முரசொலி தலையங்கம்

‘‘இது திராவிட மாடல் ஆட்சி, இதை விட மகிழ்ச்சியான சொல் பெரியாருக்கு இருக்கமுடியாது..” - முரசொலி பாராட்டு !

இன்று பெரியார் இருந்திருந்தால், இந்த ஈராண்டு ஆட்சிக் காலத்தைப் பார்த்து, இனி இந்த ஆட்சியே நிரந்தரமாய் நீடித்திருக்க வேண்டும்’ என்று சொல்லி இருப்பார்.

‘‘இது திராவிட மாடல் ஆட்சி, இதை விட மகிழ்ச்சியான சொல் பெரியாருக்கு இருக்கமுடியாது..” - முரசொலி பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கோன் வாழ்க! கொற்றமும் வாழ்க!

‘‘இன்னும் பத்தாண்டு காலத்துக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ்ச் சமுதாயம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் என்பது ஏற்படும்” - என்று 1971 ஆம் ஆண்டு சொன்னார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்!

‘’நான் செய்துவிட்டுப் போன செயல்கள் நீடிக்கும்வரை தமிழ்நாட்டை அண்ணாத்துரைதான் ஆள்கிறான் என்று பொருள்” என்றார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்!

‘’எனக்குப் பின்னால் யார் என்று கேட்பீர்களேயானால், இதோ இந்த மேடையில் அமர்ந்திருக்கும் தம்பி ஸ்டாலின்தான் வழிநடத்த வேண்டும்” என்று சொன்னார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்!

இந்த முப்பெரும் தலைவர்களும் வெவ்வேறு காலக்கட்டத்தில் சொன்ன சொற்கள் இவை. ஆனால் இம்மூன்றையும் பொருத்திப் பார்த்து மலைத்து நிற்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

‘‘இது திராவிட மாடல் ஆட்சி, இதை விட மகிழ்ச்சியான சொல் பெரியாருக்கு இருக்கமுடியாது..” - முரசொலி பாராட்டு !

கால்ச்சட்டைப் பருவத்தில் தமிழ்க் கொடி தாங்கி - 100 என்ற கோட்டைத் தொடுவதற்கு ஐந்து ஆண்டுகளே இருக்கும் நிலையில் நிறைந்தவர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். ‘எனக்குப் பின்னால்’ என்று தலைமைத் தளபதியாம் மு.க.ஸ்டாலின் அவர்களைத்தான் முன் கொண்டு வந்து நிறுத்தினார். அப்படி நிறுத்தக் காரணம், மகன் என்பதற்காக அல்ல. ஐம்பதாண்டு காலமாகத் தமிழ் மகனாக உழைத்ததால் தான். முரசொலி ஊழியராக, பத்திரிக்கையாளராக, தேர்தல் பரப்புரையாளராக, நாடக நடிகராக, திரையுலக நடிகராக, பகுதிக் கழகப் பிரதிநிதியாக, இளைஞரணிச் செயலாளராக, துணைப்பொதுச் செயலாளராக, பொருளாளராக, செயல் தலைவராக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உழைத்த உழைப்புத்தான், ‘எனக்குப் பின்னால் இவர்’ என்று தலைமைத் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை நோக்கி தலைவர் கலைஞரின் ஆட்காட்டி விரல் அடையாளம் காட்டக் காரணமாய் அமைந்தது.

மாநகரத்தின் மேயராக - சட்டமன்ற உறுப்பினராக - அமைச்சராக - துணை முதலமைச்சராகச் செயல்பட்ட நிர்வாகப் பாங்கைப் பார்த்துத்தான்- தலைவர் கலைஞர் அவர்கள் அடையாளம் காட்டிச் சொன்னார். அந்த நம்பிக்கையின் ஒளிவீச்சைத்தான் இரண்டு ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். அடையாளம் காட்டினார் கலைஞர். அதனை மெய்ப்பித்துக் கொண்டு இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

‘‘நான் செய்துவிட்டுப் போன செயல்கள் நீடிக்கும் வரை தமிழ்நாட்டை அண்ணாத்துரை தான் ஆள்கிறான் என்று பொருள்” - என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார் என்றால் இதனை விட அழுத்தமான சொல் இருக்க முடியாது. தனது செயல்மீது அவ்வளவு மதிப்பு பேரறிஞருக்கு இருந்திருக்கிறது. செயற்கரிய செயல்கள் அவை. ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியதை விட செயற்கரிய செயல் இருக்க முடியுமா?

‘‘இது திராவிட மாடல் ஆட்சி, இதை விட மகிழ்ச்சியான சொல் பெரியாருக்கு இருக்கமுடியாது..” - முரசொலி பாராட்டு !

