முரசொலி தலையங்கம்

"‘மக்­க­ளோடு செல்’ என்றார் பேரறிஞர் அண்ணா.. இன்று மக்களோடு இருக்கிறார் முதலமைச்­சர்.." முரசொலி புகழாரம் !

பேர­றி­ஞர் பெருந்­த­கையே! ‘வடக்கு வாழ்­கி­றது, தெற்கு தேய்­கி­றது’ என்று நீங்­கள் சொன்­னீர்­கள். தெற்கை இன்று வியந்து பார்த்­துக் கொண்­டி­ருக்­கிறது வடக்கு.

"‘மக்­க­ளோடு செல்’ என்றார் பேரறிஞர் அண்ணா.. இன்று மக்களோடு இருக்கிறார் முதலமைச்­சர்.." முரசொலி புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அறிஞர் அண்ணாவே ஆள்கிறார்!

அறி­வுக்கு விருந்­தாம் அண்ணா அவர்­க­ளின் பிறந்த நாளில் வயிற்றுக்கு உணவு வழங்­கு­கிறார் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். கடந்த மாதத்­தில் ஒரு­நாள் சென்னை மாந­க­ராட்­சிப் பள்ளி மாண­வர்­களுக்­கான மன­வ­ளக் கலை பயிற்சி வகுப்பினைத் தொடங்கி வைக்­கச் சென்­றி­ருந்­தார் முத­ல­மைச்­சர்.

அதி­கா­லை­யி­லேயே பள்­ளிக்­குப் புறப்­பட்டு வந்த பிள்­ளை­க­ளி­டம், ‘காலை­யில் சாப்­பிட்டு விட்­டுத்­தான் வந்தீர்களா?’ என்று கேட்­டார். சிலர் சாப்­பிட்­ட­தா­கச் சொன்­னார்­கள். சில பிள்­ளை­கள் சாப்பிடவில்லை என்று சொன்­னார்­கள். ‘‘பள்­ளிக் கூடங்­களில் காலை சிற்றுண்­டியை முதல்­கட்­ட­மா­கத் தொடங்­கும் திட்­டத்­துக்கு நேற்று தான் கையெ­ழுத்­துப் போட்­டேன்’’ என்று அந்த நிகழ்ச்­சி­யில் சொன்­னார்­கள்.

"‘மக்­க­ளோடு செல்’ என்றார் பேரறிஞர் அண்ணா.. இன்று மக்களோடு இருக்கிறார் முதலமைச்­சர்.." முரசொலி புகழாரம் !

‘‘பெரும்­பா­லான பிள்­ளை­கள் காலை­யில் புறப்­ப­டும் போது சாப்பிடா­மல் பள்­ளிக்கு வரு­கி­றார்­கள் என்று சொல்­கி­றார்­கள். காலை­யில் சாப்­பி­டா­மல் இருக்­கக் கூடாது. டாக்­டர்­கள் என்ன சொல்­கி­றார்­கள் என்­றால் காலை­யில் தான் அதி­க­மாக சாப்­பிட வேண்­டும் என்­கி­றார்­கள். மதி­யம் அதை­விட குறை­வா­க­வும் -

இர­வில் குறை­வா­க­வும் சாப்­பிட வேண்­டும் என்று சொல்­கி­றார்கள். ஆனால் எல்­லா­ரும் காலை­யில் குறைவாகவும், இரவு அதிகமாகவும் சாப்­பி­டு­வதை வழக்­க­மாக வைத்­துள்­ளார்­கள். அது மாதிரி இருக்­கக் கூடாது.

காலை உணவை யாரும் தவ­ற­வி­டக் கூடாது. பள்­ளிக்­கூ­டத்­துக்கு அதி­கா­லை­யில் அவ­சர அவ­ச­ர­மா­கக் கிளம்பி வர வேண்­டிய சூழல் இருப்­பதை மன­தில் வைத்து 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் அர­சுப் பள்ளிப் பிள்­ளை­க­ளுக்கு காலை சிற்­றுண்டி வழங்­கும் திட்­டத்தை தமிழ்­நாடு அரசு தொடங்­கப் போகி­றது’’ என்று அறிவித்­தார்­கள்.

வெள்­ளுடை வேந்­தர் தியா­க­ரா­யர்

பெருந்­த­லை­வர் காம­ரா­சர்

தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர்

மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர். -ஆகி­யோ­ரால் வளர்த்­தெ­டுக்­கப்பட்ட இந்த திட்­ட­மா­னது இன்­றைய அர­சால் அடுத்த வளர்ச்­சியை அடை­யப் போகி­றது. இதன் மூல­மாக மாண­வச் சமு­தா­யம் மட்­டு­மல்ல, தமி­ழ­கக் கல்­வியே மேம்­பாடு அடை­யப் போகி­றது.

