முரசொலி தலையங்கம்

“NEP - நவீன வர்ணாசிரமக் கல்வியை புகுத்த நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு..” : சாட்டை சுழற்றும் ‘முரசொலி’ !

கல்லூரிப் பாடங்கள் அனைத்தும் தமிழில் கற்கலாம், பொறியியல் கல்வியையும் தமிழில் படிக்கலாம் என்ற நிலையை தி.மு.க. அரசு உருவாக்கி உள்ளதே?

“NEP - நவீன வர்ணாசிரமக் கல்வியை புகுத்த நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு..” : சாட்டை சுழற்றும் ‘முரசொலி’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதிய கல்விக் கொள்கையின் மொழிக் கொள்கை என்னவென்றால் அது தாய்மொழியைத் தள்ளி வைப்பதாகவே இருக்கிறது.

செம்மொழிகளில் ஒன்றான தமிழ், ‘அடிப்படையிலான தமிழ் ' என்று மட்டும்தான் கூறப்பட்டுள்ளது. தமிழ் வழியிலான வகுப்புகள் பற்றி கூறப்படவில்லை. தமிழ்மொழி சிறப்பு பாடமாகவோ, முக்கிய பாடமாகவோ பள்ளி கல்லூரிகளில் கற்பிக்கப்படும் என்று கூறப்படவில்லை. தமிழ்மொழிக்கு கல்வி சிறப்பு வழங்கப்படவில்லை.

தாய்மொழி குறித்து புதிய கல்விக் கொள்கையில் 5 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பயிற்று மொழியாக வீட்டு மொழி (Home Language) / தாய்மொழி (Mother Tongue) / உள்ளூர் மொழி (LocalLanguage) / பிராந்திய மொழி (Regional Lan-guage) பயன்படுத்தப்படும் என்றும், விஞ்ஞான பாடத்திற்கு தரமான பாடப்புத்தகங்கள் வீட்டுமொழி (Home Language)) / தாய்மொழி (Mother Tongue)யில் வெளியிடப்படும் என்றும் இருக்கிறது. இவை கட்டாயமாக்கப்படவில்லை.

“NEP - நவீன வர்ணாசிரமக் கல்வியை புகுத்த நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு..” : சாட்டை சுழற்றும் ‘முரசொலி’ !

உயர் கல்வியில் தாய்மொழியும் பயிற்று மொழியாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவை அனைத்தும் புதிதல்ல. தமிழ்நாட்டில் அனைத்துப் பாடங்களையும் அனைத்து வகுப்புகளிலும் தமிழில் படிக்கலாம் என்று இருக்கிறதே!

கல்லூரிப் பாடங்கள் அனைத்தும் தமிழில் கற்கலாம், பொறியியல் கல்வியையும் தமிழில் படிக்கலாம் என்ற நிலையை தி.மு.க. அரசு உருவாக்கி உள்ளதே?

புதிய கல்விக் கொள்கையில் ஏராளமான பள்ளங்கள் உள்ளன. அதனை தாய்மொழிக் கல்வி என்ற ஒன்றை வைத்து மூட நினைக்கிறார்கள். அது சரியல்ல. அவர்கள் அறிமுகம் செய்ய நினைக்கும் புதிய கல்விக் கொள்கை அமலானால் இடை நிற்றல் என்பது அதிகரிக்கும்.

பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான ஒரு கல்வி முறை நம்மிடம் இருக்கிறது. எப்படியாவது பன்னிரெண்டாம் வகுப்பை முடித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் அனைவர்க்கும் சாதாரணமாக இருக்கும். பத்தாம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு, பன்னிரெண்டாம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு ஆகிய இரண்டைத் தாண்டி விட்டால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால் இந்த புதிய கல்விக் கொள்கைப்படி 3,5,8 ஆகிய வகுப்புகளில் படிப்பவர்களுக்கும் பொதுத்தேர்வு நடக்கும். அதில் தோற்றவர்கள், அத்தோடு தங்கள் பள்ளிக் கல்வியை முடித்துக் கொள்வார்கள்.

