முரசொலி தலையங்கம்

மின் கட்டணம்-உண்மையான காரணங்கள்!-"குஜராத் போய் போராட்டம் நடத்துங்கள்".. பாஜகவுக்கு பாடம் எடுத்த முரசொலி!

‘தமிழ்­நாடு அள­வுக்கு கட்­ட­ணத்­தைக் குறை­யுங்­கள்’ என்று குஜ­ராத் பா.ஜ.க. தான் முழக்­கம் எழுப்ப வேண்­டும் என முரசொலி நாளேடு விமர்சித்துள்ளது.

மின் கட்டணம்-உண்மையான காரணங்கள்!-"குஜராத் போய் போராட்டம் நடத்துங்கள்".. பாஜகவுக்கு பாடம் எடுத்த முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 22, 2022) தலையங்கம் வருமாறு:

மின் கட்­ட­ணத்தை உயர்த்­தி­யாக வேண்­டிய உண்­மை­யான சூழ்­நி­லையை உரு­வாக்­கி­யது ஒன்­றிய அர­சும், கடந்த கால அ.தி.மு.க. ஆட்­சி­யும்­தான். இதனை மறைப்­ப­தற்­கா­க­வும் திசை திருப்­பு­வ­தற்­கா­க­வும் தான் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் போராட்­டம் அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள்.

முழு முதல் கார­ணம்:

ஒன்­றிய அர­சின் மின் அமைச்­ச­கம், பல்­வேறு நிபந்­த­னை­களை விதிக்­கி­றது. கூடு­தல் கடன் வாங்க வேண்­டு­மா­னால், கட்­ட­ணத் திருத்­தத்­து­டன் மின் துறை சீர்­தி­ருத்­தங்­கள் செய்­யப்­பட வேண்­டும் என்­ப­தைச் சொல்லி வரு­கி­றது. அவர்­க­ளது ஆத்­ம­நிர்­பார் திட்­டத்­தின் கீழ் ரூ.30 ஆயி­ரம் கோடி மதிப்­பி­லான கடனை அனு­ம­திக்­கும் போது, கட்­ட­ணத் திருத்­தம் செய்­யப்­பட வேண்­டும் என்­பது விதி­யாக உள்­ளது. கட்­ட­ணத் திருத்­தம் செய்­யா­த­தால் இந்­தக் கடன் நிறுத்தி வைக்­கப்­ப­டும் சூழல் உள்­ளது. மேலும் பல்­வேறு நிதி­களை பெறு­வ­தற்கு, மின் கட்­ட­ணத் திருத்­தம் என்­பதை கட்­டாய விதி­மு­றை­யாக ஒன்­றிய அரசு வைத்­துள்­ளது.

எனவே, மின் மாற்­றம் செய்­யா­விட்­டால் தமிழ்­நாடு மின் உற்­பத்தி பகிர்­மா­னக் கழ­கத்­துக்கு எந்­த­வி­த­மான கட­னும் கிடைக்­காது. இது ஒன்­றிய அர­சின் விதி­முறை மட்­டு­மல்ல, ரிசர்வ் வங்­கி­யும் இத­னைச் சொல்லி இருக்­கி­றது. ஒவ்­வொரு ஆண்­டும் நவம்­பர் 30 ஆம் தேதிக்­குள் மின் விநி­யோக நிறு­வ­னங்­கள் மின் கட்­டண மனு­வைத் தாக்­கல் செய்ய வேண்­டும். மின் கட்­ட­ணத்­தில் மாற்­றம் செய்­யாத தமிழ்­நாடு அர­சின் நிலையை இதற்­கான மின் சட்ட அமைப்­பு­கள் கண்­டித்­தும் வந்­தது. இது­தான் மின் கட்­ட­ணத்­துக்கு முழு முழு முதல் கார­ணம் ஆகும்.

