முரசொலி தலையங்கம்

“வேறு எந்த பெரிய மாநிலமும் பெற்றிராத அபரிமிதமான வளர்ச்சி!” : திராவிட மாடலை புகழந்த முரசொலி தலையங்கம்!

“முதலமைச்சரின் மகத்தான சாதனை!” என தலைப்பிட்டு தமிழ்நாட்டின் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்.

“வேறு எந்த பெரிய மாநிலமும் பெற்றிராத அபரிமிதமான வளர்ச்சி!” : திராவிட மாடலை புகழந்த முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 11.19 விழுக்காடு என்ற அளவுக்கு உயர்த்தி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இது எந்த மாநிலமும் அடையாத சாதனையாகும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் இந்த வெற்றியின் அருமை தெரியும். இந்தியாவிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாகத் திகழ்கிறது தமிழ்நாடு. இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெற்றிராத அபரிமிதமான பெரும் வளர்ச்சி!

அமைச்சக ஒன்றியத்தின் தரவுகளின்படி, 2024-25 ஆம் ஆண்டுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் வளர்ச்சி புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன.

•உத்தரப்பிரதேசம் – 8.99 விழுக்காடு.

•ஆந்திரப் பிரதேசம் – 8.21 விழுக்காடு.

•தெலுங்கானா – 8.08 விழுக்காடு.

•கர்நாடகா – 7.37 விழுக்காடு.

•மகாராஷ்டிரா – 7.27 விழுக்காடு.

ஆனால், தமிழ்நாடு 11.19 விழுக்காடு ஆகும். தமிழ்நாட்டின் வெற்றி, தமிழ்நாட்டை இந்தளவுக்கு உயர்த்திய தமிழ்நாடு முதலமைச்சரின் வெற்றி என்பது இதுதான்.

இந்தியாவின் வளர்ச்சியையும் தமிழ்நாடு அடைந்து வரும் வளர்ச்சியையும் பாருங்கள்.

•இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது 2021 –22 ஆகிய ஆண்டுகளில் 9.7 விழுக்காடாக இருந்தது. அப்போது தமிழ்நாடு 7.89 விழுக்காடாக இருந்தது.

•இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது 2022 –23 ஆகிய ஆண்டுகளில் 7.6 விழுக்காடாக இருந்தது. அப்போது தமிழ்நாடு 6.17 விழுக்காடாக இருந்தது.

•இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது 2023 –24 ஆகிய ஆண்டுகளில் 9.2 விழுக்காடாக இருந்தது. அப்போது தமிழ்நாடு 9.26 விழுக்காடாக உயர்ந்தது.

•இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது 2024 –25 ஆகிய ஆண்டுகளில் 6.5 விழுக்காடாக இருக்கிறது. தற்போது தமிழ்நாடு 11.19 விழுக்காடாக உயர்ந்து விட்டது. இதுதான் தமிழ்நாட்டின், முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த வெற்றியாகும்.

“வேறு எந்த பெரிய மாநிலமும் பெற்றிராத அபரிமிதமான வளர்ச்சி!” : திராவிட மாடலை புகழந்த முரசொலி தலையங்கம்!

14 ஆண்டுகளுக்குப்பின், மீண்டும் இரட்டை இலக்க வளர்ச்சியைத் தமிழ்நாடு எட்டியுள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய ஓர் வெற்றியை அடைந்தவர் அன்றைய முதலமைச்சர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் தான்.

2010–11 நிதியாண்டில் தலைவர் கலைஞர் ஆட்சியில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 13.12 விழுக்காடாக இருந்தது. இப்போது இரட்டை இலக்கை இரண்டாம் கலைஞராம் இன்றைய முதலமைச்சர் அவர்கள் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்கள்.

2010 –11 ஆம் ஆண்டுகளில் 13.12

2011 –12 ஆம் ஆண்டுகளில் 7.4

2012 –13 ஆம் ஆண்டுகளில் 5.37

2013 –14 ஆம் ஆண்டுகளில் 7.6

2014 –15 ஆம் ஆண்டுகளில் 4.92

2015 –16 ஆம் ஆண்டுகளில் 8.24

2016 –17 ஆம் ஆண்டுகளில் 7.15

2017 –18 ஆம் ஆண்டுகளில் 8.59

2018 –19 ஆம் ஆண்டுகளில் 7.01

2019 –20 ஆம் ஆண்டுகளில் 3.25

2020 –21 ஆம் ஆண்டுகளில் 0.07

2021 –22 ஆம் ஆண்டுகளில் 7.89

2022 –23 ஆம் ஆண்டுகளில் 6.17

2023 –24 ஆம் ஆண்டுகளில் 9.26

2024 –25 ஆம் ஆண்டுகளில் 11.19

– இந்த பட்டியலைப் பாருங்கள். தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் 13.12 விழுக்காடாக இருந்ததை தரை மட்டத்துக்கு இறக்கியது அ.தி.மு.க. ஆட்சி.ஜெயலலிதா படுகுழியில் தள்ளினார். பழனிசாமி, பாதாளத்துக்கே கொண்டு போனார். வெட்கமே இல்லாமல், ‘என் காலத்தில் தமிழ்நாடு வளர்ந்தது’ என்று அவரால் மக்களைப் பார்த்து எப்படிச் சொல்ல முடிகிறது.

தமிழ்நாடு அரசு, தனக்கென ஒரு கணிப்பாய் முன்பு வெளியானது. அதைவிட அதிகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது தமிழ்நாடு. முன்பு 9.69 விழுக்காடு என்று மதிப்பிடப்பட்ட 2024– 25ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநிலப் பொருளாதார வளர்ச்சி விகிதம் தற்போது 11.19 ஆக அதிகரித்து வருகிறது.

சென்னை பொருளாதாரப் பள்ளியின் முன்னாள் இயக்குநர் கே.ஆர். சண்முகம், “மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் துறைகளின் வலுவான செயல்திறனே வளர்ச்சிக்குக் காரணம்” என்று கூறுவதாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“வலுவான ஏற்றுமதி செயல்திறன் மூலம் மாநிலம் தொடர்ந்து அதன் வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டது, 2031–32 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் இலக்கை அடையும் பாதையில் உள்ளது. அதிக வளர்ச்சி விகிதம் குறைந்த நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறை மற்றும் கடன்–GSDP விகிதம் போன்ற நிதி குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகைக்கும். 2024–25 ஆம் ஆண்டில் இருந்ததை விட அனைத்து முக்கிய துறைகளும் அரை சதவீதம் அதிகமாக வளர்ந்தன, நடப்பு ஆண்டில் (2025–26) மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி சுமார் 12 விழுக்காடு ஆக இருக்கலாம்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

•இந்திய அளவை விடதமிழ்நாடு அதிகம் –

•மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு அதிகம் –

•தமிழ்நாட்டில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகம் – என்று சொல்லத்தக்க வகையில் இதனை சாத்தியப்படுத்திய முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின்சார்பில் நன்றியைத் தெரிவிப்போம்.

banner

Related Stories

Related Stories