முரசொலி தலையங்கம்

“கோவை நிகழ்வை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அண்ணாமலை.. அமைதிச் சூழலை உருவாக்கிய காவல்துறை” : முரசொலி !

இது போன்ற சம்பவங்களில் காவல்துறையின் விசாரணைத் தகவல்களை உடனடியாக வெளியிட முடியாது என்பதை, முன்னாள் காவல்துறை அதிகாரியான அவர் அறிந்தே இருப்பார்.

“கோவை நிகழ்வை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அண்ணாமலை.. அமைதிச் சூழலை உருவாக்கிய காவல்துறை” : முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

துரிதமாய்ச் செயல்பட்ட காவல்துறை!

நாட்டில் வன்செயல் எங்காவது நடக்காதா, அதை வைத்து ஆதாயம் அடைய மாட்டோமா என்று அலையும் கட்சியாக பா.ஜ.க. இருந்து கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் கோவை நிகழ்வை வைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்த்துள்ளது பா.ஜ.க.

ஆனால், தனது துரிதமான செயல்பாடுகளின் மூலமாக காவல் துறை சிறப்பாகச் செயல்பட்டு, பா.ஜ.க.வுக்கு பதில் அளித்து வருகிறது. கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சென்று கொண்டு இருந்த கார் வெடித்து அதில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் பலியாகி இருக்கிறார்.

அந்த வாகனத்தில் 2 கியாஸ் சிலிண்டர்கள் இருந்துள்ளன. அவை இரண்டும் சேதம் அடைந்துள்ளன. உடனடியாக தடய அறிவியல், கைரேகைப் பிரிவு நிபுணர்கள் அந்த இடத்துக்கு வந்தார்கள். அந்த இடத்தில் இருந்த சில வேதிப்பொருள்கள், கோலிக் குண்டுகள், ஆணிகள் ஆகியவற்றைக் கைப்பற்றினார்கள்.

“கோவை நிகழ்வை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அண்ணாமலை.. அமைதிச் சூழலை உருவாக்கிய காவல்துறை” : முரசொலி !

இறந்தவரை அடையாளம் காண்பதே பெரிய சிக்கல் ஆகும். ஆனால் இறந்தவர் யார் என்பதை உடனடியாக காவல் துறை துப்புத் துலக்கியது. அவர் பயணம் செய்த கார், பத்து பேரின் கைக்கு மாறிய கார் ஆகும். வரிசையாகத் தேடி, இது ஜமேஷா முபின் வசம்தான் இருக்கிறது என்பதை பத்து மணி நேரத்துக்குள் கண்டுபிடித்தது காவல் துறை.

உடனடியாக அவரது வீடு சோதனையிடப்பட்டது. அவரது வீட்டில் 75 கிலோ வெடி பொருட்கள் இருந்ததை காவல்துறை அன்றைய தினமே கைப்பற்றியது. அவரது ரகசிய டைரி எடுக்கப்பட்டுள்ளது. இது நடந்த உடனேயே டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் கோவை சென்றார்கள்.

“கோவை நிகழ்வை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அண்ணாமலை.. அமைதிச் சூழலை உருவாக்கிய காவல்துறை” : முரசொலி !

கோவை மாநகர காவல்துறை முழுமையாக முடுக்கி விடப்பட்டது. அந்தப் பகுதி மட்டுமல்லாமல், கோவையே காவல்துறை கட்டுப்பாட்டுக்குச் சென்றது. ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுகுறித்த விசாரணைப் படலம் தொடங்கியது. சந்தேகத்துக்கு இடமான வகையில் 22 பேர் தனித்து பிரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள்.

இதில் தொடர்புடையவர்களாக ஐந்து பேர் கருதப்படுகிறார்கள். ஜமேஷா முபின் வீட்டைச் சுற்றிலும் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை முழுமையாகப் பார்வையிட்டதில் இவர்கள் சிக்கினார்கள். முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஐந்து பேரும் மறுநாளே உடனடியாகக் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் 5 பேர் மீதும் வெடி பொருள்கள் சட்டம் பாய்ச்சப்பட்டது.

“கோவை நிகழ்வை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அண்ணாமலை.. அமைதிச் சூழலை உருவாக்கிய காவல்துறை” : முரசொலி !

