முரசொலி தலையங்கம்

ரூ.2000 நோட்டை வைத்து காமெடி செய்து கொண்டு இருக்கும் ஒன்றிய அரசு.. முரசொலி கிண்டல்!

'மோடி தர்பார்" என்று கிண்டல் செய்யும் அளவுக்கு 2000 ரூபாய் பணத்தை வைத்து காமெடி செய்து கொண்டு இருக்கிறார்.

ரூ.2000 நோட்டை வைத்து காமெடி செய்து கொண்டு இருக்கும் ஒன்றிய அரசு.. முரசொலி கிண்டல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (23-05-2023)

2000 தவறுகள்

கேலிக்கூத்தான சம்பவங்கள் நடந்தால் அதனை 'துக்ளக் தர்பார்' என்று கிண்டல் செய்வது உண்டு. இனி வருங்காலம் 'மோடி தர்பார்" என்று கிண்டல் செய்யும் அளவுக்கு 2000 ரூபாய் பணத்தை வைத்து காமெடி செய்து கொண்டு இருக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கள்ளப்பணம் அதிகமாகி விட்டது என்று சொல்லி 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தார் பிரதமர். ஒன்பது ஆண்டுகள் கழிந்த பிறகும், 2000 ரூபாய் நோட்டை தடை செய்திருக்கிறார் என்றால் யாருடைய ஆட்சி இதற்குக் காரணம்?

2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாமாம்.

இதே பிரதமர்தான் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நள்ளிரவில், 500, 1000 ஆகிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதன்பிறகு 2000 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. கருப்புப்பணத்தை ஒழிக்கப் போவதாகச் சொல்லி 1000 ரூபாய் நோட்டை தடை செய்துவிட்டு. 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்த புத்திசாலித் தனத்தை என்ன சொல்வது?

ரூ.2000 நோட்டை வைத்து காமெடி செய்து கொண்டு இருக்கும் ஒன்றிய அரசு.. முரசொலி கிண்டல்!

2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்தார்களே.. அதையாவது முழு மையாகத் தொடர்ந்தார்களா என்றால் இல்லை. 2018 ஆம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதையே நிறுத்திவிட்டார்கள். அதைக் கண்ணில் பார்க்க முடியாத அளவுக்கு தடை போடப்பட்டுவிட்டது அப்போதே. ஏ.டி.எம். இயந்திரங்களில் கூட அதனைப் பார்க்க முடியாது. இந்த நிலையில் மொத்தமாக 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்.

2016 நடவடிக்கைக்கே இது வரை காரணம் தெரியவில்லை. 2023 நடவடிக்கைக்கு என்ன காரணம் இருக்க முடியும்? ஒரே காரணம்தான் ... உருப்படியாக எதையும் செய்யத் தெரியவில்லை என்பதால் எதையாவது செய்து கொண்டிருப்பதுதான் இது.

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் நள்ளிரவில் இது அறிவிக்கப் பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது சுதந்திர தினமாகச் சொல்லப்பட்டது. கருப்புப் பணத்தை ஒழிக்கவும். ஹவாலாவை ஒழிக்கவும். கள்ள நோட்டு களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை என்று சொல்லப்பட்டது. இந்தப் பணம் தான் போதை மருந்து வியாபாரத்துக்கும் தீவிரவாதத்துக்கும் பயன்படுத்தப் படுவதாகச் சொல்லப்பட்டது. ஒன்பது ஆண்டுகளில் கருப்புப் பணத்தை. ஹவாலாவை, கள்ள நோட்டுகளை. போதை மருந்துகளை ஒழித்துவிட்டதா கச் சொல்ல முடியுமா?

