முரசொலி தலையங்கம்

“அர­சி­யல் குளிர்காய்வதற்காக மக்களை எரிக்கும் பாஜக அரசை அம்பலப்படுத்திய இளைஞரணி மாநாடு’’ - முரசொலி !

"கலவரத் தீயில் அரசியல் குளிர்காய்வதற்காக, மக்களை விறகுக் கட்டைகள் போல எரிக்கும் தன்மையுடன் ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது" என்பதை இளைஞரணி மாநாட்டு தீர்மானங்கள் அம்பலப்படுத்தி இருக்கிறது.

“அர­சி­யல் குளிர்காய்வதற்காக மக்களை எரிக்கும் பாஜக அரசை அம்பலப்படுத்திய இளைஞரணி மாநாடு’’ - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திசையைத் தீர்மானிக்கும் தீர்மானங்கள்!

திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்க வகையில் இளைஞரணி யின் இரண்டாவது மாநில மாநாட்டை எழுச்சியுடன் நடத்திக் காட்டி இருக்கிறார் இளைஞரணிச் செயலாளர் - மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள். கழகத் தலைவர் அவர்கள் சொன்னதைப் போல, 'இனி இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது" என்ற அளவுக்கு நடந்திருக்கிறது இளைஞர் அணி மாநாடு. 'மாநில உரிமை மீட்பு மாநாடாக நடத்திய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள், மாநாட்டில் முன்மொழிந்துள்ள 25 தீர்மானங்கள் இந்தியா செல்ல வேண்டிய திசையைத் தீர்மானிக்கும் தீர்மானங்களாக அமைந்துள்ளன.

கடந்த பத்தாண்டு கால மக்கள் விரோத பா.ஐ.க. ஆட்சியில் பறிக்கப்பட்ட, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் ஜனநாயகப் பாதுகாவலராகத் திகழ்ந்து வரும் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள், இளைஞரணி மாநாட்டை மாநில உரிமை மீட்பு மாநாடாக நடத்த உத்தரவிட்டதே, இந்தியா முழுமைக்குமான செய்தியாக அமைந்துவிட்டது. அதனால்தான் தி.மு.க. சார்பில், தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநாடாக இருந்தாலும், அது இந்தியாவுக்கான மாநாடாக நடைபெற்றுள்ளது. இந்தியா முழுமைக்குமான தீர்மானங்களைத்தான் மாண்புமிகு உதயநிதி அவர்கள் முன்மொழிந்து நிறைவேற்றி உள்ளார்கள்.

நீட் விலக்கை முன்னிலைப்படுத்துகிறது இளைஞரணி. குலக்கல்வி முறையைக் கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை இளைஞர் நல அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுக்க இளைஞரணி முடிவெடுத்துள்ளது. கல்வி, மருத்துவத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பதும் இன்னொரு முக்கியத் தீர்மானம் ஆகும். பா.ஜ.க.வால் அதிகம் சிதைக்கப்படுவது உயர் கல்வித் துறைதான். ஆளுநர்களை வேந்தர்களாக வைத்துக் கொண்டு இதனைச் செய்கிறார்கள். என்வேதான், பல்கலைக் கழகங்களின் வேந்தராக மாநில முதலமைச்சரே இருக்க வேண்டும் என்று கழக அரசு சட்டமுன்வடிவை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறது. அதற்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார். ஆளுநர்களை நிராகரிக்கும் சட்டத்துக்கும் ஆளுநர்தான் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று விதி இருப்பதை என்ன செய்வது? அதனால் தான், 'ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிடுக' என்று அமைச்சர் உதயநிதி அவர்கள் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளார். நியமனப் பதவியில் இருப்பவர், இணை அரசாங்கம் நடத்துவதற்கு தடை செய்ய இந்தத் தீர்மானத்தை விட்டால் வேறு வழியில்லை.

“அர­சி­யல் குளிர்காய்வதற்காக மக்களை எரிக்கும் பாஜக அரசை அம்பலப்படுத்திய இளைஞரணி மாநாடு’’ - முரசொலி !

ஒன்றிய பா.ஐ.க. அரசு, கமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலையை முற்றிலுமாக பறித்து விட்டது. ரயில்வே, தபால், வங்கி போன்ற துறைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் இடம்பெற முடியவில்லை. இதனை வலியுறுத்தும் தீர்மானம், மிகமிக முக்கியமானது. காலப் போக்கில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறப் போகும் பிரச்சினையாக இது அமைந்துள்ளது. மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதுதான் பா.ஜ.க.வின் திட்டமாகும். ஒற்றையாட்சி கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற நினைகிறது பா.ஜ.க.

