முரசொலி தலையங்கம்

"முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர்ந்தது உள்ளாட்சியிலும் நல்லாட்சி": முரசொலி புகழாரம்!

உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர்ந்து விட்டதன் அடையாளம் தான் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அடைந்த வெற்றியாகும்.

"முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர்ந்தது உள்ளாட்சியிலும்  நல்லாட்சி": முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (14-10-2021) வருமாறு:

உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர்ந்து விட்டதன் அடையாளம் தான் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அடைந்தவெற்றியாகும். அடுத்து நடக்க இருக்கிற நகராட்சி, மாநகராட்சித் தேர்தலிலும்கழகக் கூட்டணி மகத்தான வெற்றி பெறப் போகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் முழுமையாக வெற்றி பெறுவதன் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்படும் அனைத்துத் திட்டங்களும் மக்களுக்கு முழுமையாகப் போய்ச்சேரக் கூடிய நல்வாய்ப்பும் கிடைக்கும்.

உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயகத்தின் தொட்டில்கள். அந்தத் தொட்டில்களைக் காப்பாற்றும் பிரதிநிதிகள்தான் உள்ளாட்சிப் பிரதிநிதிகள். மக்களாட்சி மலர்ந்த இடம் முதலில் கிராமங்களில்தான். காஞ்சிபுரம் அருகே உள்ள உத்தரமேரூர் வட்டாரம் தான் ஜனநாயகத் தேர்தல் அமைப்பு முறை பிறந்ததொட்டிலாக வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. உத்திரமேரூர்கல்வெட்டு இதனைச் சொல்கிறது. யாரெல்லாம் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்களோ அவர்கள் அனைவர் பெயரையும் ஓலைச்சுவடியில் எழுதிக்குடத்தில் போடுவார்கள்.

அந்தக் குடத்தைக் குலுக்கி - ஒரு ஓலையை எடுப்பார்கள். அப்படி எடுக்கப்பட்டபெயரில் யாருடைய பெயர் பொறிக்கப்பட்டு இருந்ததோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இதுதான் குடவோலை முறை; குடத்தில் ஓலையைப்போட்டு எடுப்பது! இதனுடைய பரிணாம வளர்ச்சியாகத் தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரைக்கும் தேர்தலை நடத்தி வருகிறோம்.

எனவேதான், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் - அனைத்துக்கும் முக்கியமானவர்களாக நினைக்கப்படுகிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அரைகுறையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அவர்களது ஆட்சியே அரைகுறை தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அப்படி அரைகுறையாக நடத்தினாலும் நடத்தப்பட்ட இடத்தில் எல்லாம் பெரும்பாலும்வெற்றி பெற்றவர்கள் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியினரே.

கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றவர்கள் அனைவரையும் திருச்சிக்கு அழைத்துமாபெரும் மாநாட்டை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்று நடத்தினார்.அன்றைய அ.தி.மு.க. அரசாங்கம், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அழைத்துஅத்தகைய மாநாட்டை நடத்தி இருக்க வேண்டும். அவர்கள் நடத்தத் தவறினார்கள். ஆனால் அப்படி ஒரு மாநாட்டை தி.மு.க.தலைவர் அவர்கள் அன்று நடத்தினார். அப்போது உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு ஏராளமான அறிவுரைகளை வழங்கினார்.

கிராம சபைக் கூட்டங்களின் மூலமாக மக்களின் குறைகளை அறியுங்கள். அரசு குறிப்பிட்டுள்ளதை விட - அதிக அளவில் அந்தக் கூட்டங்களை நீங்கள் நடத்த வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களையும் அதில் பேச வையுங்கள்.குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் பங்கேற்றுப் பேசுவதற்குவாய்ப்பு அளியுங்கள். ஊராட்சிக்கு என்ன தேவை என்பதைக் கண்டறியுங்கள். உள்ளூர் மக்கள் கூறும் பிரச்சினைகள் குறித்து எவ்வித அச்சமும் இன்றி தீர்மானங்களை நிறைவேற்றுங்கள்.

மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உங்களிடம் இருந்தால் உடனே எடுங்கள். அப்படியில்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்தெரிவித்து நடவடிக்கை எடுங்கள்.

ஊராட்சிகளில், ஒன்றியங்களில், மாவட்டப் பஞ்சாயத்துகளில் மக்களோடுமக்களாக இணைந்து சென்று பணியாற்றுங்கள்.