2017 - முதல் இன்று வரை குஜராத் துறைமுகங்களில் கைப்பற்றப்பட்ட போதை மருந்துகளின் மதிப்பே பல்லாயிரம் கோடி ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வடமாநிலங்களில் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் சுமார் ரூ.21 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதிலும் குறிப்பாக 2000 ரூபாய் நோட்டுகள் மட்டும் 12 கோடி என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்ப கம் தெரிவித்துள்ளது. 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது பணமதிப் பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகே கள்ள நோட்டுக்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டு ரூ.15.92 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2017, 2018, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் முறையே ரூ.28.10 கோடி, ரூ.17.95 கோடி, ரூ.25.39 கோடி, ரூ.92.17 கோடி மற்றும் 20.39 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் கைப் பற்றப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு குஜராத்தில் ரூ.317 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எதைச் சாதித்தது 2016 நடவடிக்கை?

ரூ.2000 நோட்டை வைத்து காமெடி செய்து கொண்டு இருக்கும் ஒன்றிய அரசு.. முரசொலி கிண்டல்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசி யல் சாசன அமர்வு விசாரித்தது. உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் வழங்கிய தீர்ப்புக்கு நீதிபதிகள் அப்துல் நசீர். ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணி யன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தார்கள். அதேநேரத்தில் நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். “நிர்வாக நடைமுறைப்படி பணமுடக் கம் மேற்கொண்டது தவறு” என்று தனது தீர்ப்பில் தெரிவித்தார். "இது போன்ற மூக்கிய மூடிவுகள் எடுக்கும் போது நாடாளுமன்றத்தை ஒதுக்கி வைக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார். “24 மணி நேரத்தில் எப்படி முடிவு எடுக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பிய அவர், 'ஒன்றிய அரசின் பதிலுக்கும், ரிசர்வ் வங்கியின் பதிலுக்கும் அதிக முரண்பாடுகள் உள்ளதாக வும் தெரிவித்தார். "பணமதிப்பிழப்பால் பொதுமக்கள் பெரும் பொருளாதார இன்னல்களுக்கு ஆளாகினர்” என்றும் அவர் கூறினார். பணமூடக்கத்தின் நோக்கம் நிறைவேறவில்லை என்ற அவர், பணமதிப்பிழப்பு விளைவுகளை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொண்டதா என்று கேள்வி எழுப்பினார். ஒரு அரசாணை மூலம் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்ததை ஏற்க முடியாது என்றும், பண மதிப்பிழப்பு அரசாணை சட்ட விரோ தமானது என்றும் நீதிபதி நாகரத்தினா தெரிவித்தார். இவை அனைத்தும் உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்தினா எழுப்பிய கேள்விகள்.

இதோ மீண்டும் அதே தவறு செய்யப்பட்டுள்ளது.

500 சந்தேகங்கள்!

1000 மர்மங்கள்!

2000 பிழைகள்!

கர்நாடக தோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்” - என்று இந்த நடவடிக்கை பற்றி விமர்சித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். பா.ஜ.க.வின் வெற்றிப் பிம்பம் என்பது கர்நாடகா தேர்தல் முடிவு களுக்குப் பின்னால் இற்று நொறுங்கி விட்டது. அதனைப் பற்றி யாரும் பேசி விடாமல் 2000 ரூபாயை தடை செய்வதன் மூலமாக அனைவரையும் இதைப் பற்றிப் பேச வைக்கும் தந்திரம்தான் இது.

சாணக்கியன் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போன தந்திரம்தான் இது. "மன்னனுக்கு மறுநாள் காலையில் ஏதாவது ஒரு சிக்கல் வரப்போகிறது என்றால் முந்தைய நாள் இரவில் ஒரு மரத்தில் ஒருவனை ஏற்றி கூக்குரல் எழுப்பச் சொல். அச்சம் தரும் அந்த ஒலியைப் பற்றியே மக்கள் பேசிக்கொண் டிருப்பார்கள்' என்பது சாணக்கியன் சொல். அதனைத் தான் இப்போது பார்க்கிறோம்.

சந்தேகங்கள்... மர்மங்கள்... பிழைகள்... தப்பித்தல்கள்... திசை திருப்பல்கள்... ஆனால் இறுதியில் தோல்விகள்!

banner

Related Stories

Related Stories