முரசொலி தலையங்கம்

திமுக அரசின் சாதனைக்கும் இவருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? வாய்க்கு வந்­த­படி வடை சுடுகிறார் பழ­னி­சாமி!

தூத்­துக்­குடி துப்­பாக்­கிச் சூடு தொடர்­பாக நீதி­பதி அருணா ஜெக­தீ­சன் ஆணை­யம் அமைத்­தது அ.தி­.மு.க. அரசு. அதனை முடித்து வைத்­து­விட்­டது தி.மு.க. அரசு.

திமுக அரசின் சாதனைக்கும் 
இவருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? வாய்க்கு வந்­த­படி வடை சுடுகிறார் பழ­னி­சாமி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (98-10-2022)

என்ன செய்தார் பழனிசாமி?

இப்­போது ஊர் ஊரா­கப் பட்­ட­ணப்­பி­ர­வே­சம் போய் கொண்டு இருக்­கி­றார் பழ­னி­சாமி.பன்­னீர்­செல்­வத்­துக்கு எதி­ராக தனது செல்­வாக்கை(!) தூக்கி நிறுத்­து­வ­தற்­கான பய­ண­மாம் இது?அத்­த­கைய பய­ணத்­தின் போது அவர் ஒரு கருத்­தைச் சொல்லி இருக்­கி­றார். ‘அ.தி­.மு.க. ஆட்­சி­யில் அறி­வித்த திட்­டங்­க­ளைத் தான் தி.மு.க. அரசு தொடங்கி வைத்து வரு­கி­றது. தி.மு.க. ஆட்­சிக்கு வந்த பிறகு பெரி­தாக எந்­தத் திட்­டத்­தை­யும் கொண்டு வர­வில்லை. 2021 பொதுத்­ தேர்­த­லில் அறி­வித்த வாக்­கு­று­தி­கள் எதை­யும் நிறை­வேற்­ற­வில்லை” என்று பொத்­தாம் பொது­வாக உள­றி­ வ­ரு­கி­றார்.

அ.தி.மு.க. ஆட்­சி­யில் அறி­வித்த திட்­டங்­க­ளைத்­தான் தி.மு.க. அரசு தொடங்கி வைத்து வரு­கி­றது என்­றால் அது என்­னென்ன திட்­டங்­கள் என்று பழ­னி­சாமி வரி­சைப்­ப­டுத்தி இருந்­தால், அவர் ஆண்ட யோக்­கி­யதை வெளிப்­பட்டு இருக்­கும். அதை வரி­சைப்­ப­டுத்­தா­மல் - அப்­படி எது­வும் இல்­லா­த­தால் பொத்­தாம் பொது­ வா­கச் சொல்லி இருக்­கி­றார்.தி.மு.க. தனது தேர்­தல் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்ட 60 விழுக்­காடு வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றி இருக்­கி­றது என்­பதை முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் சொல்லி வரு­கி­றார்­கள். அவை என்­னென்ன திட்­டங்­கள் என்­ப­தை­யும் சட்­ட­மன்­றத்­தி­லும் மக்­கள் மன்­றத்­தி­லும் வரி­சைப்­ப­டுத்தி வரு­கி­றார்­கள். ‘முத­ல­மைச்­சர் நிறை­வேற்­றி­விட்­ட­தா­கச் சொல்­லும் வாக்­கு­றுதி இன்­னும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை’ என்­ப­தை­யா­வது தனது புத்­தி­சாலி மூளை­யால்(!) அவர் வெளிப்­ப­டுத்தி இருக்க வேண்­டும். அத­னை­யும் செய்­ய­வில்லை. அதை விட்­டு­விட்டு வாய்க்கு வந்­த­படி வடை சுட்­டுள்­ளார் பழ­னி­சாமி.

திமுக அரசின் சாதனைக்கும் 
இவருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? வாய்க்கு வந்­த­படி வடை சுடுகிறார் பழ­னி­சாமி!

