முரசொலி தலையங்கம்

டிரோன் ஊழலை மறைக்கத்தான் பற்றி எரியும் மணிப்பூரை வேடிக்கை பார்க்கிறதா பா.ஜ.க?.. முரசொலி ஆவேசம்!

பொது சிவில் சட்டம் கொண்டு வரப் போகிறோம் என்று சொல்லி நாட்டை திசை திருப்புவது இந்த டிரோன் விவகாரங்களை மறைக்கத்தானா?

டிரோன் ஊழலை மறைக்கத்தான் பற்றி எரியும் மணிப்பூரை வேடிக்கை பார்க்கிறதா பா.ஜ.க?.. முரசொலி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (06-07-2023)

ரஃபேலைத் தொடர்ந்து டிரோன்!

பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் அணிச்சேர்க்கையை ஊழல் கட்சிகளின் அணிச்சேர்க்கையாக அடையாளப்படுத்தி இருக்கிறார் பிரதமர் மோடி. அதையே உள்துறை அமைச்சரும் சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் இதனை உரக்கச் சொல்லும் இதே நேரத்தில்தான் மிகப்பெரிய ஊழல் ஒன்று நடந்திருப்பதை காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து வாங்கப்படும் ரூ.25 ஆயிரம் கோடி டிரோன் பேரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி சொல்லி இருக்கிறது. மற்ற நாடுகளை விட நான்கு மடங்கு அதிக விலையில் பா.ஜ.க. அரசு வாங்கி இருப்பதாக காங்கிரஸ் கட்சி சொல்லி இருக்கிறது. இதுபற்றி ஊடகங்கள் விரிவான தகவல்களைச் சொல்லத் தொடங்கி உள்ளன.

“அமெரிக்காவிடம் இருந்து ரூ.25,000 கோடி மதிப்பில் இந்தியா வாங்கும் 31 பிரிடேட்டர் டிரோன்கள் பேரத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், மற்ற நாடுகளைவிட இந்தியா 4 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும்" இவை எழுதத் தொடங்கி இருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 31 எம்க்யூ-9பி பிரிடேட்டர் யு.ஏ.வி. டிரோன்களை வாங்க சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. அதிக உயரத்திலும், நீண்ட தொலைவிலும் பறந்து எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் இந்த டிரோன்கள் அதிநவீனமானவை என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. பிரதமர் மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தில் அதிபர் பைடனுடனான சந்திப்பில், இந்த டிரோன்கள் வாங்குவது உறுதி செய்யப்பட்டது.

இதற்கான விலை 3.072 மில்லியன் டாலர், அதாவது ரூ.25.200 கோடி என அமெரிக்க அரசு நிர்ணயித்துள்ளது. இந்த டிரோன்களின் தொழில்நுட்ப அம்சங்கள், உற்பத்தி குறித்த கொள்கை அனுமதி அமெரிக்க அரசிடம் இருந்து பெறப்பட்ட பிறகு விலை குறித்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது. ஆனா லும், தற்போது வரை ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான பிரிடேட்டர் டிரோன்களை வாங்கப் போவதாகவே ஒன்றிய அரசு அதன் அறிக்கைகளில் கூறி வருகிறது.

டிரோன் ஊழலை மறைக்கத்தான் பற்றி எரியும் மணிப்பூரை வேடிக்கை பார்க்கிறதா பா.ஜ.க?.. முரசொலி ஆவேசம்!

இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் 4 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கப் போவதாக காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா இதனை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

"தேச பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. ஆனால், பிரிடேட்டர் டிரோன்கள் ஒப்பந்தம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இதில், ஒன்றிய பா.ஜ. அரசு தேச நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சந்தேகிக்கப் படுகிறது. முன்பு, பிரான்சிடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்குப் பதிலாக 36 ரபேல் விமானங்களை மட்டுமே பா.ஜ. அரசு வாங்கியது. அதை நாம் அனைவரும் பார்த்தோம். ரபேல் விமானத்தின் தொழில்நுட்பங்கள் உள்நாட்டின் எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு மறுக்கப்பட்ட தையும் பார்த்தோம். அப்போது, பாதுகாப்பு கையகப்படுத்துதல் குழு மற்றும் ஆயுதப்படைகளின் பரவலான ஆட்சேபனைகள் இருந்த போதிலும், பிரதமர் மோடி நேரடியாக ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்து ஒப்பந்தத்தை இறுதி செய்தார். ரபேல் ஊழல் இன்னும் பிரான்சில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவிடம் இருந்து பிரிடேட்டர் டிரோன் களை வாங்குவதிலும் இதே போன்ற விவகாரங்கள் நடப்பதால் முழுமையான வெளிப்படைத்தன்மையை நாங்கள் கோருகிறோம். முக்கிய மான கேள்விகளுக்கு அரசு பதில் தர வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஒரு ஊழல் நடக்க வழிவகுக்கப்படும். இதைப் பற்றி பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும். தற்போதைய நிலவரப்படி, பிரிடேட்டர் டிரோன் ஒவ்வொன்றின் விலை தோராயமாக ரூ.812 கோடி. 31 டிரோன்கள் வாங்க ரூ.25.200 கோடியை இந்தியா செலவழிக்க வேண்டும். இது, மற்ற நாடுகள் இதே டிரோன்கள் வாங்கியதை விட 4 மடங்கு அதிகமாகும்.

டிரோன் ஊழலை மறைக்கத்தான் பற்றி எரியும் மணிப்பூரை வேடிக்கை பார்க்கிறதா பா.ஜ.க?.. முரசொலி ஆவேசம்!

இந்தியா ஏன் அதிக விலை கொடுத்து டிரோன்களை வாங்குகிறது? அதுவும், செயற்கை தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு இல்லாத டிரோனுக்கு நாம் ஏன் அதிக விலை தர வேண்டும். விண்ணை முட்டும் இந்த விலை யுடன் டிரோன்களை வாங்க வேண்டிய அவசரம்தான் என்ன? இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) இதே டிரோனை இந்த தொகையில் 10, 20 சதவீதத்தில் உருவாக்க முடியும்.

ஸ்தம், கதக்ரக டிரோன்களை உருவாக்க டி.ஆர்.டி.ஓ.வுக்கு ரூ.1786 கோடியை ஒதுக்கிவிட்டு, அமெரிக்காவிடம் ரூ.25,000 கோடி கொடுத்து டிரோன்களை வாங்குவது ஏன்? பிரிடேட்டர் டிரோன் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவை ஏன் கூட்ட வில்லை? இவை அனைத்தும் இந்த பேரத்தில் முறைகேடு நடப்பதற் கான சந்தேகங்களை வலுவாக்குகின்றன" என்று அவர் கூறி உள்ளார். ஏற்கனவே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே இதே விவகாரம் பற்றி கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கெல்லாம் இது வரை எந்த பதிலும் இல்லை.

பொது சிவில் சட்டம் கொண்டு வரப் போகிறோம் என்று சொல்லி நாட்டை திசை திருப்புவது இந்த டிரோன் விவகாரங்களை மறைக்கத் தானா? மணிப்பூர் எரியட்டும் என்று இருப்பதும் இதனை மறைக்கத் தானா?

banner

Related Stories

Related Stories