முரசொலி தலையங்கம்

“ரூ.15 லட்சம் தருவதாக சொன்னது உண்மைதான்.. ஆனால் அது ‘ஜும்லா’ என்றவர்தான் அமித்ஷா..” - முரசொலி விமர்சனம் !

'ரூ.15 லட்சம் தருவதாக நாங்கள் சொன்னது உண்மைதான். ஆனால் அது ஜும்லா' என்று சொன்னவர் அமித்ஷா. ஜூம்லா என்ற இந்தி/ உருதுச் சொல்லுக்குப் பொய்யான வாக்குறுதி, பொய்யான வாக்கியம், வெற்றுச் சொல் என்று பொருள்.

“ரூ.15 லட்சம் தருவதாக சொன்னது உண்மைதான்.. ஆனால் அது ‘ஜும்லா’ என்றவர்தான் அமித்ஷா..” - முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

15 லட்சம் ரூபாய்... 15 ஆயிரம் தரம் ஏலம்..

''ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் தருவோம் என்றீர்களே? ரூ.15 ஆயிரமாவது கொடுத்தீர்களா? 15 ரூபாயாவது கொடுத்தீர்களா?' என்று பா.ஜ.க.வை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டார்கள்.

* கொடுத்தோம்.

* கொடுக்க முடியவில்லை.

* சிலருக்குத்தான் கொடுக்க முடிந்தது. - என்பதுதான் அதற்கான பதிலாக இருக்க முடியும். பா.ஜ.க.தான் பொய்யில் புரளும் கட்சியாச்சே! ' நாங்கள் அப்படி வாக்குறுதி அளிக்கவே இல்லை' என்று சொல்கிறார் அண்ணாமலை.

குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திரமோடி அவர்கள் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு இது. பத்தாண்டுகள் ஆகிவிட்டது.

“ரூ.15 லட்சம் தருவதாக சொன்னது உண்மைதான்.. ஆனால் அது ‘ஜும்லா’ என்றவர்தான் அமித்ஷா..” - முரசொலி விமர்சனம் !

“இந்தியாவின் மோசடிப் பேர்வழிகள் கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள். அந்தப் பணத்தைத் திரும்பக் கொண்டு வந்தால், ஒவ்வொரு ஏழை இந்தியனும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இலவசமாகப் பெறுவான். பா.ஜ.க. வெற்றி பெற்றால் கறுப்புப் பணத்தை மீட்போம்” என்று பேசினார் அன்றைய நரேந்திரமோடி அவர்கள். அவர் எவ்வளவு கோடி ரூபாய் கருப்புப் பணத்தை மீட்டார் என்பது அவருக்கே வெளிச்சம். மோடியின் பத்தாண்டு ஆட்சியில் ஒருவருக்குக்கூட 15 லட்சம் ரூபாய் கிடைக்கவில்லை. ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு 282 எம்.பி-களையும் அடுத்து வந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 303 எம்.பி-களையும் பெற்றுக் கொடுத்தது. அடுத்து இதே மாதிரியான பொய்யுடன் அரசியல் களத்துக்கு வரப் போகிறார்கள்.

2015 பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனது. ஓராண்டின் முடிவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கேட்டது என்னவென்றால், 'ரூ.15 லட்சம் தருவதாகச் சொன்னீர்களே? என்ன ஆச்சு?' என்பதுதான். 'அப்படியா? நாங்கள் அப்படிச் சொல்லவில்லையே!' என்று பிரதமர் மோடி சொல்லவில்லை. இந்தக் கேள்வி நேரடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களிடம் கேட்கப்பட்டது. அவரும், 'நாங்கள் அப்படி எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை' என்று சொல்லவில்லை. மாறாக, 'பொய்யாக அப்படி வாக்குறுதி அளித்தோம்' என்பதை அப்போதே அமித்ஷா அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

2015 ஆம் ஆண்டு ஏ.பி.பி. ஊடகத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், '' தேர்தல் தந்திரமாக அப்படிச் சொன்னோம். இது ஒரு உருவகம்தான்'' என்று கூறினார். 2.6.2015 அன்று 'எக்கனாமிக் டைம்ஸ்' நாளேடு வெளியிட்ட செய்தி இதுதான். BJP president Amit Shah has said Narendra Modi's 'promise' as the party's PM candidate that each Indian would receive Rs 15 lakh when black money would be repatriated from abroad was an 'idiom' and should not be taken literally Although the 'promise' was never realistic, the new interpretation suggests that BJP was looking for a way to wriggle out after being accused by political opponents of reneging on its poll promise. It may also indicate the difficulty the government was facing to repatriate black money from foreign shores.

Shah's remarks came in response to a question during an interview to a news channel. "Modiji's statement was an idiomatic expression (jumla) that was given during the Lok Sabha polls. Everybody knows that this black money doesn't go to accounts of people," Shah said. During the Lok Sabha election campaign, Modi had often said if NDA comes to power it will ensure that Indian black-money invested illegally in tax havens abroad would be brought back to and this fund would be distributed to the poor, with each one getting Rs 15 lakh in their accounts - என்பது ஆகும்.

'ரூ.15 லட்சம் தருவதாக நாங்கள் சொன்னது உண்மைதான். ஆனால் அது ஜும்லா' என்று சொன்னவர் அமித்ஷா. ஜூம்லா என்ற இந்தி/ உருதுச் சொல்லுக்குப் பொய்யான வாக்குறுதி, பொய்யான வாக்கியம், வெற்றுச் சொல் என்று பொருள்.

இன்னொரு முக்கியமான அமைச்சர் நிதின் கட்கரியிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது. 'நாங்கள் அதிகாரத்துக்கு வரமாட்டோம் என்று நினைத்து அப்படிச் சொல்லி விட்டோம். ஆனால் வந்து விட்டோம், என்ன செய்வது?' என்று பதில் அளித்தார் அவர். (10.10.2018 அன்று இப்படிச் சொன்னார்)

“ரூ.15 லட்சம் தருவதாக சொன்னது உண்மைதான்.. ஆனால் அது ‘ஜும்லா’ என்றவர்தான் அமித்ஷா..” - முரசொலி விமர்சனம் !

இன்னொரு முக்கியமான ஒன்றிய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே. ''ரிசர்வ் வங்கியில் அவ்வளவு தொகை இல்லாததால் எங்களால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. விரைவில் ரூ.15 லட்சம் தந்து விடுவோம்" என்று 19.12.2018 அன்று வெளிப்படையாகவே செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் எம்.பி–க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அருண் ஜெட்லி அளித்த பதில் என்ன தெரியுமா? ''கருப்புப் பணம் தொடர்பான விசாரணையில் இதுவரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட 3,250 கோடி ரூபாய் தான் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கருப்புப் பணம் முழுவதுமாக மீட்டுக் கொண்டு வரப்பட்டால் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் கிடைக்கும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி கூறினார். அந்தப் பேச்சானது வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பாக வெளியான பல மதிப்பீடுகளின் அடிப்படையில் உத்தேசமாக சொல்லப்பட்டதாகும்." என்று கூறினார். ( 2015 மார்ச்)

ஒன்றிய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, அமித்ஷா, நிதின் கட்கரி, ராம்தாஸ் அதாவ்லே ஆகியோர் ஒப்புக் கொண்டதுதான் – ரூ.15 லட்சம் தருவோம் என்பது ஆகும். இதனைத்தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேள்வியாகக் கேட்கிறாரே தவிர வேறல்ல!

jumla கட்சிக்கு இந்த ஆதாரங்கள் எல்லாம் அவசியமில்லை!

banner

Related Stories

Related Stories