்குக் கொடுத்திருக்கிறார்.

தமிழக மக்கள் மீது அக்கறையும் இம்மண்ணின் மீது பற்றுதலும் கொண்ட இவருக்கு நிகரான ஒரு ஆளுமை தற்போது இந்த தமிழகத்தில் இல்லை என்பதே உண்மை. எத்தனை பெரிய கட்சி, கோடிக்கணக்கான தொண்டர்கள் என தலைவர் ஸ்டாலினின் பொது வாழ்க்கையில் அவர் கட்டிக்காக்க பல கடமைகள் முன்னின்றாலும் சற்றும் களைப்பில்லாமல் பயணித்து அனைத்தையும் அவரால் சரிவர செய்துக்காட்ட முடியும் என்பதை அவர் தமிழகத்தின் மேயராக இருந்த காலக்கட்டங்களை எண்ணிப்பார்க்கலாம். அன்றைய காலக்கட்டத்தில் தலைவரின் செயல் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் திணறினர்.

"அன்பு.. அக்கறை.. கரிசனம்.. குழந்தைகளும் கொண்டாடும் தலைவர்” : முதல்வர் மு.க.ஸ்டாலினின் இன்னொரு பக்கம்!

கட்சியில் இளைஞர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க இளைஞரணியை தி.மு.கவின் பிரதான அணியாக மாற்றினார், இதன் விளைவாக அரசியலில் இளைஞர்களின் பங்கெடுப்பு அதிகரித்தது. தற்போது அடுத்த தலைமுறை இளைஞரணியை வழி நடத்த தனது மகன் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக்கியுள்ளார். இன்றைய இளைஞர்கள் தான் நாளைய சமூகத்தின் வழிகாட்டிகள் என்பதை போல இன்றைய குழந்தைகள் தான் நல்ல சமூகத்தின் அடையாளங்கள் என்பதை உணர்ந்தவர், குழந்தைகள் மீதும் குழந்தை நலங்களின் மீதும் அதிக கவணம் செலுத்த துவங்கினார். இன்றே ஆரோக்கியமான விதையிட்டு நல்லொழுக்கத்துடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதுவே, எதிர்காலத்தில் சிறப்பான கனிகளைத் தரும் என்பதில் முழுமையான நம்பிக்கை கொண்டவர். இன்றைய சமூகத்தை வளர்ப்பது மட்டுமல்ல, எதிர்கால சமூகமும் ஒழுங்குடன் அமையவேண்டும் என்கிற கலைஞரின் எண்ணத்தை தனயனும் மேற்கொள்கிறார்.

கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நிகழ்வில் கலந்துக் கொண்ட தலைவரிடத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர் தனது மாற்றுத்திறனாளி மகனுக்காகவும் தனது மகளின் கல்விக்காகவும் நிதியுதவி வேண்டினார். அவர்கள் துயரை உணர்ந்த தலைவர் துரிதகதியில் செயல்பட்டு பிப்ரவரி 9ஆம் தேதி தி.மு.க விருதுநகர் மாவட்ட முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம் பேசி அந்தக் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க கோரினார், மேலும் மாற்றுத்திறனாளி மகனையும் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள ஆட்சிக்கு வந்ததும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதியும் கொடுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் எனும் தலைவர் கிடைத்திருக்கிறார் என்பதால் மட்டும் இவரைக் கொண்டாடவில்லை. திராவிட இயக்கத்தின் கொள்கைகளைக் கட்டிக்காக்க கிடைத்த பெரும் சொத்து இவர் என்பதால் தான் அகமகிழ்வுடன் மக்களும் குழந்தைகளும் கொண்டாடி வருகிறார்கள். கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கலைஞர் திடலில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவரிடத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிறுமி சஞ்சனா வைத்த கோரிக்கையும், அந்த மழலையின் பேச்சும் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வைரலானது. சின்னப் பெண் தானே என்று அவர் சிறுமியின் கோரிக்கையை உதாசீனப்படுத்தவில்லை, மாறாக அவரின் கோரிக்கைக்குப் பின் இருக்கும் அவசியத்தை உணர்ந்து அழகாகவும் தைரியமாகவும் பேசிய சஞ்சனாவுக்கு அனைவரிடத்தில் இருந்தும் கைதட்டல்களை பாராட்டுகளாக வாங்கிக்கொடுத்தார்.

"அன்பு.. அக்கறை.. கரிசனம்.. குழந்தைகளும் கொண்டாடும் தலைவர்” : முதல்வர் மு.க.ஸ்டாலினின் இன்னொரு பக்கம்!

