முரசொலி தலையங்கம்

“நீங்களே குடும்ப அரசியலின் குழந்தைதான்..” : வாய்விட்டு மாட்டிக்கொண்ட பியூஷ் கோயலுக்கு முரசொலி பதிலடி!

எட்­டாண்டு கால பா.ஜ.க. ஆட்­சி­யில் எது­வு­மில்­லையே என்ற ஏக்­கத்­தில் இப்­படி எதையோ உள­றிக் கொண்டு இருக்­கி­றார்­கள் பியூஷ் கோயல்­கள்.

“நீங்களே குடும்ப அரசியலின் குழந்தைதான்..” : வாய்விட்டு மாட்டிக்கொண்ட பியூஷ் கோயலுக்கு முரசொலி பதிலடி!
ANI
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (19-10-2022)

பியூஷ் கோயல்கள் கவனத்துக்கு!

தங்களது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக தமிழ்நாடு வரும் ஒன்றிய அமைச்சர்களுக்கு, தி.மு.க. ஆட்சியைப் பற்றி ஏதாவது சொன்னால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதால் அத்தகைய வார்த்தைகளை உதிர்த்துச்

செல்வது வழக்கமானதாக ஆகிவிட்டது. ஒன்றிய அரசின் சாதனைகளாகச் சொல்வதற்கு ஏதுமில்லாததால் தி.மு.க.வைச் சீண்டிப்பார்ப்பதை பழக்கமாக வைத்துள்ளார்கள்.

ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய பியூஷ்கோயல், தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடப்பதாகவும், குடும்ப அரசியல் செய்வதாகவும் கண்டுபிடித்திருக்கிறார். நாடோ, மாநிலமோ அவருக்குத் தெரியவில்லை. குடும்பம்தான் தெரிகிறது. ஏனென்றால் குடும்ப அரசியலின் குழந்தைதான் இந்த பியூஷ் கோயல்.

வேத் பிரகாஷ் கோயல்-சந்திரகாந்தா கோயல் ஆகியோரின்

மகனாக மும்பையில் பிறந்தவர் இந்த பியூஷ் கோயல். இவரது தந்தை வேத் பிரகாஷ் கோயல், பிரதமர் வாஜ்பாய் அவர்களது அமைச்சரவையில் 2001 முதல் 2003 வரை கப்பல் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர். பா.ஜ.க.வின் தேசிய பொருளாளராக இருந்தவர் இவர். அவர் வழியில் அரசியலுக்குள் நுழைந்தவர்தான் இந்த பியூஷ் கோயல்.

இவரது அம்மா சந்திரகாந்தா கோயலும் அரசியலில் இருந்தவர் தான். மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப் பட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் இவரது தாய். இவர்களால்தான் 2010 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக ஆனவர் இவர். இத்தகைய பியூஷ் கோயல்தான் குடும்ப அரசியலைப் பற்றி பேசுகிறார்.

“நீங்களே குடும்ப அரசியலின் குழந்தைதான்..” : வாய்விட்டு மாட்டிக்கொண்ட பியூஷ் கோயலுக்கு முரசொலி பதிலடி!

குடும்பங்களால் ஆபத்து என்பதை பிரதமர் நரேந்திரமோடியும்,

உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அடிக்கடி சொல்லி வருகிறார்கள். ராகுல்காந்தி என்ற பிம்பம் அவர்களை இந்தளவுக்கு பாடாய் படுத்துகிறது என்பதை இதன் மூலம் உணர முடிகிறது. காங்கிரசு கட்சிக்கு எதிராக

அவர்களால் சொல்வதற்கு இருக்கும் ஒரே குற்றச்சாட்டாக இதுதான் அமைந்துள்ளது. அதேபோல், தி.மு.க.வை கொள்கை ரீதியாக, அதன் ஆட்சியை விமர்சிக்க முடியாத நிலையில் சொல்வதற்கு கிடைத்த ஒன்றாக குடும்பம் என்ற சொல்லாடலைப் பிடித்து பியூஷ் கோயல்கள் தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

குடும்ப அரசியல் குறித்து பேசும் தகுதி பா.ஜ.க.வுக்கு இருக்கிறதா?

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ்சிங் எம்.பி.

வசுந்தரராஜே சிந்தியா மகன் துஷ்யந்த்சிந்தியா எம்.பி.