“NEP - நவீன வர்ணாசிரமக் கல்வியை புகுத்த நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு..” : சாட்டை சுழற்றும் ‘முரசொலி’ !

முற்றுப்புள்ளி வைத்து விட்டுப் போய் விடுவார்கள். இத்தகைய இடைநிற்றல் என்பது ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியரை கல்வி நிலையங்களில் இருந்து துரத்தும். சாதாரணமாக கல்வி ஆர்வம் என்பதே 8 ஆம் வகுப்புக்குப் பிறகுதான் அதிகமாக ஏற்படும். சின்ன வயதில் படிப்பில் ஆர்வமே இல்லாதவர்கள் 9 ஆம் வகுப்புக்கு பிறகு நன்றாக படிக்கத் தொடங்குவார்கள். பள்ளிகளில் சுமாராக படித்தவர்கள் கூட, கல்லூரிகளில் நன்கு படிக்கத் தொடங்குவார்கள். எனவே கல்வி என்பது ஒரே சீராக அமைவது இல்லை. ஏற்ற இறக்கத்தோடு தான் இருக்கும். இது மனம் தொடர்புடையது ஆகும்.

3,5,8,10,12 ஆகிய பொதுத்தேர்வுகள் படிப்படியாக மாணவர்களை தகுதி நீக்கம் செய்யும். அதற்கு மட்டுமே பயன்படப் போகிறது. நீட் தேர்வை வைத்து மருத்துவக் கல்விக் கனவை சிதைப்பதைப் போல, அனைத்து கலைக் கல்லூரிகளுக்கும் நுழைவுத்தேர்வு வைப்பதும் அனைவரையும் கல்வி நுழையங்களில் நுழைய விடாமல் தடை செய்யும்.

தேசிய நுழைவுத் தேர்வு (National Entrance Test) என்பது மாணவர்களை உள்ளே நுழையத் தடுக்கும் தடைக்கல் ஆகும். பட்டப்படிப்பிலிருந்து மாணவர்கள் எப்பொழுதுவேண்டுமானாலும் வெளியேறலாம்; மீண்டும் சேரலாம் (Multiple Exit and Entry Point) என்று கூறியிருப்பதும் பெரிய ஆபத்தானது. இது மாணவர்களை வெளியே அனுப்பும் தந்திரம் ஆகும். ஏற்கெனவே தமிழக அரசு SC/ST/BC/MBC மாணவர்களுக்கு சமூக அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. ஆனால் தகுதி அடிப்படையில் மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கை அறிவிக்கிறது. இது சமூக நீதிக்கு எதிரானதாகும்.

“NEP - நவீன வர்ணாசிரமக் கல்வியை புகுத்த நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு..” : சாட்டை சுழற்றும் ‘முரசொலி’ !

தொழில் கல்வி என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி ஐடிஐ, பாலிடெக்னிக், மாணவர்களுக்கு மண்பாண்டம் செய்தல், எலக்டிரிசியன், பிளம்பர், போன்ற படிப்புகளை கற்றுத் தருவதாகச் சொல்கிறார்கள். மாணவர்களை இடையில் நிறுத்தி இத்தகைய தொழில்களை நோக்கித் துரத்தும் நோக்கம் கொண்டவை இவை.

எத்தகைய தொழிலையும் நவீன முறையில் சொல்லித் தருவதில் தவறு இல்லை. படிப்பு வரவில்லை என்று சொல்லி தொழிலை புகுத்தப் பார்க்கிறார்கள். கல்வியை அனைவர்க்கும் வழங்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அனைவர்க்கும் கட்டாயக் கல்வியை, மேல் நிலைக் கல்வியை, கல்லூரிக் கல்வியை, உயர் கல்வியை வழங்க வேண்டும்.

