முரசொலி தலையங்கம்

வட மாநிலங்களில் வெடிக்கும் போராட்டம் : “புதைமணலில் பாஜக-வின் கால்கள் சிக்கிக் கொண்டு விட்டது” - முரசொலி!

வட மாநிலங்களில் பா.ஜ.க.வை பெரும் பள்ளத்தில் தள்ளிக் கொண்டு இருக்கிறது ராஜ்புத் மக்களின் போராட்டம்!

வட மாநிலங்களில் வெடிக்கும் போராட்டம் : “புதைமணலில் பாஜக-வின் கால்கள் சிக்கிக் கொண்டு விட்டது” - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ராஜ்புத் மக்கள் போராட்டம்!

வட மாநிலங்களில் பா.ஜ.க.வை பெரும் பள்ளத்தில் தள்ளிக் கொண்டு இருக்கிறது ராஜ்புத் மக்களின் போராட்டம்!

வாய்க்கு வந்ததைப் பேசுவது பா.ஜ.க.வினருக்கு புதியதல்ல. அடுத்தவர்கள் மீதான வெறுப்புணர்வைத் தூண்டுவதில்தான் தங்களது அரசியலே அடங்கி இருப்பதாக நினைக்கும் கட்சி அது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் தான் இத்தகைய வெறுப்பு அரசியல் களங்கள் ஆகும். குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் என்ற மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார் புருஷோத்தம் ரூபாலா. இவர் ஒன்றிய அமைச்சராக இருக்கிறார்.

மார்ச் 22 ஆம் தேதி ராஜ்கோட் தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்த புருஷோத்தம் ரூபாலா. ராஜ்புத் மக்களை மிகமிக இழிவாகப் பேசி இருக்கிறார். ராஜ்புத் பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். அவர் என்ன சொன்னார் என்பதை மறைமுகமாகக் கூட இங்கே பதிவு செய்ய முடியாத அளவுக்கு மோசமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். இது ராஜ்புத் மக்களை, குறிப்பாக அந்த இனப்பெண்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

வடமாநிலங்கள் முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிராக ராஜ்புத் மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். புருஷோத்தம் ரூபாலாவை கைது செய்ய வேண்டும். அவரை இப்போதே ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தார்கள். வழக்கம் போல் மோடியும், அமித்ஷாவும் இதைக் கண்டு கொள்ளவில்லை. ராஜ்புத் மக்களின் போராட்டத்தையும் மீறி வேட்புமனு தாக்கல் செய்து விட்டார் புருஷோத்தம் ரூபாலா. அவர் ஊர் ஊராக பிரச்சாரம் செய்ய போய்க் கொண்டு இருக்கிறார். வட மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியதும் சென்னைக்கு வந்து பா.ஜ.க.வுக்கு பிரச்சாரம் செய்தார் அவர்.

வட மாநிலங்களில் வெடிக்கும் போராட்டம் : “புதைமணலில் பாஜக-வின் கால்கள் சிக்கிக் கொண்டு விட்டது” - முரசொலி!

பா.ஜ.க.வுக்கு எதிராக ராஜ்புத் மக்களும், அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை வட மாநிலங்களில் நடத்தி வருகிறார்கள். ஏப்ரல் 7 ஆம் தேதி பிரதமர் மோடி, உ.பி. சென்றிருந்தார். அன்றைய தினம் சஹரன்பூர் மாவட்டத்தில் ராஜ்புத்திரர்களின் மகா பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதில் 14 மாநிலங்களைச் சேர்ந்த அந்த இன மக்கள் கலந்து கொண்டார்கள். பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கக் கூடாது. தகுதியானவர் என நினைக்கும் வேறு கட்சி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று இக்கூட்டம் தீர்மானித்தது. அடுத்த கூட்டம் ஏப்ரல் 16 அன்று நடைபெற்றது.

ஏப்ரல் 14 ஆம் தேதி ராஜ்கோட்டில் பா.ஜ.க.வுக்கு எதிராக ராஜபுத்திரர்கள் மாபெரும் பேரணி நடத்தினர். இதில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். நாடு முழுக்க எந்த மாநிலத்திலும் ராஜபுத்திரர்கள் பா.ஜ.க.விற்கு வாக்களிக்கக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பேரணியில் லட்சக்கணக்கான ராஜபுத்திர சமூகத்தினர் கலந்துகொண்டனர். சில பெண்கள் தீக்குளிக்க முயற்சித்து. அவை தடுக்கப்பட்டது. ஊர்வலம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலை தளங்களில் வைரல் ஆனது.

