மு.க.ஸ்டாலின்

கல்வி நிதி முதல் நீட் வரை... தமிழ்நாட்டுக்கு வரும் மோடிக்கு NDA-வின் துரோக பட்டியலோடு முதலமைச்சர் கேள்வி!

தேர்தல் சீசனில் தமிழ்நாட்டை எட்டிப் பார்க்கும் பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

கல்வி நிதி முதல் நீட் வரை... தமிழ்நாட்டுக்கு வரும் மோடிக்கு NDA-வின் துரோக பட்டியலோடு முதலமைச்சர் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டை பற்றியும் தமிழர்களை பற்றியும் பெருமையாக பேசுவார். ஆனால் அதே வாய் வட மாநிலங்களில் தமிழ்நாடு மீது வெறுப்பை விதைக்கும் வகையில் பேசும். அதோடு தமிழர்கள் மீதும் வன்மத்தை கொட்டும். அதோடு தமிழர்கள் மீது ஒரவஞ்சனையோடு ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

கல்வி நிதி, வரி, மெட்ரோ நிதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தமிழ்நாட்டை பாஜக புறக்கணித்து வருகிறது. இதற்கான குரலை தமிழ்நாடு இந்தியா கூட்டணி கட்சிகள் எழுப்பினால், அவர்கள் மீதும் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. உலகில் பழமையான மொழியான தமிழ் மொழியையும் பாஜக புறக்கணித்து வருகிறது.

இப்படி தொடர்ந்து தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்யும் பிரதமர் மோடி, ஒவ்வொரு முறையும் அரசியல் ரீதியாக தமிழ்நாடு வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி இன்று மதுராந்தகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

கல்வி நிதி முதல் நீட் வரை... தமிழ்நாட்டுக்கு வரும் மோடிக்கு NDA-வின் துரோக பட்டியலோடு முதலமைச்சர் கேள்வி!

இந்த நிலையில், பாஜக கூட்டணியான NDA, தமிழ்நாட்டுக்கு செய்த துரோகப் பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கேள்விகள் வருமாறு :-

Tamil Nadu counts the betrayals of NDA.

தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே...

* தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய ரூ.3,458 கோடி சமக்ரசிக்ஷா கல்வி நிதி எப்போது வரும்?

* தொகுதி மறுவரையரையில் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?

* பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?

கல்வி நிதி முதல் நீட் வரை... தமிழ்நாட்டுக்கு வரும் மோடிக்கு NDA-வின் துரோக பட்டியலோடு முதலமைச்சர் கேள்வி!

* தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?

* "MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் VB G RAM G கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?

* பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?

* இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?

* ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?

* கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?

* ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?

தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!

banner

Related Stories

Related Stories