இதனைத் தடுப்பதுதான் இன்று நம்முன் உள்ள முக்கியமான வேலைத் திட்டமாகும். மாநிலங்களை நகராட்சிகளைப் போல நடத்த நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் வல்லாதிக்கப் போக்கை மாநாடு கண்டித்துள்ளது. மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதும், யூனியன் பிரதேசங்களின் தேர்தலே இல்லாமல் ஆக்குவதும்தான் பா.ஜ.க.வின் வேலையாகும். எனவேதான் மாநிலங்களை அதிகாரம் பொருந்தியவையாக மாற்றுவதும், அந்த மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்குவதும்தான் தி.மு.க. சொல்லும் மாற்றுத் திட்டம் ஆகும். 1978களில் தலைவர் கலைஞர் பேசியதை, இன்று பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பேசத் தொடங்கி இருப்பது இந்தியாவுக்கான நல்ல அறிகுறி ஆகும். கூட்டாட்சி அடிப்படையிலான இந்திய ஒன்றிய அரசு, சுயாட்சி மிக்க மாநில அரசுகள் இதுவே இளைஞரணியின் வழிகாட்டுதல்கள் ஆகும்.

"இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க.தான் என்பதை அம்பலப்படுத்துவோம்' என்பது இளைஞரணியின் முக்கியமான தீர்மானம் ஆகும். "10 ஆண்டு கால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தனது வாக்குறுதிகள் அனைத்திலும் தோல்வியடைந்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. செய்த துரோகங்களை மறைக்க, மதவாத அரசியலை முன்னெடுத்து, அயோத்தி இராமர் கோவிலை வைத்து வாக்குகள் பெற்றுவிடலாம் என நினைப்பது ஆன்மிகவாதிகளையும் ஏமாற்றும் செயலாகும்.

“அர­சி­யல் குளிர்காய்வதற்காக மக்களை எரிக்கும் பாஜக அரசை அம்பலப்படுத்திய இளைஞரணி மாநாடு’’ - முரசொலி !

நாட்டில் உள்ள இந்துக்களில் பெரும்பான்மையான மக்களை 10 ஆண்டு காலமாக ஏமாற்றிவிட்டு, இராமர்கோவிலைக் காட்டி, இந்துக்கள் ஓட்டுகளை வாங்கி விடலாம் என அரசியல் கணக்குடன், கடவுளையும் ஏமாற்ற நினைக்கும் இந்து மக்களின் உண்மையான எதிரியான பா.ஜ.க.வின் மதவாத அரசியலை வீடு வீடாக அம்பலப்படுத்தும் பரப்புரையை இளைஞர் அணி மேற்கொள்ளும்” என்ற தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லும் அழுத்த மானது ஆகும். கோடிக்கணக்கான மக்களை அனைத்து வகையிலும் நசுக்கிவிட்டு, கோயிலைக் காட்டி திசை திருப்பும் பா.ஜ.க.வின் தந்திரத்தை இந்தத் தீர்மானம் அம்பலப்படுத்துகிறது, இந்தத் தீர்மானத்தைதான் வட மாநில மக்கள் மனதிலும் விதைத்தாக வேண்டும். அதுதான் காலத்தின் கட்டாயம் ஆகும்.

"தமிழ்நாட்டில் நாம் வெற்றி பெற்றுவிடுவோம். நாற்பதுக்கு நாற்பதை வென்று விடுவோம். ஆனால் இந்தியா முழுக்க வெற்றி பெற வேண்டுமானால் இளைஞரணியினர் வடக்கு நோக்கியும் செல்ல வேண்டும்" என்று கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி அவர்கள் மாநாட்டில் பேசும்போது குறிப்பிட்டார்கள். 'இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க. தான்' என்பதை இந்தியா முழுமைக்கும் பரப்புரை செய்தாக வேண்டும்.

"கலவரத் தீயில் அரசியல் குளிர்காய்வதற்காக, மக்களை விறகுக் கட்டைகள் போல எரிக்கும் தன்மையுடன் ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது" என்பதை இளைஞரணி மாநாட்டு தீர்மானங்கள் அம்பலப்படுத்தி இருக்கிறது. 'ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்” என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியை நிரூபிக்கும் வகையில், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டுவோம் என்றும் குளுரைத்து இருக்கிறார்கள். இந்தியா செல்ல வேண்டிய திசையைத் தீர்மானித்துள்ளது தீர்மானங்கள். இதனை வென்று காட்டுவார்கள் தி.மு.க. இளைஞரணியினர்.

- முரசொலி தலையங்கம்

23.01.2024

banner

Related Stories

Related Stories