"‘மக்­க­ளோடு செல்’ என்றார் பேரறிஞர் அண்ணா.. இன்று மக்களோடு இருக்கிறார் முதலமைச்­சர்.." முரசொலி புகழாரம் !

தமிழ்­நாட்­டின் பள்­ளிக் கல்­வியை மேம்­ப­டுத்த எத்­த­னையோ திட்டங்­கள் தீட்­டி­யுள்­ளது தி.மு.க. அரசு.

* இல்­லம் தேடிக் கல்வி

* நான் முதல்­வன்

* பள்ளி மேலாண்­மைக் குழுக்­கள்

* பள்ளி செல்­லாப் பிள்­ளை­க­ளைக் கண்­ட­றிய செயலி

* சிறப்பு கவ­னம் தேவைப்­ப­டும் குழந்­தை­க­ளுக்கு சிறப்பு நிதி

* 1 முதல் 3 வகுப்பு வரை­யி­லான மாண­வர்க்கு எண்­ணும் எழுத்­தும் இயக்­கம்

* பயிற்­சித் தாள்­க­ளு­டன் கூடிய பயிற்­சிப் புத்­த­கங்­கள்

* 9 முதல் 12 வரை­யி­லான மாண­வர்க்கு வினா­டி­வினா போட்­டி­கள்

* மாண­வர் மனசு என்ற ஆலோ­ச­னைப் பெட்டி

* ஒவ்­வொரு பள்­ளி­யி­லும் நூல­கம்

* கணித ஆசி­ரி­யர்­க­ளுக்கு சிறப்­புப் பயிற்சி

* உயர் தொழில்நுட்ப ஆய்­வ­கங்­கள்

* வகுப்­பறை உற்று நோக்கு செயலி

* வெளிப்­ப­டை­யான ஆசி­ரி­யர் கலந்­தாய்வு

* முத்­த­மி­ழ­றி­ஞர் மொழி­பெ­யர்ப்­புத் திட்­டம்

* இளந்­த­ளிர் இலக்­கி­யத் திட்­டம்

* கல்­வித் தொலைக்­காட்சி

* வயது வந்­தோ­ருக்­கான கற்­போம் எழு­து­வோம் திட்­டம்

* கல்வி தொடர்­பான தர­வு­கள் கொண்ட கையேடு தரப்­பட்­டுள்­ளது.

* மின் ஆசி­ரி­யர் என்ற உயர்­தர டிஜிட்­டல் செயலி வழங்­கப்­பட்­டுள்­ளது.

* மாதி­ரிப்­பள்­ளி­கள்

* தகை­சால் பள்­ளி­கள்

* ஸ்மார்ட் வகுப்­ப­றை­கள்

*பேரா­சி­ரி­யர் அன்­ப­ழ­கனார் பள்ளி மேம்­பாட்­டுத் திட்­டம் ( 7500 கோடி மதிப்­பில்)

- இவை அனைத்­தும் சேர்ந்து மாபெ­ரும் கல்­விப் புரட்­சியை நிகழ்த்­திக் கொண்டு இருக்­கும் சூழ­லில் காலை உண­வுத் திட்­டம் என்­பது மிகப்­பெ­ரிய ஊக்க சக்­தி­யாக இருக்­கப் போகி­றது.

"‘மக்­க­ளோடு செல்’ என்றார் பேரறிஞர் அண்ணா.. இன்று மக்களோடு இருக்கிறார் முதலமைச்­சர்.." முரசொலி புகழாரம் !

மதிய உண­வுத் திட்­டத்­தைப் போலவே இன்­னும் சொன்­னால் அதை விடக் கூடு­த­லா­கவே காலை உண­வுத் திட்டத்­தின் பலன் என்­பது இருக்­கப் போகி­றது. காலை­யி­லும் உணவு தரு­கி­றார்­கள் என்­ப­தால் மாண­வர் சேர்க்கையானது அதி­க­ரிக்­கும். அதே­போல் மாண­வர்­க­ளின் வரு­கைப் பதி­வும் சீரா­க­வும் இருக்­கும்.