ராமன்சிங் மகன் அபிஷேக்சிங் எம்.பி.

பிரேம்குமார் சமானி மகன் அனுராக்தாகூர் எம்.பி.

கோபிநாத் முண்டே மகள் பங்கஜ் முண்டே எம்.பி. யஸ்வந்த்சின்கா மகன் ஜெயந்த்சின்கா எம்.பி.

பிரமோத்மகாஜன் மகள் பூனம் மகாஜன் எம்.பி.

கல்யாண்சிங் மகன் ராஜ்பீர்சிங் எம்.பி.

தேவேந்திரபிரதாபன் மகன் தர்மேந்திரபிரதாபன் எம்.பி.

எடியூரப்பா மகன் ராகவேந்திரா எம்.பி.

லால் கோயல் மகன் விஜய் கோயல்

-- இதுதான் பா.ஜ.க.வின் 'குடும்ப அரசியல்'. இவர்களை எதிர்க்கத்தான் குடும்ப அரசியல் என்று பிரதமர் பேசுகிறாரா? உள்துறை அமைச்சர் சொல்கிறாரா? பியூஷ் கோயல் பிதற்றுகிறாரா?

“நீங்களே குடும்ப அரசியலின் குழந்தைதான்..” : வாய்விட்டு மாட்டிக்கொண்ட பியூஷ் கோயலுக்கு முரசொலி பதிலடி!

தி.மு.க.வின் செல்வாக்கு உயர்வதுதான் இவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது திட்டங்களின் மூலமாக காலாகாலத்துக்கும் அசைக்க முடியாத ஆட்சியாக தி.மு.க. ஆட்சி அழுத்தம் பெறுவதுதான் இவர்களது பிரச்சினையாக இருக்கிறது. ஐயகோ! இப்படி சொல்லிக் கொள்வதற்கு எட்டாண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் எதுவுமில்லையே என்ற ஏக்கத்தில் இப்படி எதையோ

உளறிக் கொண்டு இருக்கிறார்கள் பியூஷ் கோயல்கள்.

பா.ஜ.க. அரசாங்கத்தை ராகுல் காந்தி அவர்கள் ஒரே ஒரு வரியில் அடையாளம் காட்டினார்.

"இந்த அரசாங்கம் என்பது நாம் இருவர், நமக்கு இருவர்

அரசாங்கம்" என்று சொன்னார். நாம் இருவர் என்று ராகுல்

சொல்வது, மோடியும் அமித்ஷாவும்!

நமக்கு இருவர் என்று சொல்வது யார் என்பதை அவர்களே அறிவார்கள். இதுதான் இந்தியாவைப் பொறுத்தவரை 'மிகப்பெரிய அரசியல் குடும்பம்'. அதைப் பற்றி கோயல்கள் விளக்கமளிக்கட்டும்.

இந்த நாட்டுக்கு ஆபத்தானது, பிரித்தாளும் அரசியல் அனைத்திலும் ஏகபோகம். இதுதான் ஆபத்தானது. தொழில், வர்த்தகத் துறை அமைச்சருக்கு இதன் உண்மைப் பொருள் புரியும். இவர் காலத்தில் தான் இது அதிகமாகி விட்டது. அவர் இதுபற்றித்தான் விளக்கமளிக்க கடமைப்பட்டவர். நாளைய அழிவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்.

"எல்லா அமைச்சர்களையும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்

போகிறோம்" என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறார். அழைத்து வரட்டும், தவறில்லை. அவர்களை அழைத்து வருவதை விட முக்கியமானது தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் திட்டங்களை அழைத்து வாருங்கள். கொண்டு வாருங்கள். வரும் போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிதியைக் கொண்டு வரச் சொல்லுங்கள். சும்மா வர வேண்டாம்!

நான்காண்டுக்கு முன் வைக்கப்பட்டது செங்கல். இன்னும் விறகு

வரவில்லை. சட்டி வரவில்லை. எண்ணெய் வரவில்லை. பருப்பு

வரவில்லை... ஒன்றும் வரவில்லை! ஒன்றிய அமைச்சர்கள் வரப்போகிறார்களாம்! வந்து.....?!

வர­வில்லை.... ஒன்­றும் வர­வில்லை! ஒன்­றிய அமைச்­சர்­கள் வரப்­போ­கி­றார்­க­ளாம்! வந்து....?!

banner

Related Stories

Related Stories