முரசொலி தலையங்கம்

“புள்ளி விபரப் புலிகளின் வாக்கு சதவிகித வாக்கு வாதங்கள்” - முரசொலி தலையங்கம் தக்க பதிலடி!

தமிழக தேர்தலில் பதிவான வாக்கு விகிதத்தை வைத்து வாக்குகள் குறைவாகவே பதிவாகி இருப்பதாக குறிப்பிட்டு முன்வைக்கப்படும் வாதங்களுக்கு முரசொலி தலையங்கம் பதிலடி கொடுத்துள்ளது.

“புள்ளி விபரப் புலிகளின் வாக்கு சதவிகித வாக்கு வாதங்கள்” - முரசொலி தலையங்கம் தக்க பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வாக்கு சதவிகிதத்தை வைத்து வாக்கு வாதங்களை தொடங்கி சிலர் நடத்தி வருகிறார்கள். அது அவர்களது உரிமை. அதில் நாம் தலையிடவில்லை!

கடந்த தேர்தலை விட கூடுதலாக 22 லட்சம் பேர்வாக்களித்துள்ளார்கள். இதனை கவனிக்க வேண்டும்.வாக்காளர் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது. வாக்களித்தவர்எண்ணிக்கையும் அதிகமாகித்தான் இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பதிவானவாக்குகள் இவை:டு சட்டமன்றத் தேர்தலை வி டக் குறைவானது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு இதனைக் குறைவானது என்று சொல்கிறார்கள்.

கடந்த தேர்தலில் பதிவான சதவிகிதம் 74.24 ஆகும். இதனை வைத்து மட்டும் அப்படி முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால் கடந்த தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கையை விட இந்தத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை அதிகம் ஆகும். 2016 தேர்தலில் தமிழக வாக்காளர் எண்ணிக்கை 5.82 கோடி ஆகும். இதில் பதிவான வாக்குகள் 4.35 கோடிப் பேர். இந்த தேர்தலில் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.29 கோடிப் பேர். இதில் 4.58 கோடிப் பேர் வாக்களித்துள்ளார்கள்.

கடந்த தேர்தலைவிட கூடுதலாக 22 லட்சம் பேர்வாக்களித்துள்ளார்கள். இதனை கவனிக்க வேண்டும். வாக்காளர் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது. வாக்களித்தவர் எண்ணிக்கையும் அதிகமாகித்தான் இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பதிவானவாக்குகள் இவை:

“புள்ளி விபரப் புலிகளின் வாக்கு சதவிகித வாக்கு வாதங்கள்” - முரசொலி தலையங்கம் தக்க பதிலடி!

1967 தேர்தலில் 76.57

1971 தேர்தலில் 72.10

1977 தேர்தலில் 61.58

1980 தேர்தலில் 65.42

1984 தேர்தலில் 73.47

1989 தேர்தலில் 69.69

1991 தேர்தலில் 63.84

1996 தேர்தலில் 66.95

2001 தேர்தலில் 59.07

2006 தேர்தலில் 70.82

2011 தேர்தலில் 78.01

2016 தேர்தலில் 74.24

2021 தேர்தலில் 72.78 இவைதான் இதுவரை நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள்.

65 சதவிகிதம் முதல் 78 சதவிகிதம் வரையிலான வாக்குப்பதிவுகள் இதுவரை நடந்துள்ளது. இதனை தேர்தல் முடிவுகளை வைத்து கணக்கிட்டால் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கருத்துரு உருப்பெற்றுள்ளது. எனவே, புள்ளிவிபரப் புலிகள் இதில் இருந்து ஒற்றை முடிவுக்கு வர இயலாது. ஆட்சிக்கு எதிரான சிந்தனை இருந்தால்தான் அதிகமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பார்கள், அப்படி நடக்கவில்லை என்று அ.தி.மு.க. - பா.ஜ.க. ஆதரவு வாதங்கள் வைக்கப்படுகிறது.