பின்னர், சட்ட விரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டமானது பாய்ந்தது. உடனடியாக அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். சந்தேக மரணம், வெடிபொருள்கள் சட்டம், கூட்டுச் சதி, இரு பிரிவினரி டையே விரோதம் ஏற்படுத்துதல் ஆகிய பல்வேறு பிரிவுகள் இவர்கள் ஐந்து பேர் மீதும் போடப்பட்டுள்ளன. ‘உபா’ எனப்படும் சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டமானது வலிமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிக்கிய சிலருக்கு கேரளாவில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருக்கிறது. எனவே நமது காவல்துறை கேரளா சென்றும் விசாரணை நடத்தி வருகிறது. கோவையில் சந்தேகத்துக்குரிய இடம், வீடுகளில் தொடர்ந்து கண்காணிப்பைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள் காவல்துறையினர். சிலிண்டர் வெடிவிபத்து நடந்த இடத்துக்கு 200 மீட்டர் தாண்டி காவல் துறையின் சோதனைச் சாவடி இருந்துள்ளது.

“கோவை நிகழ்வை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அண்ணாமலை.. அமைதிச் சூழலை உருவாக்கிய காவல்துறை” : முரசொலி !

குறிப்பிட்ட இடத்தில் வெடிக்காமல் இருந்தால், அந்த சோதனைச் சாவடியில் காவல்துறையிடம் அந்த நபர் சிக்கி இருப்பார் என்பதே உண்மையாகும். சிலிண்டர் வெடித்த இடத்துக்கு அருகில் இருந்த கோவிலில் அதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகச் சென்று கண்காணிப்புப் பணியைச் செய்துள்ளார்கள். இப்படி துரிதமாகவே தமிழகக் காவல்துறை செயல்பட்டுள்ளது. எனவேதான் இச்சம்பவம் நடந்த மறுநாள் தீபாவளி அன்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளது வரவேற்புக்குரியது என்றுதான் சொல்லி இருக்கிறார். தீபாவளி முடிந்ததும் அவருக்குள் அடங்கி இருந்தது வெளியில் வந்து, அவதூறுகளை அள்ளித் தெளிக்கத் தொடங்கி உள்ளார்.

“கோவை நிகழ்வை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அண்ணாமலை.. அமைதிச் சூழலை உருவாக்கிய காவல்துறை” : முரசொலி !

இது போன்ற சம்பவங்களில் காவல்துறையின் விசாரணைத் தகவல்களை உடனடியாக வெளியிட முடியாது என்பதை, முன்னாள் காவல்துறை அதிகாரியான அவர் அறிந்தே இருப்பார். ஆனாலும், ஆதாயம் தேடும் அவரது துடிப்பு மட்டுமே அவரது பேட்டிகள் மூலமாக வெளியில் தெரிகிறது. ‘கோவையே கலவர பூமியாக இருக்கிறது’ என்று பேட்டி அளிப்பதன் மூலமாக மக்களை பீதிக்குள்ளாக்கும் காரியங்களையே தமிழக பா.ஜ.க. தலைமை செய்கிறது. பொதுமக்களை அச்சமற்ற வகையில் காக்கும் கடமையை காவல்துறை செய்து வரும் போது, மக்களை அச்சத்துக்கு உள்ளாக்குவது அரசியல் சக்திகளாக அமைந்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

“கோவை நிகழ்வை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அண்ணாமலை.. அமைதிச் சூழலை உருவாக்கிய காவல்துறை” : முரசொலி !

தனிமனித வன்முறையாக இருந்தாலும் ஜாதி, மத வன்முறையாக இருந்தாலும் அவற்றை இரும்புக் கரம் கொண்டு அடக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். ‘குற்றம் நடைபெறாத மாநிலமாக தமிழ்நாடு அமைய வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.

மீறி நடந்து விட்டால், குற்றவாளிகள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்கள். முதலமைச்சர் அவர்களின் வலிமையான நடவடிக்கைதான், அமைதியான சூழலை தமிழகத்தில் உருவாக்கி உள்ளது. அமைதிதான், வளமான வளர்ச்சியை தமிழ்நாட்டுக்கு வழங்கி வருகிறது. அத்தகைய அமைதிச் சூழலை உருவாக்க நாளும் உழைத்து வருகிறது தமிழ்நாடு காவல்துறை. வார்த்தை வெடிகளை வைப்பதைச் சிலர் நிறுத்தினாலே போதும்.

banner

Related Stories

Related Stories