முரசொலி தலையங்கம்

"ரஃபேல் வாட்ச் பொய்யைப் போல ஒன்றிய பட்ஜெட்டிலும் பொய் சொல்லும் அண்ணாமலை".. முரசொலி கடும் தாக்கு!

அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் பொய்யைப் போல பட்ஜெட்டிலும் பம்முகிறார்.

"ரஃபேல் வாட்ச் பொய்யைப் போல ஒன்றிய பட்ஜெட்டிலும் பொய் சொல்லும் அண்ணாமலை"..  முரசொலி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (09-02-2023)

தமிழ்நாட்டுக்குத் தந்தது என்ன?

"தமிழ்நாட்டுக்கு ஏராளமான திட்டங்களை நிதிநிலை அறிக்கை யில் அறிவித்துள்ளார்கள்" என்று சொல்லி ஒன்றிய அரசுக்கு நன்றி சொல்லி இருக்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. அவர் எந்த நிதிநிலை அறிக்கையைப் பார்த்தாரோ தெரியவில்லை. சொந்தக் கட்சிக்காரர்களை வீழ்த்துவதற்காக அவர் நடத்தி வரும் வார் ரூமில் தயாரான அறிக்கையைப் பார்த்திருப்பாரோ என்னவோ?

"இதுவரை வெளியான அறிக்கைகளில் தமிழ்நாட்டுக்கு இரண்டு திருக்குறளாவது கிடைக்கும். தமிழ்நாட்டில் தேர்தல் ஏதும் இல்லாத தால் அதுவும் கிடைக்கவில்லை இந்த ஆண்டு" என்று நாடாளுமன் றத்திலேயே பேசி இருக்கிறார் தி.மு.க. நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி. இதுதான் உண்மை. திருக்குறள் தீர்த்தமும் இல்லை இந்த நிதி நிலை அறிக்கையில். ஆனால், அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் பொய்யைப் போல பட்ஜெட்டிலும் பம்முகிறார்.

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ் மக்களின் நல னுக்கு முன்னுரிமை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் ஆகியோருக்கு பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு: "மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6.080 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை 2009-2014 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கப்பட்ட (ரூ.879 கோடி) தொகையை விட ஏழு மடங்கு அதிகம். மேலும், தமிழ்நாட்டில் தற்போது ரூ.30,961 கோடி மதிப்பில் 27 திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

"ரஃபேல் வாட்ச் பொய்யைப் போல ஒன்றிய பட்ஜெட்டிலும் பொய் சொல்லும் அண்ணாமலை"..  முரசொலி கடும் தாக்கு!

அமித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ். நவீனமயமாக்க தமிழ் நாட்டில் 73 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. எழும் பூர், காட்பாடி, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட ரயில் நிலையங்களை அம்ரித் திட்டத்தின் கீழ் மேம்படுத்த ரூ.1,896 கோடி அண்மையில் ஒதுக்கப்பட்டது. மேலும், சென்னை சென்ட்ரல், கோவை, கும்பகோணம், தாம்பரம், திருநெல்வேலி, ஆவடி ஆகிய 6 ரயில் நிலையங்களுக்கு தொழில்நுட்ப, வணிக சாத்தியக்கூறு அறிக்கை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.

இவ்வளவு பெரிய நிதிநிலை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ள நன்மைகளைத் தொகுத்து அறிக்கையாக வெளியிடும் அளவுக்குக் கூட தகவல்கள் இல்லாததைத்தான் அண்ணா மலையின் ட்விட்டர் பதிவு எடுத்துக் காட்டுகிறது. ட்விட்டரில் போடும் அளவுக்கு ஒரே ஒரு தகவலை அண்ணாமலை கண்டுபிடித்துள்ளார். அவரது சாமர்த்தியத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

‘எங்களுக்கு குடிதண்ணீர் எங்கே?' என்று கேட்டானாம் ஒருவன். "உங்க வீட்டு வாசல் வழியா தண்ணீர் லாரி போகவில்லையா?' என்று பதில் வந்ததாம். அப்படி இருக்கிறது அண்ணாமலையின் பதில்.

