முரசொலி தலையங்கம்

“மணிப்­பூ­ர் வன்முறையை மாநில, ஒன்றிய பா.ஜ.க. அர­சு சரியாக கையாளவில்லை..” - முரசொலி விமர்சனம் !

மணிப்­பூ­ரில் ஒரு வார­மாக நடக்­கும் வன்­மு­றை­களை மாநில பா.ஜ.க. அர­சும், ஒன்­றிய பா.ஜ.க. அர­சும் கவ­லை­யு­டன் பார்த்த­தா­கத் தெரி­ய­வில்லை.

“மணிப்­பூ­ர் வன்முறையை மாநில, ஒன்றிய பா.ஜ.க. அர­சு சரியாக கையாளவில்லை..” - முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மணிப்பூர் எரிவது ஏன்? - 2

* இசுலாமியர் இடஒதுக்கீடு பறிப்பு

*மதச்சிறுபான்மையினரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரையும் மோத விடும் போக்கு

* பட்டியலின மக்களுக்குள் ஏற்படுத்திய பாகுபாடுகள் - இவை அனைத்தும் கர்நாடக தேர்தல் அரசியல் லாபத்துக்காகச் செய்யப்பட்டுள்ளன. 'சோஷியல் இன்ஜினியரிங்' என்ற பெயரால் சமூக அமைதியைக் குலைக்கும் முயற்சிகள் ஆகும். இதனைத்தான் மணிப்பூரிலும் செய்திருக்கிறது பா.ஜ.க. அரசு.

மணிப்பூரில் பழங்குடியினர் இடஒதுக்கீடு விவகாரம்தான் இந்தக் கலவரங்களுக்குக் காரணம். மாநிலத்தில் 53 சதவிகிதமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின தகுதி கோரி வருகிறார்கள். மாநில மக்கள் தொகையில் 48 சதவிகிதம் உள்ள நாகா, குக்கி பிரிவினர் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். மைதேயி - குக்கி ஆகிய இரண்டு பிரிவினரும் மாறுபட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் விரிசல் அதிகம் ஆக்கப்பட்டு விட்டது. மைதேயி பிரிவினர் இதுவரை ஓ.பி.சி. பிரிவில் உள்ளனர். அவர்களை பழங்குடி பட்டியலில் சேர்த்தால் தங்களது வாய்ப்புகள் பறிபோகும் என குக்கி பிரிவினர் நினைக்கிறார்கள்.

“மணிப்­பூ­ர் வன்முறையை மாநில, ஒன்றிய பா.ஜ.க. அர­சு சரியாக கையாளவில்லை..” - முரசொலி விமர்சனம் !

கடந்த மார்ச் 27 ஆம் தேதி, எஸ்.டி. பட்டியலில் மைதேயி பிரிவைச் சேர்ப்பதற்கான பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு சமர்ப்பிக்க மணிப்பூர் மாநில அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கோரிக்கையை முன் வைத்து மைதேயி பிரிவைச் சேர்ந்த இடஒதுக்கீடு ஆர்வலர்கள் தாக்கல் செய்த பல மனுக்களை விசாரித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இவை மிகப்பெரிய மோதலுக்கு வழிவகுத்து விட்டது.

மாநிலத்தில் உள்ள 18 மலைப் பகுதி மாவட்டங்களில் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அதில் இருந்து வன்முறைகள் பரவியது. இதனை மாநில பா.ஜ.க. அரசு சரியாகக் கையாளவில்லை என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் கோபம் கொள்வதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இத்தகைய மோதல் எழப்போவதை மாநில அரசு சரியாக கணிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 'மாநில அரசு வேகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும்' என்று உள்துறை அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். மைதேயி இனத்தவர் கோரிக்கைக்கு எதிராக குக்கி இனத்தவர் தொடர்ந்து போராடி வருகிறார்கள். மே 3 ஆம் தேதி நடந்த சுராசந்த்பூர் பேரணியில் 88 ஆயிரம் பேர் கூடியிருந்தார்கள். குக்கி இன மக்கள் பெரும்பான்மை வசிக்கும் மாவட்டம் இது.

