உணர்வோசை

மோடிக்கு பதிலடி கொடுக்க வடிவேலுவே போதும்.. வடக்கை அலறவிடும் தமிழகம் ! #PrayForNesamani

தமிழர்களைப் பொறுத்தவரை பா.ஜ.க ஒரு ‘போக்கிரி’ பட வடிவேலு. அவர்கள் வள்ளுவரை சொந்தம் கொண்டாடினாலும் அவர்களின் கொண்டையைக் கண்டுபிடித்து விடுவோம்.

மோடிக்கு பதிலடி கொடுக்க வடிவேலுவே போதும்.. வடக்கை அலறவிடும் தமிழகம் ! #PrayForNesamani
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஒரு நாட்டின் பிரதமர் தனது கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களோடு பதவியேற்கும் நாளில், அந்நாட்டின் ஒரு பகுதி, சினிமாக் காட்சி ஒன்றில் அடிபடும் ஒரு கதாபாத்திரத்துக்காக, சம்பந்தமே இல்லாமல் 19 வருடங்கள் கழித்து, புதிது புதிதாக கதைகளைப் படைத்து இரங்கல் வழியாக பகடி செய்துகொண்டிருக்கிறது எனில், அதுவல்லவோ Great Dictator படத்தின் சாப்ளின் கனவு கண்ட ‘இடுக்கண் வருங்கால் நகும்’ தேசம்!

# Pray_for_Nesamani அகில இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன, ஆகிக்கொண்டிருக்கும் ஒரு வாசகம். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், நாட்டின் பிரதமராக  மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கும் சமயத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க.,வுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் அவமானகரமான தோல்வியைப் பரிசளித்த தமிழகம்தான் இன்று நேசமணியை தூக்கி பிடித்துக்கொண்டிருக்கிறது. பெயருக்குக் கூட மோடியை வாழ்த்தவில்லை. வழக்கமாக இதுபோன்ற சாட்டையடிகளை சேட்டன்கள்தான் பரிசளிப்பார்கள். இந்தமுறை தமிழர்கள் செய்துள்ளார்கள்.

மோடிக்கு பதிலடி கொடுக்க வடிவேலுவே போதும்.. வடக்கை அலறவிடும் தமிழகம் ! #PrayForNesamani

மோடி தமிழகம் வரும்போதெல்லாம் #GoBackModi ஹேஷ்டேக் போட்டது எல்லாம் உண்மையான தீவிர எதிர்ப்பு அரசியலின் முகம் என்றால், இன்று பதவியேற்பைக் கண்டுகொள்ளாமல், #Pray_for_nesamani ட்ரெண்ட் செய்வது எல்லாம் உச்சபட்ச அரசியல் பகடி. உண்மையில் வட நாட்டவருக்கும், பா.ஜ.க ஆதரவாளர்களுக்கும் இது மனவலியை ஏற்படுத்தி இருக்கும்தானே !

சம்பந்தமே இல்லாமல் பழைய விஷயத்தை கொண்டு வந்து ஞாபகத்தில் நிறுத்திக் கூட எங்களின் உரையாடலின் கருப்பொருளை இந்த நாளில் பெற்றுக் கொள்வோமே தவிர, பதவியேற்பை ஆதரித்தெல்லாம் ஒருபோதும் எழுதிட மாட்டோம் என்பதே காண்ட்ராக்டர் நேசமணியால் இவ்வுலகுக்கு நாம் சொல்லும் சேதி. நிராகரிப்பு என்பதன் பச்சையான அறிவுறுத்தல்!

‘நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்த துன்பத்தை தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல்மிக்கது வேறொன்றும் இல்லை’என சொல்லிச் சென்றிருக்கிறான் வள்ளுவன். இந்திய நாட்டின் பெருந்துயர் ஒன்று தலைநகரில் அரங்கேறிக் கொண்டிருக்கையில், கடைக்கோடியில் இருக்கும் வள்ளுவ பூமி எப்படி எதிர்வினை ஆற்றிடும்? Pray for Nesamani என்றுதான்.

மோடிக்கு பதிலடி கொடுக்க வடிவேலுவே போதும்.. வடக்கை அலறவிடும் தமிழகம் ! #PrayForNesamani

சுத்தியல் விழுந்த வடிவேலுவாக இந்தியாவை எடுத்துக் கொள்ளலாம். அல்லது இந்திய ஜனநாயகத்தை எடுத்துக் கொள்ளலாம். எதுவாகினும் தமிழனை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி புளிப்பு மாங்காய்தான். பா.ஜ.க அரசு பதவியேற்கும் நாளில், உலக அரங்கில் இந்தியா பேசும் ட்விட்டர் மொழி Pray for Nesamani என்பதை விட பாஜக அரசுக்கு என்ன அவமானம் இருந்திட முடியும்? மொத்த நாட்டின் வரலாற்றையும் அரசியலையும் அங்கதத்துடன் அணுக வேண்டுமெனில் அதற்கென்ற வாசிப்பு பழக்கமும் அரசியல் புரிதலும் எத்தனை அடர்த்தியாக இருந்திருக்க வேண்டும்?

அந்த அடர்த்தியை மோடி வகையறாக்களால் புரிந்து கொள்ளவே முடியாது. இப்போது கூட பாருங்கள், ஒரு பக்கத்தில், ‘Look these guyz from south are not at all responding to the Prime Minister’s swearing in ceremony’ எனப் புலம்பித் தள்ளுவார்கள். தோளை இறக்கி, வாயைக் கோணி, இளக்காரமாக நாமும், ‘லேடன் கிட்ட பேசறியா... பின் லேடன்!’ என வடிவேலு வசனம் பேச வேண்டும்.

இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாட்டின் அரசியல், வடிவேலு போல். எதைக் கொண்டும் அசைக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. தமிழர்களை பொறுத்தவரை பா.ஜ.க ஒரு ‘போக்கிரி’ பட வடிவேலு. வள்ளுவரை சொந்தம் கொண்டாடினாலும் அவர்களின் கொண்டையை மறக்காமல் கண்டுபிடித்து விடுவோம்.

சரி விடுங்கள். யாரோ எங்கேயோ பதவியேற்பதற்கு நாம் ஏன் எதிர்வினை ஆற்ற வேண்டும்? தமிழகம் கண்ட ஒப்பற்ற காண்ட்ராக்டர் நேசமணிக்கு நியாயம் கிடைக்கப் போராடுவோம். #Pray_for_Nesamani !

banner

Related Stories

Related Stories