முரசொலி தலையங்கம்

“சூரியனை பார்த்துக் குரைக்கும் ஜென்மங்களே அறிந்து கொள்வீர்” - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களின் வரலாறு தெரியாத புல்லுருவிகளும், மோடி, அமித்ஷாவுக்கு அடிமையாகச் செயல்பட்டு பதவியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் எடுபிடிகள் கூட்டமும் தி.மு.கழகம் மிரட்டப்பட்டு விட்டதாக பிதற்றித் திரிகிறார்கள்” என தலையங்கம் தீட்டியுள்ளது முரசொலி.

மேலும், “போராட்டம் என்பது ஒரு குறிக்கோளை எட்டவேண்டும் என்பதற்காக அறிவிக்கப்படுவது. அந்த குறிக்கோளுக்கு பங்கம் ஏற்படாது என உறுதிமொழி அளிக்கப்படும்போது போராட்டத்தை ஒத்திவைப்பதோ கைவிடும்போதோ தவறாகாது.

இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் உறுதியளித்தார்; கருத்துத் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்தார். இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது பெருந்தன்மை மட்டுமல்ல; தி.மு.க-வின் மாண்பை விளக்கும் செயலும் ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளது முரசொலி.

banner