முரசொலி தலையங்கம்

இந்திய உணர்வும், சீன உறவும்! - முரசொலி தலையங்கம்  

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சீன அதிபருடன், சீனாவின் ஆக்கிரமிப்புகள் பேசப்படுமா? அருணாச்சல பிரதேசம் அலசப்படுமா? திபத்- தலாய்லாமா விவகாரம் எழுப்பப்படுமா? பாகிஸ்தானின் மறைமுக, நேரடி அச்சுறுத்தல்கள் உணர்த்தப்படுமா? ஊடுருவல்கள் இனி நிறுத்தப்படுமா? நதிநீர் பிரச்னைகளில் தனது மெளனத்தை சீனா கலைக்குமா? என அனைத்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் பேசப்படுமா என்றும், இவை அனைத்தையும் பேசித்தான் தீர்க்க முடியும் எனவும் முரசொலி கூறியுள்ளது.

பேசியே தீர்ப்போம் என்ற அடிப்படையில் இருநாட்டு அரசுத் தலைவர்களும் ஒரு மேசைக்கு வந்திருப்பதே வரலாற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. அரசியல் மரபை நோக்கிய பயணத்தில் இப்பேச்சுவார்த்தை குறிக்கப்படும், அந்தக் குறிப்பில் தமிழகம்- மாமல்லபுரம் இடம்பெறும்

banner