அது முற்றிலும் முடிவானது அல்ல. அதனை ஒட்டுமொத்தமாக பொதுமைப்படுத்தப்பட்ட தமிழகம் முழுமைக்குமான வாக்கு சதவிகிதத்தை வைத்துக் கணிக்கக் கூடாது. தொகுதிவாரியாக வைத்துப் பார்க்க வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தில் 15 தொகுதிகள் நீங்கலாக அனைத்துத் தொகுதியிலும் மிக அதிக அளவில் வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவான தொகுதிகளின் எண்ணிக்கை 37.70 முதல் 80 சதவிகிதத்துக்குள் வாக்குகள் பதிவான தொகுதிகள் எண்ணிக்கை 131.60 முதல் 70 வரையிலான சதவிகிதத்துக்குள் வாக்குகள் பதிவான தொகுதிகள் எண்ணிக்கை 49.

இதனை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் அதிக அளவில்தான் வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்கு சதவிகிதத்தில் மொத்தமாக கூட்டும் போதும் குறையக் காரணம் குறிப்பிட்ட 15 தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்ததுதான். அதிலும் குறிப்பாக சென்னையில் வாக்கு சதவிகிதம் குறைந்தது. அதையும் மிக மிகக் குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 60.99 சதவிகிதமாக சென்னைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இம்முறை 59.06 சதவிகிதமாக அது குறைந்துள்ளது. அதாவது கடந்த தேர்தலைவிட 1.93 சதவிகிதம் குறைவு. கடந்த தேர்தலில் 24 லட்சத்து 24 ஆயிரத்து 396 பேர் வாக்களித்தனர்.

அதில் முதலாவது திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு அலை. இவரை முதலமைச்சராக ஆக்க வேண்டும். இவர் முதல்வர் ஆகவேண்டும் என்பது!இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலில் வீசிய மோடி எதிர்ப்பு அலை. அதுநாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் வீசியது.மூன்றாவது பழனிசாமி என்பவர் ஆளுமைத் திறனற்றவர், அவருக்குவாக்களிப்பது அவமானம் என்ற எதிர்ப்பு அலை!இந்த மூன்றும் இணைந்துதான் இந்தத் தேர்தலில் வாக்கு சதவிகிதமாகஉருப்பெற்று நிற்கிறது.ள் வீசியதை அனைத்து ஆய்வாளர்களும் சொன்னார்கள். அனைத்து க ணிப்புகளும் சொன்னது.

அதில் முதலாவது திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு அலை. இவரை முதலமைச்சராக ஆக்க வேண்டும். இவர் முதல்வர் ஆக வேண்டும் என்பது! இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலில் வீசிய மோடி எதிர்ப்பு அலை. அது நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் வீசியது. மூன்றாவது பழனிசாமி என்பவர் ஆளுமைத் திறனற்றவர், அவருக்கு வாக்களிப்பது அவமானம் என்ற எதிர்ப்பு அலை! இந்த மூன்றும் இணைந்துதான் இந்தத் தேர்தலில் வாக்கு சதவிகிதமாக உருப்பெற்று நிற்கிறது.

அனைத்துக் கருத்துக்கணிப்புகளும் இன்று மிக முக்கியமான பிரச்சினையாக எதைப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு விலைவாசி, வேலைவாய்ப்பின்மை என்றே சொன்னது. ஆளும் கட்சி ஆதரவாளர்களால் தயாரிக்கப்பட்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் கூட இந்தக் கேள்விக்கான பதில் இதுவாகத்தான் இருந்தது. அனைத்துக் கருத்துக் கணிப்புகளிலும் தி.மு.க.வுக்கு எதற்காக வாக்களிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு மு.க. ஸ்டாலினின் தலைமைக்காக என்று சொன்னார்கள். இவை தான் வாக்குகளாக விழுந்துள்ளது. இதனை அவர்கள் உணரும் வரை எதையாவது சொல்லிக் கொண்டு போகட்டும்!

banner

Related Stories

Related Stories