முரசொலி தலையங்கம்

“முகத்தைக் காட்டாமலேயே தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க அதிகாரத்தை அனுபவிக்கத் துடிப்பதா?” : முரசொலி!

பா.ஜ.க.வின் முகத்தைக் காட்டாமல் தேர்தலைச் சந்தித்து பா.ஜ.க. அதிகாரத்தை மட்டும் அனுபவிக்கத் துடிப்பது அரசியல் அராஜகம் அல்லவா?

“முகத்தைக் காட்டாமலேயே தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க அதிகாரத்தை அனுபவிக்கத் துடிப்பதா?” : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுவையில் மீண்டும் சில புரட்டுகளை பா.ஜ.க. செய்யத் தொடங்கி இருக்கிறது. நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றது. ஆனாலும் இன்றுவரை அமைச்சரவை முழுமையாக பதவி ஏற்கவில்லை. முதலமைச்சராக ரங்கசாமி மட்டும் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க. செயல்படவிடாமல் முடக்கி வைக்கவும், அல்லது பா.ஜ.க.வே ஆட்சி அமைக்கவுமான மறைமுகச் சூழல்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு 6 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்தநிலையில் மூன்று உறுப்பினர்களை நியமன உறுப்பினர்களாக நியமித்துக் கொண்டது பா.ஜ.க. இதனால் அவர்களுக்கு பலம் 9 ஆகிவிட்டது.

மேலும், சுயேட்சை உறுப்பினர்களை தங்கள் கட்சியின் ஆதரவாளர்களாக மாற்றும் முயற்சியிலும் இறங்கி மூன்று உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதன்மூலமாக எதிர்கூட்டணிக்கு அல்ல, சொந்தக்கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் என்.ஆர்.காங்கிரசுக்கு நெருக்கடி தரவே பா.ஜ.க. இந்தக்களேபரங்களில் ஈடுபட்டு வருவது பச்சையாகத் தெரிகிறது.

“புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. முயற்சிப்பதா? மக்கள் தீர்ப்பை மாசுபடுத்த வேண்டாம்” என்று கழகப் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். “புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து - அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது.

“முகத்தைக் காட்டாமலேயே தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க அதிகாரத்தை அனுபவிக்கத் துடிப்பதா?” : முரசொலி!

“30 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டதுதான் புதுச்சேரி சட்டமன்றம்” எனத் தெளிவாக இருக்கின்ற நிலையில் - சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் 33-ஆக உயர்த்தி - மக்கள் அளித்த தீர்ப்பை மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுச்சேரி சட்டமன்றத்திற்கு இன்னும் பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. புதிய சட்டமன்ற உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குள்ளாக தங்கள் கூட்டணியின் தலைவராக இருக்கும் முதலமைச்சரைக்கூட கலந்து பேசாமல் இப்படியொரு நியமனத்தை ஒன்றிய அரசு செய்து பா.ஜ.க.வின் எண்ணிக்கையை 9-ஆக உயர்த்தியிருப்பது எதேச்சதிகாரமானது. புதிதாக அமைந்திருக்கும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையை இந்த நியமன எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வைத்துச் சீர்குலைத்து - கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. செய்யும் முயற்சியே அது என்ற சந்தேகம் புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எனவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்த மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், நியமன எம்.எல்.ஏ.க்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஆரம்பத்திலேயே ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு - புதுச்சேரி மக்களின் நலனிலும் - மாநிலத்தில் நிலவும் கொரோனா பரவலைத் தடுத்திட வேண்டிய நடவடிக்கைகளிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கவனம் செலுத்திட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“முகத்தைக் காட்டாமலேயே தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க அதிகாரத்தை அனுபவிக்கத் துடிப்பதா?” : முரசொலி!

புதுவையில் எத்தகைய புரட்டுகள் நடக்கத் தொடங்கி இருக்கிறது என்பதை இந்த அறிக்கை மூலமாக அறியலாம். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே பா.ஜ.க., புதுவையில் பல்வேறு புரட்டுகளைச் செய்து வந்தது. கடந்த முறை ஆட்சியைக் கைப்பற்றிய நாராயணசாமி அரசுக்கு எதிராக துணை நிலை ஆளுநராக கிரண்பேடியை இறக்கிவிட்டு கொல்லைப்புற ஆட்சியை நடத்தினார்கள். இப்போது தங்களுக்கு முழு அதிகாரம் இல்லாத நிலையிலும் அத்தகைய ஆட்சியை நடத்தப் பார்க்கிறார்கள்.

புதுச்சேரியில் கடந்த 2016ம் நடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியை அமைத்தது. மொத்தமுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் 15 இடங்களையும், தி.மு.க. 2 இடங்களையும் பெற்றிருந்தன. முதல்வர் நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் வெடித்தது. இன்னொரு பக்கத்தில் பலரையும் கட்சி மாற வைத்தார்கள். இத்தகைய கட்சி மாறிகளைக் கொண்டு கட்சியைப் பலப்படுத்திவிட்டதாகக் காட்டி தேர்தலைச் சந்தித்தார்கள்.

பா.ஜ.க - 30 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. 2.4 வாக்கு சதவீதம். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஒரு சதவீத வாக்குகளையே பெற்றிருந்தது இக்கட்சி. ஆனால் புதுச்சேரி சட்டசபைக்கு கடந்த முறை 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நேரடியாக நியமித்தது. 3 பேரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற பாணியை இம்முறையும் பின்பற்றப் பார்க்கிறார்கள்.

“முகத்தைக் காட்டாமலேயே தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க அதிகாரத்தை அனுபவிக்கத் துடிப்பதா?” : முரசொலி!

தமிழகத்தில் பா.ஜ.க.வின் பெயரையோ... பிரதமர் பெயரையோ அ.தி.மு.க.வினர் பிரச்சாரத்தில் பயன்படுத்தவில்லை. இதேபோல்தான் புதுவையிலும் நடந்து கொண்டார்கள். பா.ஜ.க. போட்டியிடும் தொகுதியில் கூட அம்மாவின் ஆசி பெற்ற சின்னம் தாமரை என்றுதான் விளம்பரம் செய்தார்களே தவிர... பிரதமர் மோடி ஆசி பெற்ற சின்னம் என்று போடவில்லை. அதைப்போன்று தான் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பா.ஜ.க. போட்டியிடும் ஒரு தொகுதிக்குக் கூட சென்று பிரச்சாரம் செய்யவில்லை. தாமரைக்கு அவர் ஓட்டு கேட்கவில்லை.

அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன், தன்னுடன் ஓட்டுகேட்க பா.ஜ.க.காரர்கள் எவரும் வரக்கூடாது என்று சொன்னார். இப்படி பா.ஜ.க.வின் முகத்தைக் காட்டாமல் தேர்தலைச் சந்தித்து பா.ஜ.க. அதிகாரத்தை மட்டும் அனுபவிக்கத் துடிப்பது அரசியல் அராஜகம் அல்லவா?

இன்றைய தினம் டெல்லியின் நிலையைப் பாருங்கள். ஒரு தன்னாட்சித்தகுதி பெற்ற டெல்லியில் மக்களாட்சியை முடக்கும் விதமாக, ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். சிறிய மாநிலங்களை ஒடுக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கொள்கை. புதுவையை தனது புரட்டுகளின் மூலமாக சிதைக்க நினைக்கிறது பா.ஜ.க. அதுதான் ஆபத்தானது!

banner

Related Stories

Related Stories