முரசொலி தலையங்கம்

தி.மு.க ஆட்சியைக் குறை சொல்லி அறிக்கை விட பழனிசாமி தகுதி உண்டா? : வெளுத்து வாங்கிய முரசொலி!

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் மாட்சியை உறுதி செய்ததாக தனக்குத் தானே தோளில் தட்டிக் கொண்டுள்ளார் பழனிசாமி.

தி.மு.க ஆட்சியைக் குறை சொல்லி அறிக்கை விட பழனிசாமி தகுதி உண்டா? : வெளுத்து வாங்கிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி (14-05-2024)

பழனிசாமிக்கு தகுதி உண்டா?

மூன்றாண்டு காலம் மக்கள் மனம் மகிழ ஆட்சி நடத்தி இருக்கிறார் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் முன்னாள்

முதலமைச்சர் பழனிசாமி. தன்னிடம் கிடைத்த அதிகாரத்தை நான்காண்டு காலம் எந்த நன்மையும் செய்யாமல் வைத்திருந்த பழனிசாமிக்கு, இன்றைய முதலமைச்சரை அனைத்து தரப்பு மக்களும் வாழ்த்துவதைக் கண்டு பொருத்துக் கொள்ள முடியவில்லை.

எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி இருக்கிறார் பழனிசாமி. எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறேன் என்பதை முதலமைச்சரே பட்டியல் போட்டு சொல்லி இருக்கிறார். அது எதையும் பழனிசாமி படிக்கவில்லை போலும்.

நான்காம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்ட காணொலியில், “எனது ஆட்சியின் சாதனைகளை நான் சொல்வதை விட பலனடைந்த மக்கள் சொல்வதைக் கேளுங்கள்” என்று சொல்லி பொதுமக்களின் வாக்குமூலங்களைத் தான் முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு இருந்தார்கள். பலனடைந்த மக்கள் சொல்வதையாவது கேட்க பழனிசாமியின் நெஞ்சில் ஈரம் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வாக்குறுதி மூலமாகவும் பலனடைந்த ஒருவர், ஒட்டுமொத்த பலனை நெஞ்சார வாழ்த்திச் சொன்னார்கள். இதுகூட பழனிசாமியின் புத்தியில் போய்ச் சேரவில்லை.

2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதியையும் பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சி நிறைவேற்றவில்லை என்பது தான் உண்மை. இத்தகைய பழனி­சாமிக்கு தி.மு.க. ஆட்சியை பற்றிப் பேச தகுதி உண்டா?

ஏதோ இவர் திறமையான ஆட்சியைக் கொடுத்ததைப் போல அந்த அறிக்கையில் சொல்லிக் கொள்வதைத் தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை தரை மட்டத்துக்கு தாழ்த்தியது தான் பழனிசாமியின் சாதனை ஆகும். ‘இந்தியா டுடே’ பத்திரிகை எடுத்த புள்ளிவிபரத்தின் படி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களிலும் இவர் தான் கடைசியாக இருந்தார்.

தி.மு.க ஆட்சியைக் குறை சொல்லி அறிக்கை விட பழனிசாமி தகுதி உண்டா? : வெளுத்து வாங்கிய முரசொலி!

7.12.2020 நாளிட்ட ‘இந்தியா டுடே’ ஏடு வெளியிட்ட ஆய்வு அறிக்கைப் படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாடு எந்த நிலைமையில் இருந்தது என்பதை அறியலாம்.

* உள்கட்டமைப்பில் 20 வது இடம்

* ஐந்து ஆண்டுகளின் செயல்பாட்டில் 19 வது இடம்

* விவசாயத்தில் 19 ஆவது இடம்

* சுற்றுலாவில் 18 ஆவது இடம்

* உள்ளடக்கிய வளர்ச்சியில் 18 ஆவது இடம்

* தொழில் முனைவோர் முன்னேற்றத்தில் 14 ஆவது இடம்

* ஆட்சி நிர்வாகத்தில் 12 ஆவது இடம்

* தூய்மையில் 12 ஆவது இடம்

* சுகாதாரத்தில் 11 ஆவது இடம்

* கல்வியில் 8 ஆவது இடம்

- இதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கிய இடம்! – இதை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி.

பழனிசாமி ஆட்சி தான் செயலற்ற, பயனற்ற, மக்கள் விரோத ஆட்சியாக நடந்தது.

அவரது அறிக்கையில் சொல்லும் அனைத்தும் அவரது ஆட்சியில் தான் இருந்தன. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சாதி மத மோதல்கள், போதைப் பொருள் விற்பனை, மணல் கொள்ளை ஆகியவை அவரது ஆட்சியில் தான் அதிகம் நடந்தன.

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் மாட்சியை உறுதி செய்ததாக தனக்குத் தானே தோளில் தட்டிக் கொண்டுள்ளார் பழனிசாமி.

* கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த 11 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மூன்று குற்றவாளிகள் உயிரிழந்ததோடு, 12 காவல் துறையினர், இரண்டு பொதுமக்கள் மற்றும் ஒரு குற்றவாளி என 15 பேர் காயமடைந்துள்ளனர்.

* 2020ஆம் ஆண்டு நடந்த ஐந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒரு குற்றவாளி உயிரிழந்ததோடு, இரண்டு காவல் துறையினர், ஒரு குற்றவாளி என மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

* 2021ஆம் ஆண்டு நடந்த ஆறு துப்பாக்கிச் சூடு சம்பவங்க­ளல் ஐந்து குற்றவாளிகள் உயிரிழந்ததோடு, ஆறு காவல் துறையினர், இரண்டு குற்றவாளிகள் என எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 22.05.2018 அன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைதி வழியில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொலை செய்தது தான் பழனி சாமியின் சாதனை ஆகும்.

2019ஆம் ஆண்டு மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 11 காவல் நிலையங்களில் 11 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 2020ஆம் ஆண்டு நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 6 காவல் நிலையங்களில் 6 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 2021ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, கடந்த ஆட்சிக் காலத்தில் 06.02.2021 அன்று திருச்சி மாவட்டம் ஐம்புநாதபுரம் காவல் நிலையத்தில் ஒரு காவல் மரணம் நிகழ்ந்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தவர்களையே தாக்கிய அ.தி.மு.க. பிரமுகரைக் காப்பாற்றியது தான் பழனிசாமியின் சாதனை ஆகும். எனவே பழனிசாமிக்கு தி.மு.க. ஆட்சியைக் குறை சொல்லி அறிக்கை விடத் தகுதி உண்டா?

banner

Related Stories

Related Stories