ராஜ்புத் சங்கலான் சமிதி தலைவர் கரன்சிங் சாவ்தா. "ஏப்ரல் 19-க்குள் ரூபாலாவின் வேட்புமனுவை பா.ஜ.க. வாபஸ் பெறவில்லை என்றால். எங்கள் போராட்டத்தை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்வோம்.." என்று தெரிவித்துள்ளார். புருஷோத்தம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தீக்குண்டத்தில் இறங்குவோம் என்று 21 பெண்கள் அறிவித்துள்ளார்கள். ஜம்முவைச் சேர்ந்த ராஜ்புத் சமூக இளைஞர் அமைப்பு ஒன்று ரூபாலாவின் நாக்கை அறுத்து வருவோருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. ராஜ்புத் இன பெண்கள் விளக்கு வழிபாடு நடத்தி பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிப்போம் என்று முடிவு செய்தார்கள். பல்வேறு ஊர்களில் விளக்கு வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

வட மாநிலங்களில் வெடிக்கும் போராட்டம் : “புதைமணலில் பாஜக-வின் கால்கள் சிக்கிக் கொண்டு விட்டது” - முரசொலி!

ராஜ்புத் மக்கள் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உ.பி., பீகார். உத்தரகண்ட், அரியானா, டில்லி, பஞ்சாப். ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம். ஜார்க்கண்ட். மகாராஷ்டிரா ஆகிய பல்வேறு மாநிலங்களில் பரந்து வாழ்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு கடந்த காலத்தில் கை கொடுத்த மாநிலங்கள் இவை. பா.ஜ.க.வுக்கு கடந்த தேர்தல்களில் கை கொடுத்த சமூகம் இது. இவர்களது வாக்குகள் முழுமையாக பா.ஜ.க.வுக்கு சரியப் போகிறது.

அடுத்த தவறையும் செய்தது பா.ஜ.க. தலைமை. ராஜ்புத் சமூக அமைப்பான கர்னி சேனாவின் தலைவராக இருப்பவர் ராஜ் ஷெகாவத். இவர் பா.ஜ.க.விலும் செயல்பட்டு வந்தார். ஒன்றிய அமைச்சர் புருஷோத்தமை கைது செய்யாத நிலையில் பா.ஜ.க.வில் இருந்து ராஜ் ஷெகாவத் விலகினார். உடனடியாக அவர் பா.ஜ.க. அரசால் கைது செய்யப்பட்டார். வன்முறையைத் தூண்டுவதாக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதுவும், பா.ஜ.க. மீதான கோபம் அதிகமாகக் காரணம் ஆகும். இவரை விடுதலை செய்யக் கோரி குஜராத் மாநிலம் முழுக்க போராட்டம் நடைபெற்றது.

அகில பாரதிய ராஜ்புத் சமாஜ் அமைப்பைச் சேர்ந்த ஜெய்பால்சிங்வாலா கூறுகையில்,"இப்போது இந்த சண்டை ராஜ்கோட் அல்லது குஜராத்தில் மட்டும் இல்லை. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார் என 14 மாநிலங்களிலும் ராஜ்புத் சமூகத்தினரைக் கூட்டுவோம். பா.ஜ.க.விற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் பரவும்" என அறிவித்தார்.

மே 7 ஆம் தேதி ஒரே கட்டமாக குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கப் போகிறது. சர்பதா என்ற இடத்தில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் ராஜ்புத்துகள் நுழைந்து போராட்டம் செய்தார்கள். உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற மகா பஞ்சாயத்தில் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தாமரை சின்னத்தில் எக்ஸ் சின்னம் போட்டு வைத்திருந்தார்கள். ராஜ் புத்துகள் மட்டுமல்ல 36 சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எங்களோடு சேர்ந்து போராடுகிறார்கள் என்று கிசான் மஸ்தூர் சங்கத் தலைவர் பூரன் சிங் அறிவித்துள்ளார்.

புதைமணலில் பா.ஜ.க.வின் கால்கள் சிக்கிக் கொண்டு விட்டது..

முரசொலி தலையங்கம்

23.04.2024

banner

Related Stories

Related Stories