‘நாடு என்று சொல்லக் கூடாது’ என்று சிலர் அலறுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு - தமிழ்நாடு - தமிழ்நாடு என்று ஒலித்துக் கொண்டே இருக்கிறார் முதலமைச்சர். ‘தமிழ்நாட்டை’ நமது முன்னோர்கள் உருவாக்கினார்கள். ‘தமிழ்நாடு’ என்று அண்ணா உருவாக்கிக் கொடுத்த பெயரைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார் இன்றைய முதலமைச்சர் அவர்கள். ‘தமிழ்த்தாய் வாழ்த்தை’க் கொடுத்தார் முத்தமிழறிஞர் கலைஞர். அதனை மாநிலப் பாடலாகவே அறிவித்து அனைவரையும் பாட வைத்திருக்கிறார் முதலமைச்சர்.

‘அதிகாரம் இல்லாத முதலமைச்சர் நாற்காலியில் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறேனே தம்பி’ என்று புற்றுநோய் தந்த வலியைவிட ஒன்றிய ஆதிக்க வலியைத் தாங்க முடியாமல் கலங்கியபடியே தனது கடைசிக் கடிதத்தை ‘காஞ்சி’ இதழில் தீட்டினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

மாநில சுயாட்சி என்ற மாமருந்தைக் கையில் எடுத்து இந்த ஐம்பதாண்டு காலத்தில் நேற்று வரை கலைஞர் அவர்களும், இப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தமிழ்நாட்டை மேன்மையடைய வைத்திருப்பதைப் பார்த்தால் அண்ணா என்ன சொல்லி இருப்பாரோ தெரியாது. ஆனால், நம் கண்ணுக்கு முன்னால் தெரிவது ஒன்றுதான், ‘தமிழ்நாட்டை இப்போதும் அண்ணாத்துரையே ஆள்கிறார்’ என்பதுதான்!

‘‘இது திராவிட மாடல் ஆட்சி, இதை விட மகிழ்ச்சியான சொல் பெரியாருக்கு இருக்கமுடியாது..” - முரசொலி பாராட்டு !

தலைவர் கலைஞர் மீது பெருநம்பிக்கை வைத்திருந்தவர் தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா அவர்கள் இருக்கும்போதே, கலைஞரை அதிகம் புகழ்ந்து பேசி இருக்கிறார் பெரியார். கட்டுக்கோப்பாய் கழகத்தை வளர்த்ததில் பெரும் பங்கு கலைஞருக்கு உண்டு என்றும் எதிலும் முடிவுகளைத் துணிச்சலாக எடுப்பவர் என்றும் பாராட்டி எழுதி இருக்கிறார். கலைஞர் படத்தைத் திறந்து வைத்து பெரியார் பேசி இருக்கிறார். கலைஞருக்குச் சிலை வைக்க வேண்டும் என்று முதலில் சொன்னவரும் பெரியார் அவர்களே. ‘இந்த ஆட்சி பத்து ஆண்டுகள் நீடிக்க வேண்டும்’ என்று சொன்னவரும் பெரியாரே.

1971 சட்டமன்றத் தேர்தலில் பெரியாரின் கொள்கைகளை வைத்து, தி.மு.க.வை அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க சில வகுப்புவாத சக்திகள் முயன்ற போது, 184 தொகுதிகளைக் கொடுத்து மக்கள் மாபெரும் வெற்றியை கலைஞர் அவர்களுக்கு வழங்கினார்கள். ‘உங்களுக்கு வெற்றி கிடைத்தது, எனக்கு பழி நீங்கியது’ என்றார் பெரியார்.

இன்று பெரியார் இருந்திருந்தால், இந்த ஈராண்டு ஆட்சிக் காலத்தைப் பார்த்து என்ன சொல்லி இருப்பார்? ‘இனி இந்த ஆட்சியே நிரந்தரமாய் நீடித்திருக்க வேண்டும்’ என்று சொல்லி இருப்பார். ஏனென்றால் இது ‘திராவிட மாடல்’ ஆட்சி. இதனை விட பெரியாருக்கு மகிழ்ச்சியான சொல் இருக்க முடியாது.

சமூகநீதி - சுயமரியாதை - சமதர்மம் - சமநீதி - திராவிடவியல் ஆகிய சொற்களை அரசியல் சொற்களாக மட்டுமல்ல; ஆட்சியியலின் சொற்களாக ஆக்கிக் காட்டிவிட்டார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

தடி தட்டிப் பாராட்டி இருப்பார் தந்தை பெரியார்! தலை தொட்டுப் பாராட்டி இருப்பார் பேரறிஞர் அண்ணா! கட்டி அணைத்திருப்பார் கலைஞர்!

ஈராண்டு முடிந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாண்புமிகு முதலமைச்சரை - கலைஞரின் மூத்தபிள்ளையாம் ‘முரசொலி’ முரசறைந்து வாழ்த்துகிறது! கோன் வாழ்க! கொற்றமும் வாழ்க!

banner

Related Stories

Related Stories