முரசொலி தலையங்கம்

இந்தியா ஒளிரவில்லை.. இருள் மயமாகவே இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒன்றிய பட்ஜெட்: முரசொலி சாடல்!

ஐக்கிய ஜனதா தள எம்.பி.யான ராஜீவ் ரஞ்சன் சொல்லி இருக்கிறார்: ‘கனவு கண்டு எழுந்ததும் எதுவும் உண்மையாக இருக்காது. அதுதான் இந்த நிதிநிலை அறிக்கை’ என்கிறார்.

இந்தியா ஒளிரவில்லை.. இருள் மயமாகவே இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒன்றிய பட்ஜெட்: முரசொலி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (04-02-2023)

கனவு கண்டு எழுந்ததும்....

ஒளிரும் இந்தியா – என்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ‘இது வெறும் மளிகைக் கடை பில்’ என்று சொல்லிவிட்டார் பா.ஜ.க.வைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுவாமி!

‘இது அமிர்த கால பட்ஜெட்’ என்கிறார் பிரதமர் மோடி. ‘இல்லை, இது அவரது நண்பர்களுக்கானது’ என்று சொல்லி இருக்கிறார் ராகுல் காந்தி!

‘கர்நாடகாவில் தேர்தல் வருகிறது. அதனால் அந்த மாநிலத்துக்கு அள்ளிக் கொடுத்து இருக்கிறார்கள். ‘தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சொற்பத் தொகைகூட இல்லை’ என்று சொல்லி அம்பலப்படுத்தி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

நிர்மலா சீதாராமன் சிவப்பு சேலை கட்டிவந்ததை ஒரு நாளிதழ் மகிழ்ச்சி செய்தியாக வெளியிட்டுள்ளது. ‘அபாயம்’ என்பதைத்தான் அவரது உடை தெரிவித்திருக்கிறது என்பதை அந்த நாளிதழ் உணர்ந்ததா எனத் தெரியவில்லை. இந்தியா ஒளிரவில்லை, இருள்மயமானதாகவே இருக்கிறது என்பதையே அவரது நிதிநிலை அறிக்கை காட்டுகிறது.

இந்தியா ஒளிரவில்லை.. இருள் மயமாகவே இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒன்றிய பட்ஜெட்: முரசொலி சாடல்!

எல்லோரும் நிர்மலா சீதாராமன் வாசித்த நிதிநிலை அறிக்கையைத்தான் பார்க்கிறார்கள். அதற்கு முந்தைய நாள் ஒரு அறிக்கை வெளியானது. அதனை யாரும் கவனிக்கவில்லை. அதுதான் பொருளாதார அறிக்கை 2022-–23 ஆகும். நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் இந்த அறிக்கையை வெளியிட்டார். இதுவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைதான். அதில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது தெரியுமா?

நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் தாண்டி 6.8 சதவிகிதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

சரிந்துவரும் ரூபாயின் மதிப்பைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலான பணியாக உள்ளது.

இந்தியா ஒளிரவில்லை.. இருள் மயமாகவே இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒன்றிய பட்ஜெட்: முரசொலி சாடல்!

சர்வதேச அளவில் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை மேலும் உயரும் நிலையில் அது ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஏற்றுமதி வளர்ச்சி மிதமான அளவிலேயே உள்ளது.

வங்கிகள் குறைவான வருமானத்தையும், லாபத்தையும் பதிவு செய்துள்ளன.

இந்தியாவில் ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக இருக்கிறது. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் இறக்குமதிக்கு டாலரில் தொகை செலுத்தப்படும் வேளையில், டாலர் ஆதிக்கம் காரணமாக ரூபாய் மதிப்பு சரியும்.

கணக்குப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிக்கும் போது இந்திய ரூபாயின் மதிப்பு கூடுதலாகப் பாதிக்கலாம்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவிகிதம் பேர் கிராமப்புறத்தில் வசிக்கிறார்கள். இதில் 47 சதவிகிதம் பேர் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு இருக்கிறார்கள். எனவே அரசு கிராமப்புற வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தியாக வேண்டும்.

- இவை, அவர்கள் வெளியிட்ட பொருளாதார அறிக்கையில் உள்ளவைதான். இந்தியா ஒளிர்கிறதா என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். ஏன் தனது உரையை சுருக்கமாக நிதி அமைச்சர் முடித்துக் கொண்டார் என்றால் இதனால்தான். இவற்றுக்கு எல்லாம் விளக்கம் அளிக்க அவரால் முடியாது. எனவே பேச்சை சுருக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தியா ஒளிரவில்லை.. இருள் மயமாகவே இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒன்றிய பட்ஜெட்: முரசொலி சாடல்!

ஏழுவிதமான முக்கியக் கருத்துக்களை இந்த நிதிநிலை அறிக்கை கொண்டிருப்பதாக நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைக்கோடி மனிதருக்கும் சேவை, உள் கட்டமைப்பு, திறன் மேம்பாடு, பசுமை வளர்ச்சி, இளைஞர் நலன் ஆகியவை என்று வரையறுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்துக்கு 5 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தவர்கள், தமிழ்நாட்டு எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு ஒரு கோடியைக் கூட ஒதுக்கவில்லை என்பதில் இவர்களது ஒருங்கிணைந்த வளர்ச்சியின் அளவுகோல் உடைந்து விடவில்லையா?

வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய எந்தத் திட்டத்தையும் உருவாக்காமல், கடைக்கோடி மனிதருக்கும் சேவை என்று எப்படிச் சொல்ல முடியும்? வறுமை ஒழிப்புத் திட்டமும் இல்லை, அதிகப்படியான வேலைவாய்ப்பு உருவாக்கமும் இல்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்தாமல், சிலிண்டர் விலையைக் குறைக்காமல், பெட்ரோல்- டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்தே போகும் நிலையில் துன்ப துயரங்களை அனுபவிப்பது கடைக்கோடி மனிதன் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கமும்தான்.

கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை 2.64 இல் இருந்து 2.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துக்கான தொகை 2.2 இல் இருந்து 1.98 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுதான் திறன் மேம்பாட்டை வளர்க்கும் முறையா? கல்வியும் சுகாதாரமும் தான் அனைத்து மனிதர்க்கும் பொதுவானது. இரண்டுக்குமான தொகையும் குறைக்கப்பட்டுள்ளது.

‘2020–ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு ஆகும், 2020-–க்குள் அனைவர்க்கும் வீடு கொடுத்து விடுவோம், 2020–க்குள் 8 கோடி பேருக்கு வேலை தரப்பட்டு விடும்’ என்று சொல்லப்பட்டதே; செய்யப்பட்டதா? இதுதான் அனைத்து மக்களையும் கவனித்த முறையா? இதில் எங்கே இருக்கிறது விவசாயிகளின் நலன்? இதில் எங்கே இருக்கிறது இளைஞர்களின் நலன்? எதையெல்லாம் நிர்மலா சீதாராமன் தனது நோக்கம் என்று சொன்னாரோ, அவை அனைத்தையும் கண்டுகொள்ளாத நிதி நிலை அறிக்கை இது.

ஐக்கிய ஜனதா தள எம்.பி.யான ராஜீவ் ரஞ்சன் சொல்லி இருக்கிறார்: ‘கனவு கண்டு எழுந்ததும் எதுவும் உண்மையாக இருக்காது. அதுதான் இந்த நிதிநிலை அறிக்கை’ என்கிறார்.

மாற்றுக் கருத்தே இல்லை

banner

Related Stories

Related Stories