இதை ஏதோ மின் துறை அமைச்­சர் செந்­தில்­பா­லாஜி மட்­டும் சொல்­ல­வில்லை. இதனை பா.ஜ.க.வின் மாநி­லத் துணைத் தலை­வ­ராக இருக்­கக் கூடிய திருப்­பதி நாரா­ய­ண­னும் தனது அறிக்­கை­யில் ஒப்­புக் கொண்­டுள்­ளார். ‘மின் கட்­டண உயர்­வுக்கு மத்­திய அரசு கார­ணமா?’ என்ற தலைப்­பில் அவ­ரது அறிக்­கையை ‘தின­ம­லர்’ ( (20.7.2022) நாளி­தழ் கட்­டம் கட்டி வெளி­யிட்­டுள்­ளது.

அதில் உள்ள வரி­கள்..."உற்­பத்தி செலவு, அதி­க­ரிப்­புக்கு ஏற்ப, சீரான இடை­வெ­ளி­யில் சிறிது சிறி­தாக மின் கட்­ட­ணத்தை உயர்த்­து­வ­தன் வாயி­லா­கவே, மின் வாரி­யத்தை நஷ்­டத்­தில் இருந்து காப்­பாற்ற முடி­யும் என்று மத்­திய அரசு வலி­யு­றுத்­து­கி­றது" என்­கி­றார் திருப்­பதி நாரா­ய­ணன். அவர் சொன்­னால் சரி, செந்­தில் பாலாஜி சொன்­னால் மட்­டும் தவறா?

மின் கட்டணம்-உண்மையான காரணங்கள்!-"குஜராத் போய் போராட்டம் நடத்துங்கள்".. பாஜகவுக்கு பாடம் எடுத்த முரசொலி!

இரண்­டா­வது கார­ணம்:

ஒன்­றிய அர­சின் மின் அமைச்­ச­கத்­தின் அறிக்­கை­யின் படி 10 சத­வி­கி­தம் வெளி­நாட்டு நிலக்­க­ரியை பயன்­ப­டுத்­து­வது கட்­டா­ய­மாக்­கப் பட்­டுள்­ளது. இத­னால் மின்­சா­ரத்­தின் சரா­சரி விலை அதி­க­ரிக்­கவே செய்­யும். வெளி­நாட்டு நிலக்­கரி என்று ஏன், எதற்­காக, யாருக்­கா­கச் சொல்­கி­றார்­கள் என்­பதை நாம் சொல்­லத் தேவை­யில்லை. அனை­வ­ரும் அறி­வார்­கள்.

மின் கட்டணம்-உண்மையான காரணங்கள்!-"குஜராத் போய் போராட்டம் நடத்துங்கள்".. பாஜகவுக்கு பாடம் எடுத்த முரசொலி!

மூன்­றா­வது கார­ணம்:

அ.தி.மு.க.வின் பத்­தாண்டு கால ஆட்­சி­யில் அத­ள­பா­தா­ளத்­தில் கவிழ்ந்து கிடந்­தது மின் துறை ஆகும். மின் மிகை மாநி­லம் என்று சும்மா சொல்­லிக் கொண்டு, அநி­யா­ய­வி­லைக்கு மின்­சா­ரத்தை விலை

கொடுத்­து­வாங்கி மின் துறையை கட­னில் மூழ்­கிய துறை­யாக மாற்­றி­விட்­டது அ.தி.மு.க. அரசு. புதிய மின் திட்­டங்­க­ளும் இல்லை.2011 ஆம் ஆண்டு மின் உற்­பத்தி பகிர்­மா­னக் கழ­கத்­துக்கு இருந்த கடன் என்­பது ரூ.43,493 கோடி ஆகும். அ.தி.மு.க. ஆட்­சியை விட்டு இறங்­கும் போது ரூ.1 லட்­சத்து 59 ஆயி­ரத்து, 823 கோடியை கட­னாக வைத்து விட்டு கம்பி நீட்­டி­னார்­கள். இது­தான் மிக­முக்­கி­ய­மான கார­ணம் ஆகும். வட்­டியே ரூ.16 ஆயி­ரம் கோடி கட்­டும் நிலை­மைக்­குக் கொண்டு வந்து விட்­டார்­கள். அதி­க­ரித்த மின்­சா­ரக் கடன் சுமையே இதற்கு அடிப்­ப­டை­யான கார­ணம்.கடந்த பத்து ஆண்­டு­க­ளில் மின்­சார வாரி­யத்­தின் வட்­டிச் சுமை ரூ.4,588 கோடி­யில் இருந்து ரூ.16,511 கோடி­யாக உயர்த்­தி­யது தான் அ.தி.மு.க. ஆட்­சி­யின் மகத்­தான சாத­னை­யா­கும்.