அர­சுப் பள்ளி மாண­வர்­க­ளுக்கு காலை உணவு வழங்­கும் திட்­டம் தொடங்­கப்­பட்­டுள்­ளது. இது பழ­னி­சாமி திட்­ட­மிட்டு இருந்­ததா? மக­ளி­ருக்கு கட்­ட­ண­மில்லா பேருந்து பய­ணம் என்­ப­தன் மூல­மாக இது­வரை 176.84 கோடி முறை மக­ளிர் இல­வச வச­தியை பயன்­ப­டுத்தி வரு­கி­றார்­கள். ஒரு நாளைக்கு 39.21 லட்­சம் மக­ளிர் கட்­ட­ண­மில்­லா­மல் பய­ணம் செய்­கி­றார்­கள். இது பழ­னி­சாமி திட்­ட­மிட்டு இருந்­ததா? வேளாண் துறைக்­காக தனி­யாக நிதி நிலை அறிக்­கையை பழ­னி­சாமி போட்­டாரா? ‘விவ­சாயி’ என்று சொல்லி பச்­சைத் துண்டு போட்டு ஏமாற்­றி­னாரே? மாட்­டு­வண்­டி­யில் போனாரே? தனக்­குத் தானே பாராட்டு விழா நடத்­திக் கொண்­டாரே? அவ­ரது ஆட்­சி­யில் தனி நிதி நிலை அறிக்கை வந்­ததா? இன்­றைக்கு தமிழ்­நாட்­டின் பாச­னப் பரப்பு அதி­க­மாகி இருக்­கி­றது. இதன் மூல­மாக விளைச்­சல் அதி­க­மாகி இருக்­கி­றது. இதன் மூல­மாக விலை­வாசி குறைந்­தி­ருக்­கி­றது. பெட்­ரோல், டீசல் விலை உயர்ந்­தா­லும் தமிழ்­நாட்­டில் உண­வுப் பொருள்­கள் விலை அதி­க­ரிக்­கா­த­தற்கு கார­ணம், உற்­பத்தி அதி­க­மா­னது தான். வாங்­கும் சக்தி அதி­க­மா­ன­தற்­குக் கார­ணம் இது­தான் என்று பிர­பல ஆங்­கில நாளே­டு­கள் இப்­போது எழு­து­கின்­றதே. பழ­னி­சாமி காலத்­தில் அப்­போது எழு­தி­னார்­களா? இல்லை!

மிகப்­பெ­ரிய இளைய சக்தி உரு­வாக்­கத்தை முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்­தி­ருக்­கி­றார். இல்­லம் தேடிக் கல்வி, நான் முதல்­வன், கல்­லூ­ரிக் கனவு - ஆகிய திட்­டங்­க­ளின் மூல­மாக பள்ளி - கல்­லூ­ரி­ க­ளில் படிப்­ப­வர்­கள் மட்­டு­மல்ல படிப்பை முடிப்­ப­வர்­கள் தங்­க­ளது தனித்­தி­ற­மையை வளர்த்­துக் கொள்­கி­றார்­கள். சமூ­கம் எதிர்­பார்க்­கும் ஆற்­றல் கொண்­ட­வர்­க­ளாக வளர்­கி­றார்­கள். இதன் மூலம் நிறு­வ­னங்­கள் தங்­க­ளுக்கு தேவை­யான திற­மை­சா­லி­களை தமிழ்­நாட்­டுக்­குள் இருந்தே எடுத்­துக் கொள்­கி­றது. இது இன்­றைய அர­சாக மட்­டு­மில்­லா­மல் - அடுத்த தலை­மு­றை­க­ளின் அர­சா­க­வும் இதனை வழி­ந­டத்தி வரு­கி­றார் முத­ல­மைச்­சர். அப்­படி ஏதா­வது திட்­டத்தை பழ­னி­சாமி தன் காலத்­தில் தொடங்கி இருந்­தாரா?

திமுக அரசின் சாதனைக்கும் 
இவருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? வாய்க்கு வந்­த­படி வடை சுடுகிறார் பழ­னி­சாமி!

