முரசொலி தலையங்கம்

‘ஒரே நாடு ஒரே மீன்வளக் கொள்கை’ என மீனவர்களின் வாழ்வை கொத்தித் திண்ணும் பா.ஜ.க அரசு! - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மீன்பிடித் தொழிலில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்கப்படுத்தி இறக்கி விடுவதில் ஆர்வம் காட்டும் பா.ஜ.க அரசு, மீன் பிடிக்கும் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சாமானிய மீனவர்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை என முரசொலி சாடியுள்ளது.

இதுபோதாது என மீனவர்களின் வாழ்வை மேலும் கொத்திப் புண்ணாக்கிட புதியதொரு மசோதாவை கொண்டு வந்திருக்கிறது, இந்த மசோதாவின் மூலமாக மாநில அரசுகளுக்கு இருந்த பொறுப்பும், உரிமையும் முற்றிலுமாக பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“ஒரே நாடு ஒரே மீன்வளக் கொள்கை” எனப் பொருள்படும் இந்த மசோதா இந்திய நாட்டின் பழம்பெரும் பன்முகத் தன்மையை பாழ்படுத்தும் பத்தாம்பசலி எண்ணத்தின் வெளிப்பாடு எனவும் முரசொலி நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது.

banner