முரசொலி தலையங்கம்

இந்திய மாநிலங்களுக்கொல்லாம் வழி காட்டும் கேரள மாநிலம்! - முரசொலி தலையங்கம்!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டில் கடந்த 20 நாட்களாக தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்து வருகிறது. இதுவரை குடியுரிமை சட்டம் உள்ளிட்ட மற்ற பதிவேடுகளுக்கு இந்திய மாநிலங்களின் 11 முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஒருவரான கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், மற்ற மாநிலங்களூக்கு வழிகாட்டும் முன்னோடியாக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்தி ‘குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்’ என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்து ஆளும்கட்சி - எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றி இருக்கிறது.

இப்போது நாட்டில் நிலவும் கலவரமான - நெருக்கடியான சூழ்நிலையில், மத்திய அரசின் இச்சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதில் முதல் மாநிலம் என்பதும், இந்திய ஜனநாயக சரித்திரத்தில் தனிச் சிறப்பான பதிவாக இடம் பெற்றிருக்கிறது. அழைன் சிரிப்பாம் கேரள மாநிலம், இந்திய மாநிலங்களுக்கொல்லாம் வழி காட்டும் ஒளி விளக்காகி இருகிறது.

அதனால் தான் தமிழக மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்திடும் வகையில் தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள மாதிரியைப் பின்பற்றி தீர்மானம் நிறைவேற்றுக என்று தனி நபர் தீர்மானம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் என்று முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.

banner