மக்கள் குறைகளைத் தெரிவித்தால் - அந்த இடத்திற்குச் சென்று அதுபற்றி விசாரித்து தீர்க்க முன் வாருங்கள். அப்போது அங்குள்ள குடியிருப்பு வாசிகள்,சமூக நல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோருடன் சென்று பாருங்கள்.

பல்வேறு நலத் திட்டங்களுக்கு பய னாளிகளைத் தேர்வு செய்வது கிராமசபைக் கூட்டத்தில் மட்டுமே நடக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

பெண்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நதிகள்,நீர்நிலைகள், ஏரி,கண்மாய்கள், வாய்க்கால்கள் போன்றவற்றைப் பராமரிக்க நடவடிக்கை எடுங்கள்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ‘நூலகங்கள்' அமைக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நூலகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

தெரு விளக்குகள், பொதுக் கழிப்பிடங்கள், வீடுகளில் கழிப்பிடங்கள்கட்டுதல் போன்றவற்றில் அக்கறை செலுத்துங்கள்.

முக்கிய சந்திப்புகளில் - மக்கள் நடமாட்டம் உள்ள சாலைகளில் சி.சி.டி.வி.கேமிராக்கள் வையுங்கள்.

டெண்டர்களில் முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.

பஞ்சாயத்திற்குள் நடைபெறும் குற்ற நிகழ்வுகளை உடனுக்குடன்காவல்துறைக்குத் தெரிவித்து- மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில்ஆர்வத்துடன் செயல்படுங்கள்.

உங்கள் பஞ்சாயத்துகளில், ஒன்றியங்களில், மாவட்டப் பஞ்சாயத்துகளில் சட்டவிரோதச் செயல்களுக்கோ, ஊழலுக்கோ, எவ்விதமுறைகேடுகளுக்கோ அறவே இடமளிக்காதீர்கள்.

வெளிப்படைத் தன்மை ஒவ்வொரு தி.மு.க. ஞ்சாயத்திலும், ஒன்றியத்திலும், மாவட்ட பஞ்சாயத்திலும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்.

மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றி - திராவிடமுன்னேற்றக் கழகத்திற்கு நற்பெயரை ஈட்டித் தாருங்கள் - என்று அன்று தி.மு.க. தலைவராக இருந்து மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டார். அன்று செயல்படாத ஒரு அ.தி.மு.க. அரசு இருந்தது. இன்று செயல்படும் இடத்துக்கு, உத்தரவிடும் இடத்துக்கு, உதவிகள் செய்யும் இடத்துக்கு மு.க.ஸ்டாலின் அவர்களே வந்துவிட்டார்கள்.

உள்ளாட்சியில் ஊழலாட்சி நடத்தி முடித்தவர் அ.தி.மு.க. காலத்து அமைச்சராக இருந்த வேலுமணி. அவரது சொந்தப் பெயரே மறைந்து, ஊழல்மணியாகக் காட்சி அளித்தார். துடைப்பம் முதல் பினாயில் வரைக்கும் ஊழல் செய்து பெருத்துவிட்டார். இன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். இந்த ஊழல்ராஜ்யம்தான்,அ.தி.மு.க.வைநான்காவது இடத்துக்கு இன்று தள்ளி இருக்கிறது.140 மாவட்டக் கவுன்சிலர்பதவியில் 138 இடங்களை தி.மு.க. கூட்டணிகைப்பற்றியது. 2 இடம்தான் அ.தி.மு.க. பெற்றுள்ளது. வாய்நீளம் காட்டி வந்த பலகட்சிகள் மண்ணைக் கவ்வி உள்ளன. காங்கிரஸை அடுத்து, விடுதலைச்சிறுத்தைகளை அடுத்து, நான்காவது இடத்துக்கு அ.தி.மு.க. தள்ளப்பட்டுள்ளதற்குக் காரணம், அவர்களது முதுகெலும்பற்ற ஊழல் அராஜக அரசியல்தான். இன்னும் எத்தனையாவது இடத்துக்குத் தள்ளப்படப் போகிறார்கள் என்பது போகப்போகத் தான் தெரியும்.

உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்தியவர் என்று பெயர் எடுத்தவர் காலம் தொடங்கிஇருக்கிறது. ‘ஒரு நல்ல ஜனநாயகம் என்றால் அது கடைக்கோடி மனிதனின்குரலைக் கேட்பதாக இருக்க வேண்டும்' என்று மகாத்மா காந்தி அவர்கள்சொன்னார்கள். அதை உணர்ந்த முதலமைச்சர் தலைமையில் உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர்வதைக் காண இருக்கிறோம்!

banner

Related Stories

Related Stories