முரசொலி தலையங்கம்

இந்திய ராணுவத்தின் மாண்பும், கண்ணியமும் குறையலாமா? - முரசொலி தலையங்கம்!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத் கடந்த வாரம் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.

அப்போது, “தேவையற்ற வழியில் மக்களை வழிநடத்திச் செல்பவர்கள் தலைவர்கள் அல்ல, வன்முறையை நோக்கி நகர்த்திச் செல்வது தலைவருக்கு உகந்தது அல்ல” என தெரிவித்தார். இதுபோல அவர் தெரிவித்திருப்பது 70 ஆண்டுகளில் நிகழாத ஒரு நிகழ்வாகும்.

ராவத் அரசியல் தலைவரைப் போல, அதுவும் பா.ஜ.க தலைவர்களை போலக் கருத்துக் கூறியிருப்பது எந்தச் சமயத்தில் என்று பார்க்கிறபோது, நம்மால் வருத்தப்படாமல் இருக்க முடியாது. ராவத் டிசம்பர் 31-ம் தேதி பதவி ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில் ராவத் முப்படைக்குமான தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்படுவார் என்று செய்திகள் கசிகின்றன. இந்த சூழ்நிலையில் டிசம்பர் 26-ம் தேதி ராவத் பேசியற்கு என்ன பொருள்?

முதல் வரிசையில் முதல் அணியில் உள்ள பதவியில் இருக்கிற இந்தியாவின் தளபதி பிபின் ராவத் அப்படிப் பேசியிருக்கக்கூடாது; இத்துறையைச் சார்ந்தவர்கள் நடுநிலையோடு இருக்கவேண்டும். ஒரு பக்கம் சார்ந்து இருக்கக்கூடாது என்று விதிகள் இருக்கின்றன என்று முன்னாள் கடற்படை தளபதி இராமதாஸ் கூறுகிறார்.

ஆகவே ராவத் இராணுவ விதிகளுக்கு முரணாக நடந்து இருக்கிறார். அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக பேசியிருக்கிறார். இதுகடைசியில் எங்கே போய் முடியும்?. இந்தியாவின் சிறப்புக்குரிய முதல்படை இராணுவம், அதன் மாண்பும், கண்ணியமும் குறையலாமா? என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.

banner