படிப்புக்கு ஏற்ற வேலை என்பது அதன் பட்டம் தொடர்புடையதாக மட்டும் இப்போது இல்லை. அவரது படிப்புடன் சேர்த்து உற்பத்தி - தயாரிப்பு - ஆகியவை சார்ந்ததாகத்தான் இருக்கும். அனைத்து தொழில்கல்விகளும் அப்படித்தான் இருக்கிறது.

தொழிற்சாலைகளையே பார்க்காமல் யாரும் பொறியியல் படிப்பது இல்லை. மருத்துவமனையையே பார்க்காமல் யாரும் மருத்துவம் படிக்கவில்லை. தொழில் கல்வி என்பது கல்வியுடன் இணைந்ததாக இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அதில் இருந்த கல்வியை நீக்கிவிட்டு, ‘தொழிலை' மட்டும் பார் என்று உருவாக்க நினைக்கிறார்கள். ஒரு இளைஞன் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் போகலாம். ஆனால் அவனது பி.இ. பட்டம் அப்படியே தான் இருக்கும். அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வேலையை உருவாக்கித் தரும். இந்தப் பட்டத்தை வெட்ட நினைக்கிறார்கள்.

இத்தகைய தரக்கட்டுப்பாடு தான் சிலரை மட்டுமே படிக்க வைக்கவும், பலரையும் தடுக்கவும் வழிவகை செய்யப் போகிறது. இத்தகைய பாதிப்பு என்பது ஏதோ தி.மு.க. உறுப்பினர் வீட்டுப் பிள்ளைக்கு மட்டுமல்ல, பா.ஜ.க. உறுப்பினர் வீட்டுப் பிள்ளைக்கும் கல்வியை தடுப்பதாக அமையப் போகிறது. தீவிர இந்துத்துவாவாதியின் பிள்ளையும் இந்த தொல்லையை அனுபவிக்கத் தான் போகிறது.

“NEP - நவீன வர்ணாசிரமக் கல்வியை புகுத்த நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு..” : சாட்டை சுழற்றும் ‘முரசொலி’ !

நுழைவுத் தேர்வுகள் - பள்ளிகளில் அதிகப்படியான பொதுத்தேர்வுகள் - சமஸ்கிருதக் கல்வி - இந்திக்கு முக்கியத்துவம் - தொழில் கல்வி என்ற பெயரால் புகுத்தப்படும் கல்விப்பட்டம் துண்டிப்பு - ஆகியவை இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களுக்கு எதிரானவை ஆகும்.

ஆங்கிலத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் இந்தியை உட்காரவைப்பதும், இந்தியை உட்கார வைத்த இடத்தில் சமஸ்கிருதத்தை உட்கார வைப்பதும் தான் அவர்களது நோக்கம். ஆங்கிலத்தை அகற்றுவதற்கு ஒரு தந்திரம் தேவை. அதற்குத்தான் தாய்மொழி பம்மாத்து. தாய்மொழியில் படிக்கலாமே என்று சொல்லி ஆங்கிலத்தை அகற்றுவது இதன் சதித்திட்டம் ஆகும். ஆங்கிலேயர்களது கல்வி முறையை எதிர்த்தும், ஆங்கிலேயர்களை எதிர்த்தும் இப்போது தமிழக ஆளுநர் அதிகமாக குற்றச்சாட்டுகளை வைப்பதன் பின்னணியும் இதுதான்.

அனைவரையும் படிக்க வைத்து பள்ளிகளைத் திறந்தது தான் - பழைய வர்ணாசிரமக் கல்விக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை ஆகும். அத்தகைய புதியக் கல்விக் கொள்கையை குழிதோண்டிப் புதைத்து விட்டு நவீன வர்ணாசிரமக் கல்வியை புகுத்த நினைப்பதே இப்போது நடக்கிறது. இந்தக் கல்விக் கொள்கையானது அண்ணாமலைகளின் ஆதரவாளர் களுக்கும் எல்.முருகன் ஆதரவாளர்களுக்கும் சேர்த்துத்தான் எதிரானது ஆகும்.

banner

Related Stories

Related Stories