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள காயம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாங்கனாம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி வேலை பார்த்து வரும் செல்வராஜ் - அமுதா என்ற ஏழை தம்பதியர் தங்களது ஒன்றரை வயது மகள் ரட்ஷிதாவிற்கு கண்ணில் ஏற்பட்டுள்ள நூதன குறைபாடு நோயினால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்து வருவதாகவும், மரபணு பிரச்சனையால் தங்கள் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள கண் பாதிப்பிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தங்களிடம் பணவசதி இல்லை என்றும், அதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உதவ வேண்டும் எனவும் அவரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அந்தக் குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க தி.மு.க சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேடையிலேயே உறுதி அளித்திருந்தார். அதே நிகழ்வில் புகார் பெட்டியை மூடி சீல் வைக்கும்போது கூட்டத்தில் ஒரு பெண்மணி விறுவிறுவென தலைவர் மு.க.ஸ்டாலினை நோக்கி ஓடிவர சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாவலர்கள் பெண்மணியை தடுத்தும் அலறியபடி வந்ததால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவரிடம் குறையை கேட்டார்.

கண்டனூர் பகுதியை சேர்ந்த அந்தப் பெண்ணின் 4 வயதான பாலா என்ற குழந்தை கூட்டத்தில் தொலைந்துவிட்டதாக கூறி கதறினார். அதனைத் தொடர்ந்து பாதுகாவலர்கள் அப்பெண்ணை பத்திரமாக அமரவைத்து குழந்தையை தேடினர். நிகழ்ச்சி நிறைவடைவதற்குள் கூட்டத்தில் காணாமல் போன குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். குழந்தையை மீட்டதைப் போல் நாம் இழந்து நிற்கும் சுயமரியாதையையும் மீட்போம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது அரங்கில் இருந்த தொண்டர்களிடையே பெரும் ஆரவாரத்தை எழுப்பியது.

அதே வேளையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ செலவிற்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் ரூ.2 லட்சத்தை அந்த சிறுமியின் பெற்றோரிடம் அவரது வீட்டிற்கு நேரில் சென்று இன்று வழங்கினார். அப்போது ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதனை தொடர்பு கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பணம் கொடுக்கப்பட்ட தகவலை உறுதிப்படுத்திக் கொண்டு அந்தக் குழந்தையின் தாய் அமுதாவிடம் போனை கொடுக்கச் சொல்லி, குழந்தைக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து விசாரித்து நம்பிக்கை தெரிவித்ததோடு குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தி.மு.க செய்யும் என்றும் உறுதி அளித்தார்.

"அன்பு.. அக்கறை.. கரிசனம்.. குழந்தைகளும் கொண்டாடும் தலைவர்” : முதல்வர் மு.க.ஸ்டாலினின் இன்னொரு பக்கம்!

தொடர்ந்து கோவை கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட மக்களை சந்தித்த போது 1330 திருக்குறளை மனப்பாடம் செய்து சாதனை செய்த 6 வயது சிறுவன் ராகுல்ராமை மக்களின் முன் கவுரவப்படுத்தி, கூட்டத்தின் முன் பேசும் வாய்ப்பும் வழங்கினார். கலைஞர் அவர்கள் குறித்து அழகாகப் பேசிய அச்சிறுவன் இறுதியில் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் முதல் ஆளாக வந்து வாழ்த்து கூறுவேன் என மேடையிலே கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான்.

இதுதவிர பரப்புரைக்காக செல்லும் இடங்களில் எல்லாம் குழந்தைகளை கண்டால் அவர்களோடு செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். சிறிது நேரம் ஒதுக்கி அவர்களோடு பேசுகிறார். என்ன படிக்கிறார், என்னவாகப் போகிறாய், நாட்டுக்கு நல்லது செய்ய வரணும் என்கிறார்.

குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சுகிறார்; அழகழகாக தமிழில் பெயர் வைக்கிறார் என குழந்தைகளுடனான தனது அன்பை சீரான பாதையிலே அன்றிலிருந்து இன்று வரை வைத்துள்ளார். கலைஞரிடத்தில் இருந்த அதே போராட்டக் குணத்தை இந்தி எதிர்ப்பு, சி.ஏ.ஏ எதிர்ப்பு விவகாரங்களில் தலைவர் மு.க.ஸ்டாலினிடத்தில் காண முடிகிறதென்றால், குழந்தைகளோடு செல்லமாக கொஞ்சி விளையாடும் கலைஞரின் குணமும் நம் தலைவரிடத்தில் இருக்கத்தானே செய்யும்.

- சுரேஷ்

Related Stories

Related Stories