ஆசி­யா­வின் புகழ்­பெற்ற அண்ணா நூற்­றாண்டு நூல­கத்­தைச் சிதைத்­தது தான் அ.தி­.மு.க. ஆட்­சி­யின் சாத­னை­யா­கும். சென்­னை­யில் இருப்­ப­தைப் போல - மது­ரை­யில் கலை­ஞர் பேரால் நூல­கம் அமைக்­கப்­பட்டு வரு­கி­றதே; இதற்­கும் பழ­னி­சா­மிக்­கும் ஏதா­வது தொடர்பு உண்டா? ஜல்­லிக்­கட்டு விளை­யாட்டை நடத்த உரிமை கேட்டு சென்னை கடற்­க­ரை­யில் போரா­டி­ய­வர்­கள் மீது வன்­மு­றையை ஏவி­விட்­டது அ.தி­.மு.க. அரசு. இதோ ஜல்­லிக்­கட்டு நடத்த தனி மைதா­னம் கட்­டித் தர திட்­ட­மிட்­டுள் ­ளது தி.மு.க. அரசு. இதற்­கும் பழ­னி­சா­மிக்­கும் ஏதா­வது தொடர்பு உண்டா? 200 அம்மா கிளி­னிக் அமைக்­கப் போகி­றேன் என்று அறி­வித்­தார் பழ­னி­சாமி. கார் ஷெட்­டில் அமைத்­தார். சுடு­காட்டு தகன மேடை­யில் அமைத்­தார். 100 அடி இடம் கிடைத்­தால் அதில் தகர ஷெட் போட்டு பச்­சைப் பெயிண்ட் அடித்­தார். புதி­தாக மருத்­து­வர்­களை வேலைக்கு எடுக்­க­வில்லை. செவி­லி­யர்­களை வேலைக்கு எடுக்­க­வில்லை. அரு­கில் இருந்த மருத்­து­வ­ம­னை­யில் இருந்து அள்­ளிக் கொண்டு வந்து, ‘இதோ பார் அம்மா கிளி­னிக்’ என்று கிலு­கி­லுப்பை காட்­டி­னார். மருந்­தும் இல்லை, மாத்­தி­ரை­யும் இல்லை, அது மருத்­து­வ­ம­னை­யும் இல்லை. வெறும் மனை மட்­டும் தான். ஆனால் இன்று மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் சென்று கொண்­டுள்­ளது.

வீட்­டுக்­குள் படுத்­தி­ருப்­ப­வ­ரின் கட்­டி­லுக்கே சென்று சிகிச்சை தரப்­ப­டு­கி­றது. ஒரு கோடி­யைத் தொட்­டு­விட்­டது இந்த பயன்­பாடு. நம்­மைக் காக்­கும் 48 திட்­டத்­தின் மூல­மாக ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­கள் காப்­பாற்­றப்­பட்­டுள்­ளன. இதற்­கும் பழ­னி­சா­மிக்­கும் ஏதா­வது தொடர்பு உண்டா?இப்­படி சொல்­லிக் கொண்டே போக­லாம் பழ­னி­சா­மிக்கு! அவர் வெறும் கையில் முழம் போட்­டுக் கொண்டு இருந்­தார். கோடிக்­க­ணக்­கா­ன­வர்

கரங்­களில் பூக்­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றார் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின்.பழ­னி­சாமி ஆட்­சி­யில் நீதி­பதி ஆறு­மு­கச்­சாமி ஆணை­யம் அமைத்­தார். அதன் அறிக்­கையை பெற்­று­விட்­டது தி.மு.க. அரசு. தூத்­துக்­குடி

துப்­பாக்­கிச் சூடு தொடர்­பாக நீதி­பதி அருணா ஜெக­தீ­சன் ஆணை­யம் அமைத்­தது அ.தி­.மு.க. அரசு. அதனை முடித்து வைத்­து­விட்­டது தி.மு.க. அரசு.இதனை மன­தில் வைத்­துத்­தான், ‘அ.தி­.மு.க. ஆட்­சி­யில் செய்­த­தைத் தான் தி.மு.க. அரசு செயல்­ப­டுத்­து­கி­றது’ என்று சொல்­கி­றாரோ பழ­னி­சாமி?!

banner

Related Stories

Related Stories