முரசொலி தலையங்கம்

“கொள்கை அரசியலானது முழு ஒற்றுமைக்கு அடித்தளம்..” - காங்கிரசின் தீர்மானத்துக்கு முரசொலி வரவேற்பு !

கட்சி, தேர்தல் அரசியல் கூட ஒருங்கிணைப்புக்கும் ஒற்றுமைக்கும் சிறு அளவில்தான் பயன்படும். ஆனால் கொள்கை அரசியலானது முழு ஒற்றுமைக்கு அடித்தளம் அமைக்கும்.

“கொள்கை அரசியலானது முழு ஒற்றுமைக்கு அடித்தளம்..” - காங்கிரசின் தீர்மானத்துக்கு முரசொலி வரவேற்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

காங்கிரசின் தீர்மானம் !

2021 ஆம் ஆண்டு காங்கிரசுத் தலைவர் ராகுல் காந்தியை மேடையில் வைத்துக் கொண்டே சேலம் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள்...

”ராகுல் காந்தி அவர்களே! தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றாகத் திரட்டி ஓரணியாக ஆக்கி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிட்டோம். அதனால்தான் மகத்தான வெற்றியை பெற முடிந்தது. முழுமையான வெற்றியை பெற முடிந்தது. அது போல நீங்களும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று சேருங்கள். அதுதான் என்னுடைய கோரிக்கை” என்று சொன்னார்கள். மூன்று ஆண்டுகள் கழித்து இதையே அகில இந்திய காங்கிரசு கட்சியின் மாநாடு தனது பிரகடனமாகச் சொல்லி இருக்கிறது.

காங்கிரசு கட்சியின் 85 ஆவது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் மூன்று நாட்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் ஐந்து முக்கியமான பிரகடனத்தை காங்கிரசு கட்சி அறிவித்துள்ளது.

"நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும் பொதுவான, ஆக்கப்பூர்வமான செயல் திட்டத்தின் அடிப்படையில் ஒரே சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து செயல்படத் தயார்” என்று காங்கிரசு மாநாட்டின் முதல் தீர்மானம் சொல்கிறது. அதாவது ஒற்றுமையின் மூலமாக மட்டுமே பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்பதை காங்கிரசு கட்சி வெளிப்படையாகத் தெளிவுபடுத்தி இருக்கிறது.

“கொள்கை அரசியலானது முழு ஒற்றுமைக்கு அடித்தளம்..” - காங்கிரசின் தீர்மானத்துக்கு முரசொலி வரவேற்பு !

சில நாட்களுக்கு முன்னால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சொன்னதை வழிமொழிவதாகவும் இந்த தீர்மானம் அமைந்துள்ளது. “காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமைப் பயணம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. நாட்டின் சுதந்திரத்தில் பங்களிப்பு இல்லாதவர்கள் இப்போது வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள். அரசுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை ஒடுக்குவதற்கு புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துகின்றனர். பா.ஜ.க.வின் பிடியிலிருந்து நாட்டை மீட்க எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரசையும் உள்ளடக்கிய வலுவான கூட்டணியை உருவாக்கினால் பா.ஜ.க.வை 100 இடங்களுக்குள் சுருட்டிவிடலாம்” என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்திருந்தார்.

இதனை காங்கிரசு கட்சியும் வரவேற்று இருந்தது. ‘எங்களது மாநாட்டில் இதுபற்றி தீர்மானிப்போம்' என்று காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஜெயராம் ரமேஷ் சொல்லி இருந்தார். சொன்னது போலவே அறிவித்து இருக்கிறார்கள்.

பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க.வை எதிர்க்கும் பல்வேறு கட்சிகள் உள்ளன. பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள் என பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் பொறுப்பும் கடமையும் காங்கிரசு கட்சிக்கு இருக்கிறது. இதனை உணர்ந்ததாக அக்கட்சியின் தீர்மானம் அமைந்துள்ளது.

“கொள்கை அரசியலானது முழு ஒற்றுமைக்கு அடித்தளம்..” - காங்கிரசின் தீர்மானத்துக்கு முரசொலி வரவேற்பு !

அடுத்ததாக, பா.ஜ.க.வை கொள்கை ரீதியாக எதிர்க்கும் கட்சியாக காங்கிரசு தன்னை அடையாளம் காட்டி இருக்கிறது. "பா.ஜ.க.வுடனும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடனும் அவற்றின் இழிவான அரசியலுடனும் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாத கட்சி காங்கிரசு. பா.ஜ.க.வின் எதேச்சதிகார. வகுப்புவாத. கூட்டு முதலாளித்துவ தாக்குதலுக்கு எதிராக நாங்கள் எங்கள் அரசியல் விழுமியங்களைப் பாதுகாக்க எப்போதும் போராடுவோம்” என்ற காங்கிரசு அறிவிப்பு இன்றைய காலத்துக்கு மிக மிகத் தேவையாகும்.

கட்சி, தேர்தல் அரசியல் கூட ஒருங்கிணைப்புக்கும் ஒற்றுமைக்கும் சிறு அளவில்தான் பயன்படும். ஆனால் கொள்கை அரசியலானது முழு ஒற்றுமைக்கு அடித்தளம் அமைக்கும். அப்படித்தான் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியானது அமைந்தது. அதே போல் அகில இந்தியா முழுமைக்கும் அமைய காங்கிரசு தீர்மானம் வழிவகுக்கிறது.

“கொள்கை அரசியலானது முழு ஒற்றுமைக்கு அடித்தளம்..” - காங்கிரசின் தீர்மானத்துக்கு முரசொலி வரவேற்பு !

இதனையே ராகுல்காந்தியும் வழிமொழிந்திருக்கிறார். "வரும் தேர்தல்களில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு ஒன்றுபடுவோம்" என்று அவர் பேசி இருக்கிறார். “இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலமாக பெற்ற சக்தியை முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சி புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்" என்று ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

”கட்சித் தலைவர் கார்கே தலைமையில் அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்கும் இலக்கை காங்கிரசு தொண்டர்கள் சாதித்துக் காட்ட வேண்டும்” என்று சோனியா காந்தி பேசி இருக்கிறார்.

“கொள்கை அரசியலானது முழு ஒற்றுமைக்கு அடித்தளம்..” - காங்கிரசின் தீர்மானத்துக்கு முரசொலி வரவேற்பு !

பிரியங்காவின் பேச்சு இன்னும் தெளிவாக இருக்கிறது. "பா.ஜ.க.வுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளிடம் எதிர்பார்ப்பு உள்ளது. எல்லா எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை எதிர்ப்பவர்களும் நிச்சயமாக ஒன்றிணைந்து போராட வேண்டும். ஒவ்வொருவரும் இதற்காக போராட வேண்டும். காங்கிரசு அதிகமாகப் போராட வேண்டும்" என்று உறுதி அளித்திருக்கிறார் பிரியங்கா.

இதனை காங்கிரசு தலைவர் கார்கே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார். "புதிய காங்கிரசுக்கான தொடக்கம் இது. பல்வேறு சவால்களும் உள்ளன. இவை அனைத்தும் காங்கிரசால் சமாளிக்க மூடிந்த சவால்கள்தான். ஒற்றுமை, ஒழுக்கம், உறுதி ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது” என்று கார்கே பேசி இருக்கிறார்.

இவை அனைத்தும் ஒரே புள்ளியை நோக்கிச் செல்வதை அறிய முடிகிறது. அதுதான் ஒற்றுமை என்கிற புள்ளியாகும்.

banner

Related Stories

Related Stories