முரசொலி தலையங்கம்

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை : கூட்டாட்சியை உருவாக்கும் மக்கள் அறிக்கை - முரசொலி பாராட்டு !

ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போகும் ‘இந்தியா’ கூட்டணி செல்லும் பாதைக்கு வழிகாட்டுவதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை : கூட்டாட்சியை உருவாக்கும் மக்கள் அறிக்கை - முரசொலி பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (22.3.2024)

கூட்டாட்சியை உருவாக்கும் மக்கள் அறிக்கை!

2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் - -– தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

« மாநில சுயாட்சியை மதிக்கும் கூட்டாட்சி அரசை உருவாக்குவோம்!

« மதச்சார்பற்ற இந்தியக் கூட்டணி அரசை உருவாக்குவோம்!

« சமூகநீதியைப் போற்றுவோம்! சமத்துவம் வளர்ப்போம்!

« ஜனநாயகம் தழைத்தோங்க சளைக்காமல் உழைப்போம்!

- – ஆகிய முழக்கங்களுடன் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.

கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழு, தமிழ்நாடு முழுவதும் சென்று பல்வேறு தரப்பினரைச் சந்தித்து அவர்களது எண்ணங்களை உள்வாங்கி இந்த அறிக்கையை தயாரித்துள்ளது. அதனால்தான் இதனை ‘மக்கள் அறிக்கை’ என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வர்ணித்துள்ளார்கள்.

இந்த அறிக்கையானது தமிழ்நாட்டுக்கு மட்டுமான அறிக்கையாக இல்லை. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கான அறிக்கையாக அமைந்துள்ளது. ‘அதிகமாக ஒன்றிய அரசைப் பற்றியே இருக்கிறதே?’ என்று நிருபர் ஒருவர் கேட்டபோது, “ஆமாம்! நாங்கள்தானே ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போகிறோம்” என்று பளிச்சென்று பதில் அளித்தார் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போகும் ‘இந்தியா’ கூட்டணி செல்லும் பாதைக்கு வழிகாட்டுவதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

இந்தியா இதுகாலம் காப்பாற்றி வந்த அனைத்து மாண்புகளையும் சிதைத்து விட்டது பா.ஜ.க. அதனை மீட்டெடுக்க வேண்டிய கடமை ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியின் ஆட்சிக்கு இருக்கிறது. அதனைதான்

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை : கூட்டாட்சியை உருவாக்கும் மக்கள் அறிக்கை - முரசொலி பாராட்டு !

தி.மு.க. அறிக்கை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது.

« இந்திய அரசியலமைப்பு இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி அமைப்பை அழிக்க எதையும் செய்வார்கள்.

« அனைத்துப் பிரச்சினைகளையும் மிகக் கவனமாகப் பரிசீலித்து, இந்தியாவை ஜனநாயகக் கூட்டாட்சிக் குடியரசாக நிலைநிறுத்துவதில்

தி.மு.க. உறுதி கொண்டுள்ளது. எனவே, பாசிச வெறிபிடித்த, மத ஆதிக்கவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்திட அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களைத் தேர்தல் அறிக்கையில் இணைத்து வலியுறுத்துகிறது.

« மாநிலங்களை வலுவிழக்கச் செய்யவும், அவற்றின் பங்கைக் குறைக்கவும் அனைத்து முயற்சிகளும் பா.ஜ.க அரசால் மேற்கொள்ளப்படுகின்றன.

« தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் நன் மதிப்பினைக் குறைக்கும் கருவியாக ஆளுநர், சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை போன்ற ஒன்றிய அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

« மாநிலங்களில் நிதி மேலாண்மையில் தலையிடுவதுடன் உரிய நியாயமான நிதிப் பகிர்வை வழங்குவதில்லை.

« மாநில சுயாட்சி மற்றும் மாநில உறவுகள் குறித்து ஆராய இதுவரை அமைக்கப்பட்ட நான்கு குழுக்களின் பரிந்துரைகளையும் முழுமையான விவாதங்களுக்கு உட்படுத்தி மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெற்றிடும் வண்ணம், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை தி.மு.கழகம் ஒன்றியத்தில் அமையும் புதிய ஆட்சியைத் தொடர்ந்து வலியுறுத்தும்.

« ஆளுநர் பதவி தேவையில்லை.

« ஆளுநர் பதவி இருக்கும் வரை மாநில ஆளுநர்களை நியமிக்கும்போது அந்தந்த மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைகளைப் பெற்று, ஆளுநர்களை ஒன்றிய அரசு நியமிக்க வேண்டும்.

« சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில ஆளுநர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 361ஐ நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநரும் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டவர் என்ற நிலை உருவாக்கப்படும்.

« மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைத்திட வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 356ஐ அகற்றிட தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்.

« மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்குழு அமைக்கப்படும்.

« பா.ஜ.க. அரசால் கலைக்கப்பட்ட ஒன்றிய திட்டக்குழு மீண்டும் அமைக்கப்படும். மாநில அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில் திட்டங்கள் வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதுள்ள நிதி ஆயோக் கலைக்கப்படும். -– ஆகியவை கூட்டாட்சியை உருவாக்கும் குரல்களாக அமைந்துள்ளன.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை : கூட்டாட்சியை உருவாக்கும் மக்கள் அறிக்கை - முரசொலி பாராட்டு !

“இனியும் மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல. பா.ஜ.க. ஆட்சியை அகற்றியாக வேண்டும் என்ற அரசியல் எண்ணத்துடன் இந்தியா கூட்டணி அகில இந்தியா முழுமைக்கும் அமைந்துள்ளது. நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக அமைய இருக்கும் புதிய ஆட்சியானது, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை மதிக்கும் ஆட்சியாக அமையும். மாநிலங்களை அரவணைத்துச் செயல்படும் ஆட்சியாக அமையும். சமத்துவ -– சமதர்ம எண்ணம் கொண்ட ஆட்சியாக அமையும். அனைவரும் ஒன்று என எண்ணும் சகோதரத்துவ ஆட்சியாக அமையும்.

மொத்தத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காத்து - –மக்களாட்சி மாண்பைச் செம்மைப்படுத்தும் ஆட்சியாக அமையும்” என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்கள்.

அதனை நிறைவேற்றும் செயல்திட்டங்களைக் கொண்டதாக தி.மு.க. தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. அரசியல் கோரிக்கைகளை அரசு வடிவமாக மாற்றுவதற்கு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி பாதை அமைக்கட்டும்.

banner

Related Stories

Related Stories