முரசொலி தலையங்கம்

பெண்ணினத்தை உயர்த்தும் முதலமைச்சரின் முக்கியமான ஐந்து திட்டங்கள் - பட்டியலிட்டு பாராட்டிய முரசொலி !

பெண்ணினத்தை உயர்த்தும் முதலமைச்சரின் முக்கியமான ஐந்து திட்டங்கள் - பட்டியலிட்டு பாராட்டிய முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (16.11.2023)

ஒரு கோடியே 13 லட்சம் பேர்

ஒரு கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சொன்னார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆனால் இன்றோ அதன் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சம் ஆகிவிட்டது. அடுத்து விண்ணப்பித்துள்ளவர்களது விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து வருகிறோம், அவர்களிலும் தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயம் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்பது சாதாரணத் திட்டமல்ல. மகளிர் குலத்தின் மாண்பை மட்டும் உயர்த்தவில்லை, அவர்களை சமூகப் பொருளாதாரத்தின் அனைத்து வகையிலும் உயர்த்தி வருகிறது. அதனைத்தான் கண்கூடாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

பெண்ணினத்தை உயர்த்தும் முதலமைச்சரின் முக்கியமான ஐந்து திட்டங்கள் - பட்டியலிட்டு பாராட்டிய முரசொலி !

முதலமைச்சர் அவர்கள் உருவாக்கிக் கொடுத்த மிக முக்கியமான ஐந்து திட்டங்கள் பெண்ணினத்தை உயர்த்தி வருகிறது.

1. மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து வசதி. இந்த திட்டத்தின் மூலமாக மாதம் தோறும் 600 முதல் 1200 ரூபாய் வரையிலும் மகளிர் சேமிக்க முடிகிறது. பேருந்து கட்டணத்துக்கு வழியில்லாமல் வேலைக்குச் செல்லாமல், வீட்டுக்குள் முடங்கிக் கொண்டு கிடந்த பெண்களை இது வெளியில் வர வைத்து, அவர்களையும் சமூகப் பங்களிப்பாளர்களாக ஆக்கியது இந்த அறிவிப்பு.

2. அரசுப் பள்ளியில் படித்துவிட்டு உயர் கல்விக்கு வரும் மாணவியர்க்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டமானது, ஏழை எளிய விளிம்பு நிலைக் குடும்பத்து மாணவிகளை கல்லூரிக்குள் தைரியமாக வர வைத்து விட்டது.

3. பள்ளிக் குழந்தைகளுக்காக காலைச் சிற்றுண்டித் திட்டத்தின் நேரடி பயனாளிகள் மாணவச் செல்வங்களாக இருந்தாலும், அவர்களது பெற்றோர் கவலையை இது தீர்க்கிறது. அதிகாலையில் தானும் வேலைக்குச் செல்லத் தயாராகி, தங்களது பிள்ளைகளுக்கு உணவும் தயாரித்துத் தரும் சுமையைக் குறைக்கிறது இந்தத் திட்டம்.

4. இதன் தொடர்ச்சியாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது, ஒரு கோடிப் பேருக்கும் மேல் பயனடையும் திட்டமாக அமைந்துவிட்டது. இதனைப் பெறும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பயனைச் சொல்கிறார்கள். அனைத்துக்கும் மேலாக அந்தப் பெண்கள் கையில் பணம் இருக்கிறது. இது தன்னம்பிக்கை உள்ளவர்களாக அவர்களை உயர்த்திவிட்டது. ஒற்றைக் கையெழுத்தில் இதனைச் சாத்தியமாக்கி விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இவர்களால் தர முடியாது என்று நினைத்தார்கள். ‘தந்துவிடக் கூடாது’ என்றும் நினைத்தார்கள். தர முடியாத அளவுக்கு நிதிநிலைமையை தரைக்கு இறக்கி விட்டும் சென்றார்கள். இரண்டு ஆண்டு காலம் திட்டமிட்டு, நிதிநிலைமையை ஓரளவு சரி செய்த பிறகு நிறைவேற்றிக் காட்டி விட்டார் முதலமைச்சர் அவர்கள்.

கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கினார் முதலமைச்சர் அவர்கள். செப்டம்பர் 15, அக்டோபர் 15 --– என இரண்டு மாதத்தில் இரண்டாயிரம் ரூபாயை ஒரு கோடியே ஆறு லட்சம் மகளிர் பெற்றுவிட்டார்கள். விதிமுறைப்படி நவம்பர் 15 தான் அடுத்த ஆயிரம் ரூபாயை வழங்கி இருக்க வேண்டும். தீபஒளித் திருநாள் 12 ஆம் தேதி வருவதால், முன்கூட்டியே 1000 ரூபாயைத் தருவதற்கு உத்தரவிட்டார் முதலமைச்சர் அவர்கள். “3000 ரூபாய் இதுவரை மகளிர் பெற்றுவிட்டார்கள். மாதம் தோறும் ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் மகளிருக்கு போய்ச் சேர்கிறது. இதனால் பணப்புழக்கம் அதிகமாகி விட்டது. இந்த திருநாளானது உற்சாகமாகக் கொண்டாடப்பட இதுவும் ஒரு காரணம்” என்று ஊடகங்கள் சொல்லத் தொடங்கி இருக்கின்றன. ஊடகங்களில் பேட்டி கொடுக்கும் மகளிரும் இதையே வழிமொழிகிறார்கள்.

பெண்ணினத்தை உயர்த்தும் முதலமைச்சரின் முக்கியமான ஐந்து திட்டங்கள் - பட்டியலிட்டு பாராட்டிய முரசொலி !

முதலில் தரப்பட்டது, ஒரு கோடியே 6 இலட்சத்து 58 ஆயிரத்து 375 பேர். இரண்டாம் கட்டமாகச் சேர்க்கப் பட்டவர்களையும் சேர்த்தால் ஒரு கோடியே பதிமூன்று இலட்சத்து அறுபதாயிரத்து 89 ஆக உயர்ந்துள்ளது. 11 இலட்சத்து 86 ஆயிரத்து 530 மகளிர் இன்னமும் மேல்முறையீடு செய்துள்ளார்கள். “அவர்களுடைய மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் தொடர்ந்து பரிசீலிக்கப் பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்களையும் சரிபார்ப்பு அலுவலர்களைக்கொண்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தகுதிபெறும் மகளிரும் இத்திட்டத்தின் கீழ்பயனாளிகளாக டிசம்பர், 2023 முதல்சேர்க்கப்படுவார்கள்” என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இது உருவாக்க இருக்கும் சமூகப் பொருளாதார மாற்றம் என்பது மிகப் பெரியது ஆகும்.பெண்களின் சமூகப் பங்களிப்பை அதிகம் ஆக்கும்.

“இந்தியாவில் தொழிற்சாலைகளில் பெண் ஊழியர்களை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது” என்பதைப் பாராட்டி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது. ‘தமிழ்நாட்டின் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளே இதற்கு காரணம்’ என்று பாராட்டியுள்ளது. ‘Roll PKG Where women elevate shop floors’ என்ற தலைப்பில் அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்தியாவில் உற்பத்தித் துறையில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளதாகச் சொல்லி இருக்கிறது.

பெண்களின் தைரியமும், அவர்களுக்கு குடும்பத்தினர் அளித்து வரும் ஆதரவும், அதிக அளவில் பெண்கள் வேலைக்குச் செல்ல காரணமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள அந்த நாளிதழ், தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளில், பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பான சூழல் உள்ளது இதற்கு முக்கியக் காரணம் என்றும், இவ்வாறு வேலை வாய்ப்பு பெற்ற பெண்களின் பிள்ளைகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உயர்கல்வி கற்று தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளது.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள உட்கட்டமைப்புகள், பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் விடுதிகள், உயர் கல்விக்கான வசதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கான ஏற்பாடுகள் பெண்களின் வேலைவாய்ப்புக்கான மையமாக தமிழ்நாட்டை மாற்றி உள்ளதாகவும், இதன் காரணமாக கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அந்த நாளிதழ் பாராட்டியுள்ளது. ‘சமூக நீதி என்றால் என்ன?’ என்றும், ‘திராவிட மாடல் என்றால் என்ன?’ என்றும் கேட்கும் தற்குறிகளுக்கான பதில்கள்தான் இவை!

..

banner

Related Stories

Related Stories