இப்­படி மூன்று முக்­கி­ய­மான கார­ணங்­க­ளுக்­கும் கார­ண­மா­னவை பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் தான். இதனை மக்­கள் உணர்ந்­து­வி­டக் கூடாது என்­ப­தற்­காக திசை திருப்­பவே போராட்­டம் அறி­விக்­கின்­றன அந்­தக் கட்­சி­கள்.

101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்­து­ப­வர்­க­ளுக்கு ஒரு மாதத்­துக்கு ரூபாய் 27.50 மட்­டுமே அதி­க­ரிக்­கி­றது. அனைத்து வீட்டு மின் நுகர்­வோ­ரும் 100 யூனிட் வரைக்­கும் விலை­யில்லா மின்­சா­ரத்தை பயன்­ப­டுத்­த­லாம். இதன் மூல­மாக 1 கோடி மின் நுகர்­வோர்­கள் பய­ன­டை­கி­றார்­கள். ஏழை எளிய மக்­க­ளுக்கு பாதிப்­பில்­லாத வகை­யில்­தான் மின் கட்­ட­ணம் திருத்­தம் செய்­யப்­பட்­டுள்­ளது.

மின் கட்டணம்-உண்மையான காரணங்கள்!-"குஜராத் போய் போராட்டம் நடத்துங்கள்".. பாஜகவுக்கு பாடம் எடுத்த முரசொலி!

தமி­ழக அர­சின் தொடர் முயற்­சி­க­ளின் கார­ண­மாக கடந்த நிதி­யாண்­டில் ரூ.2,200 கோடி சேமிப்பு எட்­டப்­பட்­டுள்­ளது. நுகர்­வோர் தங்­க­ளது கோரிக்­கை­க­ளைச் சொல்­வ­தற்கு 24 மணி நேர­மும் செயல்­ப­டும் ‘மின்­ன­கம்’ இயங்கி வரு­கி­றது. 1 லட­சம் இல­வச விவ­சாய மின் இணைப்­பு­கள் தரப்­பட்­டுள்­ளன. கடந்த ஓராண்டு காலத்­தில் மாநி­லம் முழு­வ­தும் 9.59 லட்­சம் பணி­கள் மின் துறை­யால் செய்­யப்­பட்­டுள்­ளன.

தமிழ்­நாட்­டில் உள்ள 42 சத­வி­கி­தம் மின் நுகர்­வோ­ருக்கு மின் கட்­ட­ணத்­தில் மாற்ற மில்லை என்­பதே உண்மை.குஜ­ராத் மாநி­லத்­தில் 100 யூனிட்­டுக்கு 515 ரூபாய் கட்­ட­ணம். தமிழ்­நாட்­டில் 100 யூனிட் வரை கட்­ட­ணம் இல்லை.குஜ­ராத்­தில் 200 யூனிட்­டுக்கு 1045 ரூபாய். தமிழ்­நாட்­டில் 225 ரூபாய் தான்.குஜ­ராத்­தில் 300 யூனிட்­டுக்கு 1595 ரூபாய். தமிழ்­நாட்­டில் 675 ரூபாய்.குஜ­ராத்­தில் 400 யூனிட்­டுக்கு 2190 ரூபாய். தமிழ்­நாட்­டில் 1125 ரூபாய்.

இதை வைத்­துப் பார்த்­தால் குஜ­ராத் பா.ஜ.க. தான் போராட்­டம் நடத்த வேண்­டும். ‘தமிழ்­நாடு அள­வுக்கு கட்­ட­ணத்­தைக் குறை­யுங்­கள்’ என்று குஜ­ராத் பா.ஜ.க. தான் முழக்­கம் எழுப்ப வேண்­டும். அண்­ணா­மலை அங்கு போய்­தான் முழக்­கம் எழுப்ப வேண்­டும்

banner

Related Stories

Related Stories