சுராசந்த்பூர் மாவட்டத்தைத் தவிர, சேனாபதி, உக்ருல், காங்போகபி, தமெங்லாங், சந்தேல் மற்றும் தெங்னௌபால் உள்ளிட்ட எல்லா மலை மாவட்டங்களிலும் இத்தகைய பேரணிகள் நடத்தப்பட்டன. டார்பாங் பகுதியில் நடந்த ‘பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' பேரணியில் ஆயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர். அதன் பிறகு பழங்குடி குழுக்களுக்கும் பழங்குடியினர் அல்லாத குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் விஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் நடந்துள்ளன.

“மணிப்­பூ­ர் வன்முறையை மாநில, ஒன்றிய பா.ஜ.க. அர­சு சரியாக கையாளவில்லை..” - முரசொலி விமர்சனம் !

மணிப்பூரின் பழைய வரலாறுகளை அறிந்தவர்களுக்குத் தெரியும். அது பல ஆயுதக் குழுக்கள் செயல்பட்ட மாநிலம் ஆகும். அரசாங்கத்துடன் போர் நிறுத்தம் செய்து கையெழுத்துப் போட்டு அமைதியாக பல குழுக்கள் இன்னமும் இருக்கும் மாநிலம் அது. துப்பாக்கிகள் சர்வ சாதாரணமாகக் கிடைக்கும். எனவே இப்போதைய போராட்டக்காரர்களுக்கும் துப்பாக்கிகள் எளிதில் கிடைத்துள்ளது.

இது மட்டுமல்லாமல் மியான்மரில் ராணுவ ஒடுக்குமுறையைத் தொடர்ந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய எல்லையோர மாவட்டங்களில் நாட்டிலிருந்து அகதிகள் கணிசமான அளவில் குவிந்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இந்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் அகதிகளுடன் இன ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வதால், புதிய குடியேறியவர்களுக்கு உள்ளூர் மக்களிடமிருந்து சிறிய எதிர்ப்பு உள்ளது. சுராசந்த்பூர் போன்ற மாவட்டங்களில் குடியேறியவர்களில் பெரும்பாலானோர் குக்கி அகதிகள் என்றும் சொல்கிறார்கள். இந்த அகதிகளை வெளியேற்ற பா.ஜ.க. அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்வினையாகவும் இவை நடப்பதாகச் சொல்கிறார்கள்.

"மாநிலத்தில் இந்த வன்முறை ஒரு நாளில் வெடித்தது அல்ல. மாறாக பல விஷயங்கள் தொடர்பாக பழங்குடியினரிடையே முன்பே கோபம் நிலவி வருகிறது. வனப்பகுதிகளில் பல பழங்குடியினரிடம் இருந்து நிலங்கள் மீட்கப்படுகின்றன. இதில் குக்கி பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். வன்முறை வெடித்த இடம் சூராசந்த்பூர் பகுதி. குக்கிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. இந்த எல்லா விஷயங்கள் தொடர்பாகவும் அங்கு பதற்றம் ஏற்பட்டது,” என்று அம்மாநில மூத்த செய்தியாளர் பிரதீப் ஃபன்ஜோபம் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.

“மணிப்­பூ­ர் வன்முறையை மாநில, ஒன்றிய பா.ஜ.க. அர­சு சரியாக கையாளவில்லை..” - முரசொலி விமர்சனம் !

மைதேயி சமூகத்தினர் அனைவருமே தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்கும் கோரிக்கையை ஏற்கவில்லை. சிலர் ஏற்கிறார்கள். சிலர் மறுக்கிறார்கள். எனவே அதுவே குழப்பமான கோரிக்கையாக உள்ளது. இது பத்து ஆண்டுகளாக உள்ள கோரிக்கை. இதுவரை இருந்த அரசுகள் அதில் முடிவெடுக்கவில்லை. இப்போதைய பா.ஜ.க. அரசு அதில் முனைப்பு காட்டத் தொடங்கி இருப்பதாக அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் நினைக்கிறது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "இது அரசியலுக்கான நேரம் அல்ல. அரசியலும் தேர்தலும் காத்திருக்கலாம். ஆனால் நமது அழகிய மாநிலமான மணிப்பூரைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார். பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தீ வைப்பு தொடர்பான சில படங்களை பகிர்ந்துள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை டேக் செய்து, "மணிப்பூர் எரிகிறது, தயவுசெய்து உதவுங்கள்” என்று எழுதியுள்ளார்.

ஒரு வாரமாக நடக்கும் வன்முறைகளை மாநில பா.ஜ.க. அரசும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் கவலையுடன் பார்த்ததாகத் தெரியவில்லை.

banner

Related Stories

Related Stories