காலை உணவு தாம­தம், காலை­யில் சாப்­பி­ட­வில்லை, அத­னால் ஏற்­பட்ட மனச் சோர்வு கார­ண­மாக பள்­ளிக்கு வருகை தரும் பிள்ளை­க­ளின் எண்­ணிக்கை குறை­கி­றது. காலை­யில் உணவு தரு­கி­றோம் என்­றால் அந்த வரு­கைப் பதிவா­னது சீரா­க­வும் ஒழுங்கா­ன­தா­க­வும் இருக்­கும். இதன் மூலம் பள்­ளி­யின் வரு­கைப் பதி­வா­னது முறையான­தாக மாறி­வி­டும்.

"‘மக்­க­ளோடு செல்’ என்றார் பேரறிஞர் அண்ணா.. இன்று மக்களோடு இருக்கிறார் முதலமைச்­சர்.." முரசொலி புகழாரம் !

குழந்­தை­க­ளின் உடல் நலன் வலிமை பெறும். பல­வீ­ன­மான உடலா­னது கல்­வி­யைச் சரி­யாக ஏற்­றுக் கொள்ளாது. உள்­வாங்­கிக் கொள்ள இய­லாது. அந்­தக் குறை­பாடு நீங்­கும். உடல் வலிமையுடன் மன­வ­லி­மை­யும் சேரும். இது அந்­தக் குழந்தையின் குடும்­பத்­துக்­கும், பெற்­றோ­ருக்­கும் மன­நி­றை­வைத் தரும். அவர்கள் குடும்பமே நிம்­ம­தியை அடை­யும். வறுமை சூழ்ந்த குடும்­பங்­கள் தங்­கள் பிள்­ளை­க­ளை­யும் ஏதா­வது வேலைக்கு அனுப்பி வைக்கின்­றன. அதன் மூல­மாக அவர்­க­ளது உண­வுத் தேவை­யைத் தீர்த்­துக் கொள்­ளட்­டும் என்று நினைக்­கின்­றன. குடும்­பப் பிரச்­சி­னை­யின் ஆபத்­தான சுழற்சி இது. இந்த சுழற்சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப் போகி­றது காலை உண­வுத் திட்­டம்.

‘‘வீதி­யோ­ரத்­தில் வேலை­யற்­ற­து­கள், வேலை­யற்­ற­து­க­ளின் எண்ணத்­தில் விப­ரீ­தங்­கள், வேந்தே இது­தான் காலத்­தின் குறி!” என்று எழு­தி­னார் பேர­றி­ஞர் அண்ணா. அத்­த­கைய சூழல் திரா­விட மாடல் ஆட்­சி­யில் இருக்­கக் கூடாது என்று திட்­ட­மிட்­டுத் திட்டங்களைத் தீட்டி வரு­கி­றார் அண்­ணா­வின் தம்­பி­யாய் கலைஞ­ரின் உடன்பி­றப்­பாய் இருக்­கும் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்.

"‘மக்­க­ளோடு செல்’ என்றார் பேரறிஞர் அண்ணா.. இன்று மக்களோடு இருக்கிறார் முதலமைச்­சர்.." முரசொலி புகழாரம் !

பேர­றி­ஞர் பெருந்­த­கையே! கேள்­விக்­கு­றி­களை ஆச்­சர்­யக் குறி­க­ளாக மாற்­றும் ஆட்­சியை நீங்­கள் உருவாக்­கிய கழ­கம் தந்து கொண்டு இருக்­கி­றது. 'தாழ்ந்த தமி­ழ­கமே' என்று நீங்­கள் அழைத்­தீர்­கள். இன்­றைய தமி­ழ­கம் தலை­நி­மிர்ந்து கொண்டு இருக்­கி­றது. ‘வடக்கு வாழ்­கி­றது, தெற்கு தேய்­கி­றது’ என்று நீங்­கள் சொன்­னீர்­கள். தெற்கை இன்று வியந்து பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றது வடக்கு. ‘ஏழை­யின் சிரிப்­பில் இறை­வ­னைக் காண்போம்’ என்று சொன்­னீர்­கள். ஏழை, எளிய, ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளின் ஒளி­வி­ளக்­காக இன்­றைய அரசு செயல்­பட்டு வரு­கி­றது. ‘மக்­க­ளோடு செல்’ என்­றீர்­கள். மக்­க­ளோடு மக்­க­ளா­கத் தான் முதல­மைச்­சர் இருக்கிறார்.

அண்­ணாவே ஆள்­கி­றார்!

அண்­ணாவே சிறக்­கி­றார்!

அண்­ணாவே மகிழ்­கி­றார்!

banner

Related Stories

Related Stories