“தமிழ்நாட்டை வளப்படுத்தும் சிறப்புத் திட்டம் எங்கே?" என்று கேட் டால், "ரயில் நிலையங்களைப் புதுப்பிக்கப் போகிறோமே!" என்கிறார் அவர். இவர்கள் ரயில் நிலையங்களையும், விமான நிலையங்களை யும் எதற்காக யாருக்காகப் புதுப்பிக்கிறார்கள் என்பதை இன்னும் உணராத 'இந்தியர்கள்' இனியாவது உணர வேண்டும். அவை தமிழ் நாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியல்ல, அதே 'நிறுவனத்துக்காக ஒதுக்கப் படும் நிதிகளே!

"ரஃபேல் வாட்ச் பொய்யைப் போல ஒன்றிய பட்ஜெட்டிலும் பொய் சொல்லும் அண்ணாமலை"..  முரசொலி கடும் தாக்கு!

ரயில்வே துறையின் மேம்பாட்டுக்காக 2.4 லட்சம் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. அதில் 6 ஆயிரம் கோடி என்பது எத்தனை விழுக்காடு என் பதை 20 லட்சம் புத்தகம் படித்த அண்ணாமலைதான் விளக்க வேண் டும். இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் நிதி ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2014 ஒதுக்கப்பட்டதை விட ஒன்பது மடங்கு அதி கம். கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம். இதில் தமிழ்நாட் டுக்கான அளவு குறைவுதான். இதிலும் புதிய வழித் தடங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டவை 1500 கோடி அளவில் மட்டும்தான்.

ஏராளமான ரயில்வே திட்டங்கள் கிடப்பில் கிடக்கிறது. புதிய ரயில் வழித்தடங்கள் அமைத்தல். மீட்டர்கேஜ் வழித் தடங்களை அகலப் பாதைகளாக மாற்றம் செய்தல், ரயில் வழித்தடங்களை இருவழிப் பாதையாக மாற்றுதல், மின்மயமாக்கல். முனைய வசதிகளை அதி கரித்தல், தமிர்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கூடுதல் வசதிகள் செய்து விரிவாக்கம் செய்தல், மூன்றாவது மற்றும் நான்காவது பாதை அமைத்தல்;. அதிவேகப் பாதைகள் அமைத்தல், புதிய ரயில் தொழிற்சாலைகள் அமைத்தல் என்றெல்லாம் திட்டமிட்டு இருந்தாலாவது பாராட்டலாம்.

கர்நாடக மாநிலத்துக்கு 5,300 கோடி ரூபாய் சிறப்பு நிதியுதவி தரப் பட்டுள்ளதே, அதுபோல் ஏன் தமிழ்நாட்டுக்குத் தரப்படவில்லை என்பது தான் எங்கள் கேள்வி. அந்த மாநிலத்துக்கு ஜூன் மாதம் சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. அதனால் கர்நாடகா மீது கரிசனை. தமிழ்நாட் டுக்கு எதுவுமில்லை.

"ரஃபேல் வாட்ச் பொய்யைப் போல ஒன்றிய பட்ஜெட்டிலும் பொய் சொல்லும் அண்ணாமலை"..  முரசொலி கடும் தாக்கு!

2015ஆம் ஆண்டு அருண்ஜெட்லி நிதி அமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்ட திட்டம் தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை. எட்டு நிதிநிலை அறிக்கை வந்துவிட்டது. அருண்ஜெட்லி அகால மரணம் அடைந் துவிட்டார். எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டடமும் அந்த நிலைமைக்குப் போய்விட்டது. நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறதே... தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்கவாவது நிதி ஒதுக்கி இருக்க வேண்டாமா என்பதுதான் நம்முடைய கேள்வி. ஆயிரம் கோடியை ஒதுக்கினாலும் தாமரையில் யாரும் வாக்குப் போட மாட்டார்கள் என்பது அண்ணாமலையை விட நிர்மலா சீதாராமன் நன்கு அறிவார்.

'அன்று நான் ஒற்றைச் செங்கலை எடுத்தேன். மொத்த மக்களும் கையில் செங்கலை எடுப்பதற்கு முன்னால் மருத்துவமனையைக் கட்டித் தாருங்கள்' என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அவர்கள் அதே மதுரையில் கேட்டாரே? அதன் பிறகாவது உணர்ச்சி வர வேண்டாமா?

banner

Related Stories

Related Stories